எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Sunday, July 22, 2018

ஓம்

ஓம் வேறு ப்ரம்மம் வேறல்ல என்றே உபநிடதங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஓங்காரத்திலுள்ள மூன்று அக்ஷரங்களும் சூக்கும நிலையில் நின்று காணப்படும் இந்தப் பிரபஞ்சத்தில் செயல்படுகின்றன. அதாவது முத்துச் சரம் நூலால் கோர்க்கப்பட்டிருந்தாலும், அந்த நூலானது வெளியாது இருப்பதைப் போலவும், தயிரில் நெய் போலவும், எள்ளில் எண்ணெய் போலவும் சூக்கும நிலையில் நின்று இப்பிரபஞ்சத்தை இயக்குகிறது. ஓங்காரமே ப்ரம்மம். ஓங்காரமே ஆத்மா. பஞ்சாட்சரம், ராம நாமத்தைப் போல ப்ரணவமும் ஜெபிப்பதற்கு உகந்த, மிக உயர்ந்த மந்திரமாகும். உச்சரிக்க துவங்கும் போது மூலாதாரத்தில் துவங்கி ம் என்று முடிக்கும் போது உச்சியில் சகஸ்ராரத்தில் சென்று முடிவதை உணரலாம். அதற்கு இடையே அந்த ஒலியானது ஆறு ஆதாரங்களையும் கடந்து செல்கிறது என்பது சூக்குமம். அ, உ, ம என்ற மூன்றைத் தவிர நான்காவதாக மகாரத்தின் மேல் உள்ள புள்ளியே லிங்கமாகும். அதுவே தோற்றத்தையும், ஒடுக்கத்தையும் விளக்குவதாகும். இதை ஏன் ப்ரணவம் என்று சொல்கிறோம் ? என்றால், காரணம் இருக்கிறது. அதாவது, ''ப்ராணாந் ஸர்வாந் பரமாத்மரி பாரணாமயதி இதி ப்ரணவஹ.'' பாராணிகளை பரமாத்மாவிடம் நிலைக்கச் செய்யும் வல்லமை பெற்றிருப்பதால் ப்ரணவம் எனப்படுகிறது.
அ என்றால் சூரியன். உ என்றால் சந்திரன். ம் என்றால் அக்கினி. ஓம் என்பது அனைத்து பிரகாசமுள்ள வஸ்துகளின் சொரூபம்.
அ என்றால் ஸ்தூலம். உ என்றால் சூக்குமம். ம் என்றால் காரணம். ஓம் என்பது மூன்று சரீரங்களையும் குறிப்பதாகும்.
அ என்றால் ஸ்திரி. உ என்றால் பூமான்(புருஷன்). ம் என்றால் நபும்ஸகன். ஓம் என்பது லிங்க ஸமஷ்ட்டி.
அ என்றால் ருக் வேதம். உ என்றால் யஜூர் வேதம். ம் என்றால் ஸாம வேதம். ஓம் என்பதின் விரிவே ஸர்வ வேதங்களும்.
அ என்றால் காயத்ரீ சந்தஸ். உ என்றால் திரிஷ்ட்டுஸ்சந்தஸ். ம் என்றால் ஜகதீஸ் சந்தஸ். ஓம் என்பது எல்லா சந்தஸ்களையும்(விருத்தங்கள்) குறிக்கிறது.
அ என்றால் கார்ஹ பத்யாக்னி. உ என்றால் தக்ஷிணாக்கினி. ம் என்றால் ஆ ஹவ னீயாக்னி. ஓம் என்பது ஸர்வ அக்னி ஹோத்ராதி கர்மங்களையும் குறிக்கிறது.
அ என்றால் ஹரஸ்வம். உ என்றால் தீர்க்கம். ம் என்றால் ப்லுதம். ஓம் என்பது மூன்று வித ஸ்வரங்களின் கூட்டம்.
அ என்றால் பாதம். உ என்றால் நாபி. ம் என்றால் சிரசு. ஓம் என்பது ஸர்வ அவயங்களோடு கூடிய தேகத்தை குறிப்பதாகும்.
அ என்றால் புத்தி. உ என்றால் மனம். ம் என்றால் அஹங்காரம். ஓம் என்பது ஸர்வ அந்தகரண ஸமஷ்ட்டி.
அ என்றால் ரஜோ குணம். உ என்றால் ஸத்வ குணம். ம் என்றால் தமோ குணம். ஓம் என்பது சகலவிதமான குணபேதங்களுக்கு ஆதாரமாக நிற்கும் மாயையைக் குறிப்பதாகும்.
அ என்றால் சிவப்பு. உ என்றால் கபில வர்ணம். ம் என்றால் கறுப்பு. ஓம் என்பது ஸர்வ வர்ணங்களின் பேதம்.
அ என்றால் பூரகம். உ என்றால் கும்பகம். ம் என்றால் ரேசகம். ஓம் என்பது ப்ராணாயாமாப்பியாஸமான யோகத்தைக் குறிப்பது.
அ என்றால் நாதம். உ என்றால் பிந்து. ம் என்றால் கலை. ஓம் என்பது நாத, பிந்து, கலைகளின் ஸமஷ்ட்டி.
Image may contain: 1 personஅ என்றால் கிரியா சக்தி. உ என்றால் இச்சா சக்தி. ம் என்றால் ஞான சக்தி. ஓம் என்பது மூன்று சக்திகளின் பூரண சொரூபம்(ப்ராஹமணீ வைஷ்ட்ணவீ ரௌத்ரீ).
அ என்றால் பிரம்மா. உ என்றால் விஷ்ணு. ம் என்றால் ருத்திரன். ஓம் என்றால் மும்மூர்தந்திகளின் சொரூபம்.
அ என்றால் வஸூக்கள். உ என்றால் ருத்திரர்கள். ம் என்றால் ஆதித்தியர்கள். ஓம் என்றால் ஸர்வ தேவகண கூட்டங்களை குறிப்பதே.
அ என்றால் சென்ற காலம். உ என்றால் நிகழ் காலம். ம் என்றால் எதிர்காலம். ஓம் என்பது முக்காலங்களையும் குறிக்கிறது.
அ என்றால் ஜாக்கிரதை. உ என்றால் சொப்னம். ம் என்றால் ஸுஷுப்தி. ஓம் என்பது அவஸ்தைகளோடு கூடிய ஜீவாத்மனைக் குறிப்பது.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அகாரம் என்றால் எட்டு, உகாரம் என்றால் இரண்டு. சித்தர்கள் கூறும் இரகசியக் குறியீடான எட்டிரண்டு என்பது பிரணவத்தின் பகுதியே. ஆக ஓம் என்ற மந்திரமானது ஸர்வ நாமரூப கர்மங்களினால் எல்லாப் பிரபஞ்சத்தையும் சேர்த்துக் காட்டுகிறது. ஓம் என்று சொன்ன மாத்திரத்தில், சொல்பவனைப் ப்ரம்ஹத்திடம் கொண்டு சேர்க்கும் வல்லமை பெற்றது ஓம் என்னும் ப்ரணவமாகும். ஓம் என்பது மஹா புனிதமான அக்ஷரம். அதாவது அழியாப் பொருள். எனவே ஓங்காரத்தை தியானிப்பதை விட சுலபமான உபாயம் வேறு இல்லை. எனவேதான் இவ்வளவு விளக்கங்களும் தரப்பட்டன. உண்மையை உணர்ந்து தியனிப்பவர்கள் எளிதில் மேன்மை அடையலாம். இது சத்தியம்.

குணங்குடி மஸ்தான் சாகிபு

மகான் குணங்குடி மஸ்தான் சாகிபு ஜீவசமாதிக்கு உதவி தேவை
குணங்குடி மஸ்தான் சாகிபு ஜீவசமாதி கட்டிடத்தில் சில பூச்சு வேலை நடைபெற வேண்டியுள்ளது. அதற்கு தேவையான பொருட்களை வழங்குமாறு அங்கிருந்த ஹாஜியார் எங்கள் குழுவினரிடம் கேட்டுக் கொண்டார்கள்.பணமாக தர வேண்டாம் ஐயா பொருளாக கொடுத்தால் நன்று என்று கூறியுள்ளார் .குணங்குடி மஸ்தான் சாகிபு ஜீவசமாதி கோவிலுக்கு இயன்ற உதவிகளை செய்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .இந்த பதிவை பகிர்ந்து கொண்டு தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.ஜீவசமாதி கோயில் கட்டிட வேலைக்கு பங்களிப்பது திருக்கோயில் கட்டுவதற்கு சமமாகும். உங்கள் வம்சத்திற்கு மகான்களின் அருள் கிடைக்கும் .ஆசீர்வாதம் கிடைக்கும் உங்கள் கர்மவினைகளை அவர்கள் எளிதாக கழித்து விட வழிவகுப்பார். ஜோதிட ரீதியாக பார்த்தோம் என்றால் இது ஒரு ராகு கேது பரிகாரமாகும். குணங்குடி மஸ்தான் சாகிபு ஜீவசமாதி கோயில் ஹாஜியார் செல்லிடபேசி எண் 9566150784 அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசி வேண்டுவன செய்யுங்கள் அன்பர்களே சகோதர சகோதரிகளே .குணங்குடி மஸ்தான் சாகிபு குணங்குடி மஸ்தான் சாகிபு (1792 - 1838: சென்னை) ஒரு இசுலாம் அறிஞர். இவர் பல இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ் சித்த மரபினரில் ஒருவராகவும் கருதப்படுகிறார் குணங்குடி மஸ்தான் சாகிபு இராமநாதபுரம் தொண்டிக்கு வடமேற்கில் பத்து மைல் தொலைவிலுள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் 1792 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் 'சுல்தான் அப்துல் காதிர்' என்பதாகும். இளமையிலேயே குர்ஆன் மற்றும் இசுலாமிய சமய சாத்திரங்களைக் கற்றுணர்ந்து 'ஆலிம்' (சமயக் கல்வி அறிஞர்) என்னும் பட்டம் பெற்றார்.

பற்றறுத்த உள்ளத்துடனும், தந்தையின் ஆசியுடனும் தம்முடைய பதினேழாவது வயதில் ஞானபூமியாகத் திகழ்ந்த கீழக்கரை சென்று அங்கு 'தைக்காசாஹிபு' என்று அழைக்கப்பட்ட ஷைகு அப்துல் காதிரிலெப்பை ஆலிம் ஞானியிடம் மாணாக்கராக இருந்து சமய ஞானத்தையும், தவ வழிமுறைகளையும் கற்றுத் தெளிந்தார். 1813 ஆம் ஆண்டில் அவர் திரிசிரபுரம் சென்று அங்கே மௌலவி ஷாம் சாஹிப் என்பவரிடம் தீட்சை பெற்று ஞானயோக நெறியில் ஆழ்ந்தார். பின்னர் சிக்கந்தர் மலையென அழைக்கப்படும் திருப்பரங்குன்றம் சென்று அங்கே நாற்பது நாட்கள் 'கல்வத்' எனப்படும் யோக நிட்டையில் ஆழ்ந்தார். பின்னர் அறந்தாங்கிக்கு அருகிலுள்ள கலகம் என்ற ஊரில் ஆறு மாதங்களும், தொண்டியில் அவருடைய தாய்மாமனாரின் ஊரான வாழைத்தோப்பில் நான்கு மாதங்களும் தங்கி நிட்டை புரிந்தார். இவ்வாறே சதுரகிரி, புறாமலை, நாகமலை, ஆனைமலை போன்ற மலைகளிலும், காடுகளிலும், நதிக்கரைகளிலும் தங்கித் தவம் புரிந்தார்.

இறைகாதலால் முற்றும் கவரப்பட்டவராகவும், தெய்வீகக் காதல் போதையில் வெறியேறியவராகவும் அவர் இருந்ததால் உலகநடை நீங்கி பித்தநடை கொண்டார். குப்பைமேடுகள் கூட அவர் குடியிருக்கும் இடங்களாகின. அவருடைய பித்தநடையையும் அற்புத சித்துகளையும் கண்ட மக்கள் அவரை 'மஸ்தான்' என அழைக்கலாயினர். அப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. (மஸ்த் என்ற பாரசீகச் சொல்லுக்கு போதைவெறி என்று பொருள். இறைகாதல் போதையில் வெறி பிடித்த ஞானியரை 'மஸ்தான்' என அழைப்பது மரபு)

ஏழு ஆண்டுகள் இவ்வாறிருந்து, பின்னர் வடநாடு சென்று பலருக்கு ஞானோபதேசம் செய்தார். இறுதியில் சென்னையை அடைந்து இராயபுரத்தில் பாவாலெப்பை என்பவருக்கு உரிமையான, முட்புதர்களும் மூங்கிற் காடும் சப்பாத்திக்கள்ளியும் மண்டிக் கிடந்த இடத்தில் தங்கலாயினார். பாவாலெப்பை குணங்குடியாரின் மகிமை உணர்ந்து அவ்விடத்திலேயே அவருக்கு ஆச்சிரமம் அமைத்துக் கொடுத்தார். 

இங்கே வாழ்ந்தபோது யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்து யோகநிட்டையில் ஆழ்ந்திருந்தார். சில வேளைகளில் தாம் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடிக்கொண்டு ஊர்வலமாகச் செல்வதுமுண்டாம். அப்படிச் செல்லும்போது ஒருமுறை அங்கப்பநாயக்கன் தெருவிலுள்ள 'மஸ்ஜிதே மஃமூர்' என்ற பள்ளிவாசலுக்கும் வந்து சென்றதாகக் கூறுவர்.
குணங்குடியாரின் துறவு நிலையில் ஐயுற்ற சிலர் அவரது அரிய சித்துக்களைக் கண்ட பின்னர் அவரை மதித்துப் போற்றினர். அவரிடம் தீட்சை பெற்று பக்குவமடைந்தனர். அவ்வாறு தீட்சை பெற்றவர்களுள் அக்காலத்தில் சென்னையிலிருந்த ஆற்காடு நவாபும் ஒருவர். அவருடைய சீடர்களாக இசுலாமியர் மட்டுமன்றி இந்துக்களும் இருந்தனர். அவர்களில் மகாவித்துவான் சரவணப்பெருமாள் ஐயர், கோவளம் சபாபதி முதலியார் ஆகியோர் மிகப் பிரதானமானவர்களாக இருந்தனர்.
மஸ்தான் சாகிபு 1838 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1254, ஜமாதுல் அவ்வல் 14ம் நாள் திங்கட்கிழமை வைகறை நேரம்) இவ்வுலக வாழ்வைத் துறந்தபோது அவருக்கு வயது நாற்பத்து ஏழு. அவர் தங்கியிருந்த இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரை மக்கள் தொண்டியார் என்று அழைத்து வந்ததால் அவரிருந்த இடம் தொண்டியார்பேட்டை ஆயிற்று.
படைப்புகள் தொகு
* நிராமயக்கண்ணி (100 பாடல்கள்) 
* மனோன்மணிக்கண்ணி (100 பாடல்கள்) 
* அகத்தீசர் சதகம் (100 பாடல்கள்) 
* நந்தீசர் சதகம் (51 பாடல்கள்) 
* ஆனந்தக் களிப்பு (38 பாடல்கள்)
-நன்றி,பிரேம்சந்த் நம்பிராஐன்

முகமது இபுராஹிம் என்ற மகான்.கருணையானந்த பூபதி அவர்களின் எழுபத்து ஒன்பதாவது குருபூஜையானது இன்று கமுதி- கோட்டைமேட்டில் உள்ள அன்னவருது சமாதி அடக்கத்தலத்தில் இனிதே நடந்தேறியது .இம்மகானின் நாமகரணத்தையே கலைஞரின் தந்தையார் கருணாநிதி என்று சூட்டிவைத்தார், தமிழில் பெரும் பாண்டித்தியம் கொண்ட இம்மகான் "வேதாந்த பாஸ்கரன்" "ஞானக் களஞ்சியம்" "ஞானயோக ரகசியம்" முதலிய அரிய தமிழ் நூல்களை அருளிச் சென்றமை யோகியர்க்கு கிடைத்த பாக்கியம் ...

ஆஷா தசமி விரதம்


Image may contain: indoor
பலரும் தங்களுடைய தொழிலையும், அலுவலகப் பணியையும் பல்வேறு காரணங்களுக்காக இழந்து அல்லல்படுகின்றனர். மேலும் சொத்துக்களை இழந்தோர் அவற்றை மீண்டும் பெற இயலாவண்ணம் கோர்ட்டிற்கும், வீட்டிற்குமாகப் பல வருடங்களாக அலைந்து வேதனைப்படுகின்றனர்.. உறவினர்கள், நண்பர்களின் சூழ்ச்சி, சதி வேலை, பில்லி, சூன்யம், ஏவல் காரணமாகவும் சொத்து, சுகம், பதவி, அந்தஸ்து, வியாபாரம், கௌரவம் போன்ற அனைத்தையும் இழந்து வெளியில் தலைகாட்டவே முடியாத வண்ணம் வேதனைப்படுவோரும் பலர் உண்டு.. இதற்கு என் செய்வது? எப்படி நிவர்த்தி பெறுவது? ஆசா தசமி விரத பூஜை இதற்குரிய நல்ல வழியைத் தரும்..

ஸ்ரீகருட பகவான் ஒரு முறை சிறிதே கர்வம் கொண்ட போது, அவர் மூலமாக பிரபஞ்சத்திற்கே பாடம் புகட்டும் வண்ணம் கருட வாகனமின்றி திருமால் தன்னந்தனியாகவே லோக சஞ்சாரம் செய்யலானார். இதனால் ஸ்ரீகருடபகவான் தனது தவறினை உணர்ந்து மனம் வருந்தி, பிராயசித்தமாகப் பல்வேறு பூஜைகளையும், இறை தரிசனங்களையும், விரதங்களையும் தீர்த்த நீராடல்களையும் மேற்கொண்டு இறுதியில் பரம்பொருளாம் ஸ்ரீபெருமாளுக்கே வாகனமாய் அமையும் பெரும் பேற்றினை மீண்டும் பெற்றார்.. இதற்காக ஸ்ரீகருடபகவான் கடைபிடித்த விரதங்களுள் ஒன்றே ஆசாதசமி விரதமாகும்.. ஆசாதசமி விரதமென்பது மிகவும் சிறப்பான தசமி தினத்தின் மஹிமையை உணர்த்துகின்றது.. எத்தனையோ இறை லீலைகளும், பல மகான்களுக்கான உத்தம நிலைகளும் இத்தினத்தில் தான் கூடியுள்ளன. ஸ்ரீகருட பகவான் தமக்குரிய எட்டுவிதமான நாகாபரணங்களை ஸ்ரீஜகன்னாதப் பெருமாளிடமிருந்து பெற்ற திருநாளே ஆசாதசமி விரதத் திருநாளாம்.


ஆதிசேஷன் முதல் குளிகன் ஈறாக எட்டு நாகங்களையும் எட்டுவித ஆபரணங்களாக ஸ்ரீஜகன்னாதப் பெருமாளிடம் இருந்து பெற்று பலமலைத் தலங்களிலும் வழிபட்டு கருடவாகனப் பெருமான் தாம் பல உத்தம தெய்வ நிலைகளைப் பெற்ற தினமே ஆசாதசமி விரத நாளாகும்.. எனவே, இந்நாளில் மேற்கண்ட எளிமையான விரதத்தைக் கடைபிடிப்போருக்குத் தாங்கள் இழந்த பதவி, செல்வம் சொத்து போன்றவற்றைத் தார்மீகமான முறையில் மீண்டும் பெறுவதற்கு ஸ்ரீகருட பகவானின் அருளும், ஸ்ரீபரமபத நாதனாகிய ஸ்ரீமன்நாராயணப் பெருமாளின் திருவருளும் நன்கு கூடி வரும். இந்த பத்து நாட்களிலும் வைராக்கியத்துடன் மேற்குறித்த மலைத் தலங்களில் தினந்தோறும் கிரிவலம் வருவோருக்குக் காரிய சித்தி கைகூடுவதுடன் கை மேல் பலனும் வரப் பெறுவர். ஆசாதசமி விரதம் நிறைவு பெறும் அன்றாவது நிச்சயமாக கிரிவலம் வருதல் சிறப்புடையதாகும்.. more on link : http://kulaluravuthiagi.org/Jul1999.htm

-----------------------------------------------------------------------------------------------------------

Image may contain: outdoorதிருநெல்வேலியில் இருந்து 40 km தொலைவில் நான்குநேரி அருகில் உள்ள செண்பகராமநல்லூர் என்னும் இடத்தில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ஜெகநாத பெருமாள் கோயிலில் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. மூலவரும் உற்சவரும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஜெகநாத பெருமாள்.உற்சவர் மஹாலஷ்மி விக்ரகமும் உள்ளது.மஹாலக்ஷ்மி அவ்வளவு அழகு.ஷேத்ர தாயார் ஸ்ரீ செண்பகவல்லி தாயார்.கேரள மன்னன் உதய மார்த்தாண்ட மன்னனால் கட்டப்பட்ட கோயில்.அவர் பூரி ஜெகநாதரை தரிசித்து அவர் நினைவாக இந்த பெருமாளை எழ பண்ணி இருக்கிறார்.அர்ச்சகர் சொன்ன முக்கிய தகவல் செண்பகவல்லி தாயாருக்கு ஸ்ரீ சக்கரமும் ஜெகநாத பெருமாளுக்கு சுதர்சன சக்கரமும் பிரதிஷ்டை செய்து இருப்பதால் இங்கு வந்து வேண்டுவோருக்கு அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுவதாக சொன்னார். விஷ்வக்ஷேனர் ,ராமானுஜர் மற்றும் கருடாழ்வார் சன்னதி உள்ளது.தாயார் சன்னதி தனி பிரகாரத்தில் உள்ளது.மிக பெரிய கோயில்.பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.வயரிங் எல்லாம் சிதைந்து காணப்படுகிறது.எல்லாவற்றையும் மீறி கோயில் மிகுந்த அதிர்வலைகள் உள்ளன.fb post : https://www.facebook.com/vdhanushkodi.das