எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Thursday, November 4, 2010

முட்டாளாக இருந்தால் மகிழ்ச்சி நம்மைத் தாலாட்டும்!

                                           நன்றி : ஓம் மாத இதழ் 
முட்டாளாக இருந்தால் மகிழ்ச்சி நம்மைத் தாலாட்டும்!
தவயோகி ஞானதேவபாரதி சுவாமிகள்
யப்படாதீர்கள். உங்களை முட்டாளாக்க யாம் முனையவில்லை. நீங்கள் முட்டாளாக இருந்து கெட்டால் அதற்காக வருத்தப்படுவோம்.

முட்டாளாக வாழ்வது என்பது வேறு; முட்டாளாக மாறுவது என்பது வேறு. முட்டாளாக வாழ்பவன் தனது முட்டாள்தனத்தை உணர முடியாது. ஆனால், முட்டாளாக மாறியவனுக்கு தனது செயல் நன்கு தெரியும்.

ஆனால், கடைசியில் முட்டாள் முட்டாளா கவே திரும்பி வருவான். ஆனால், அறிவாளி முட்டாளாகச் சில நாட்கள் வாழ்வான்; திரும்பி வரும்போது அறிவாளியாகவே வருவான். அறிவாளி செய்யும் முட்டாள்தனம் தான் மெய்ஞ்ஞான விரிவுரை ஆகும்.


ஒரு சித்தர் அழகாகக் கூறுகிறார்:

"விட்டகுறை வந்ததென்றால் தானே எய்தும்
விதியிலார்க்கு எத்தனைதான் உரைத்தாலும்
பட்டு மனம் மாய்தல் அல்லால் வேறொன்றில்லை
பக்தியிலார்க்கு உரைத்து மனம் பாழ்போக்காதே.'


இதைப் படித்த பிறகும் தத்துவ உபதேசம் செய்கிறோம் என்றால் எவ்வளவு பெரிய முட்டாளாக மாறிவிட்டோம் பாருங்கள். ஞானம் என்பது ஊட்டப்படும் அறிவு அல்ல. அது தானாகவே உதயமாக வேண்டிய ஒப்பற்ற ஊற்று. ஆனாலும் எங்கள் நாதஸ் வரக் கச்சேரி தொடர்ந்து நடக்கும்.

கல்யாண வீட்டில் எத்தனை பேர் மேள தாளத்தை ரசிக்கிறார்கள்? அது மங்கள ஓசை; அவ்வளவுதான். அதுபோல் முட்டாள் கள் சாம்ராஜ்ஜியத்தில் எங்கள் ஆன்மிகம், கல்யாண வீட்டில் ஒரு மேளக் கச்சேரி நடப்பது போலாகும்.

இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ முட்டாள்தனத்தை அதிகமாக அறிமுகப் படுத்தி, உலகத்தை மாயையால் இயக்குகிறான் மதிநிறைந்த இறைவன். நன்கு ஆராய்ந்து பார்த்தால் இது புலப்படும்.

ஒருகாலத்தில் யாம் இருந்த மகிழ்ச்சியை எண்ணிப் பார்க்கிறோம். அந்த மகிழ்வு இன்று எங்கோ ஓடி மறைந்து விட்டது. எமக்கும் மகிழ்ச்சிக்கும் எட்ட முடியாத இடைவெளி விழுந்து விட்டது. என்ன காரணம்?

சின்ன வயதுப் பருவத்தில்- அறிவே விழிப்படையாத காலத்தில் எமக்கு இருந்த மகிழ்ச்சியும் ஆரவாரமும் எல்லையற்றவையாக இருந்தன. காரணம், முட்டாள்தனம் இருந்ததால் எம்மால் மகிழ்வை அனுபவிக்க முடிந்தது. உதாரணமாக, ஆசிரியர் பாடம் நடத்தும்போதே அவருக்குத் தெரியாமல் சுவர் ஏறிக் குதித்து அடுத்திருந்த மாந்தோப் பிற்குள் நுழைவோம்.

அந்த உரிமையாளருக்குத் தெரியாமல் உச்சி மரத்தில் ஏறி ஏதோ ஒரு கிளையில் அணில் சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைத்திருக்கும் மாங்காயைப் பறித்துச் சாப்பிடுவதில் எவ்வளவு ஆனந்தம்! கிளை முறிந்து விழுந்தால் நமது உடம்பைக் கூட்டித்தான் அள்ள வேண்டும். அந்த மாங்காயின் மதிப்பு என்ன- நமது உயிரின் மதிப்பு என்ன என்று அளவி டத் தெரியாத முட்டாளாக இருந்தபோது இருந்த இன்பம் இப்போது இல்லையே!

முட்டாள்தனம் உள்ள மனிதர்களே இன்பத்தைத் தேடி அலைவார்கள். இதைத் தெள்ளத் தெளிவாக அறிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம். எல்லாக் குழந்தைகளின் முகத்திலும் மகிழ்ச்சி உள்ளது. ஏன்? அந்தக் குழந்தைகளிடம் அறியாமை என்ற முட்டாள் தனம் இருப்பதே காரணம்.

எல்லா ஞானிகள், சித்தர்கள் முகத்திலும் விசனக்குறி- அதாவது கப்பல் வைத்துள்ள முதலாளிக்குக் கப்பல் மூழ்கிவிட்டால் முகம் எப்படி சோகக் குறியாக இருக்குமோ, அப்படியே ஞானிகள் முகத்திலும் தெரியும். காரணம் முட்டாள்தனம் இல்லை. அறிவு மட்டுமே வாழ்வதால் சோக பாவனையில் மூழ்கி விடுவார்கள்.

"சோகம்' என்றாலே, "நானே பிரம்மம்' என்று பொருள். எனவே, பழகிப் போன மகிழ்ச்சிகள் சற்று விலகிப் போகக் கூடாது என்பதற்காகவே ஞானிகள் சில நிமிடங்கள் மட்டும் முட்டாள்தனத்தை வரவழைத்துக் கொண்டு குழந்தையாக மாறிச் சிரிப்பார்கள்.

நமக்குள்ளே வாழும் முட்டாள்தனத்தை நமது உடல் ஒவ்வொரு நிமிடமும் காட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கும். மனிதன் எப்போதெல்லாம் வாய்விட்டுச் சிரிக்கிறானோ அப்போதெல்லாம் அவன் ஒரு முட்டாள் என்பதைத் தனக்குத்தானே அங்கீகரித்துக் கொள்கிறான் எனப் பொருள்.

அதனால்தான், முட்டாள்தனம் நிறைந்த கோமாளித்தனமாக ஒருவன் நடித்தால் நமக்குச் சிரிப்பு வருகிறது. முட்டாள்களின் பலமான ஆயுதம் சிரிப்புதான். முட்டாள்தனமான உலகில் முட்டாளாக வாழாமல்- அதாவது சிரிக்காமல் வாழ்ந்தால் சீக்கிரமே நோயாளியாகி விடுவார்கள்.

இயற்கையும், "முட்டாளாக வாழ்!' என போதிக்கிறது. இதையே மருத்துவர்களும் "வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்' எனக் கூறி, முடிந்தவரை தினசரி இரண்டு மணி நேரமாவது முட்டாளாக மாறிச் சிரிக்கப் பழகுங்கள் எனக் கூறுகிறார் கள்.

5 comments:

 1. அன்பர் புலிப்பாணி அடிமை, (சித்தர் பைத்தியம்) அவர்களே ! உங்களிடம் உரையாட ஆசைபடுகிறேன். தாங்கள் எனது மின்னஞ்சலுக்கு உங்கள் மின்னஞ்சலை தெரிவியுங்கள்.

  எனது மின்னஞ்சல்:san198820@gmail.com

  ReplyDelete
 2. அய்யா தேவன் அவர்களே ! ,
  மிக்க நன்றி , அவசியம் தங்களை தொடர்புகொள்வேன் !!!
  இப்படிக்கு ,
  புலிப்பாணி சித்தர் அடிமை
  சித்தர் பைத்தியம் .

  ReplyDelete
 3. மிக மிக அருமையான மற்றும் எளிமையான ஒரு கட்டுரை.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 4. (முட்டாள்கள் சாம்ராஜ்ஜியத்தில் எங்கள் ஆன்மிகம், கல்யாண வீட்டில் ஒரு மேளக் கச்சேரி நடப்பது போலாகும்.)100% சதவீதம் உண்மை. மிக அருமையான விளக்கங்கள்.

  ReplyDelete
 5. இதை படித்த பின் நான் சிரிப்பதா சோகமாக இருப்பதா என்று தெரியவில்லை...

  ReplyDelete