எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, November 15, 2010

மரணத்தை தடுக்கலாம் !மறுவாழ்வு பெறலாம்!

நன்றி : ஓம் மாத இதழ்
மரணத்தை  தடுக்கலாம்! மறுவாழ்வு பெறலாம்!
தவயோகி ஞானதேவபாரதி சுவாமிகள்


னிதன் வாழ்கிறான்; அனுபவிக்கிறான் என்பது எல்லாமே, "நமது மனம் வாழ்கிறது; அனுபவிக்கிறது' என்ற உண்மையே தவிர வேறில்லை.

இந்த உலகியல் அனுபவம் எல்லாவற்றையும் மனமே நடத்துகிறது. மரணம் என்பதும் மனதிற்கே நடக்கிறது. மனம் நமது ஐம்புலன் வழியாக உலகியலைத் துய்த்து வாழும் ஐம்புலக் கருவிகளின் பயன்பாடு அற்றுப் போகும்போது, மனமே மரணத்தின் வாசலுக்கு அழைத்துச் செல்லும் கொலைகாரனாக மாறிவிடும்.

குறிப்பாக, கண்கள் என்ற புலன் வழியாகவே மனம் அதிகமான செயல் திட்டத்தை வரையும். கண்களின் பார்வை குறைந்த பிறகு மனதின் பார்வை மாறிவிடும்.

பிறகு, வாய் என்ற புலன் வழியாகச் சுவைத்து மகிழ்வதில் சுகித்து வாழும் அந்தப் புலனும் கெட்டு, பல் விழுந்து பொக்கை வாயானதும், "வாய்ப்பு போனதே' என மனம் நொந்து, செயற்கைப் பல் மூலம் செயல் திட்டம் வரையும். அதுவும் கெட்டபின் நாக்கு மனதின் விருப்பப்படி செயல்பட மறுக் கும்போது, மனம் சரும உணர்ச்சி யைத் தேடி ஆசையை மடைமாற்றம் செய்யும்.

பருத்த தேகமும் பலம் குறைந்து, மெலிந்து, சுருங்கி மெய்யெல்லாம் பொய்யாகி, மேனியெல்லாம் கூனிக் குறுகியதும், கொண்ட மயக்கம் திண்டாட் டம் காணும். உடனே மனம் மரணத்தை விரும்பி அணைக்கிறது.எம்மைப் பல வயோதிகர்கள் பார்த்து ஆசி பெற்றதும் முதல் கேள்வியாக, "எனக்கு எப்போது மரணம் வரும்?' என்று கேட்பார்கள். "ஏன் மரணத்தை விரும்புகிறீர்கள்?' எனக் கேட்டால், "என் மனம் அதையே விரும்புகிறது' என்றே கூறுகிறார்கள். மனிதனை மரணம் தேடி வரவில்லை. மனிதனே மரணத்தைத் தேடிப் போகிறான். இதுதான் உலகத் தில் பெரிய விந்தை ஆகும்.

இதைவிடப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இளம்வயது மரணம் என்பதுகூட மனம் முடிவு கட்டுவதுதான். எமது ஆராய்ச்சிக்கு உட்பட்ட விபத்து, நோய் மூலம் இறந்த இளம் வயதுக் காரர்களில் 99 சதவிகிதம் பேர்களுக்கு எதிர்மறை மனத் தூண்டுதல் அதிகமாக இருந்ததே காரணம் என அறிந்துள்ளோம்.

உதாரணமாக, இரவு நேரத்தில் தனியாகப் போக பயம். வாகனத்தில் வேகமாகப் போக பயம். புதிய மனிதர்களைக் கண்டாலே பயம். இப்படி எதைக் கண்டாலும் பயப்படும் மனிதர்கள், தனது எதிர்மறை மனத் தூண்டுத லால் ஏற்கெனவே மனரீதியாகப் பாதிக்கப் பட்டுள்ளார்கள். அதன் வெளிப்பாடுதான் மாரடைப்பு, ஆஸ்துமா போன்ற நோய்களின் தாக்கம்; சீக்கிரமே மரணம்.

இன்னும் ஒரு வகையினர் எதிர்மறை மனத் தூண்டுதலால், "நீண்ட நாள் வாழமாட்டோம். இருப்பதற்குள் எல்லாவற்றையும் சீக்கிரமே அனுபவித்துவிட வேண்டும்' என்ற தூண்டுதல் உண்டாகி, உலகியல் இன்பத்தின்மீது அதிக வேட்கை கொண்டு, வெறிபிடித்த நாய்போல அலைவார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கே வாகன விபத்து, தற்கொலை முடிவு, புற்றுநோய், சிறுநீரக நோய் போன்றவை வந்து சீக்கிரமே இறக்கிறார்கள்.

எனவே, இளம்வயது மரணத்தையும் மனமே முடிவு கட்டுகிறது; முதுமை மரணத்தையும் மனமே முடிவு கட்டுகிறது.

நாம் பிறந்த பின்னர், வெளியிலிருந்து அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிய மனம், நம்மைச் சாகடித்த பிறகுதான் ஓய்ந்து நிற்கிறது.

இப்படிப்பட்ட சமூக விரோதியை இனம் கண்டு வென்றுதான் இந்திய யோகிகள் சாதனை படைத்தார்கள். "இந்திய யோகிகள்' என நாம் வித்தியாசப்படுத்தவும் காரணம் உள்ளது. அதையும் சற்று ஆராய்வோம்.

உதாரணமாக, இயேசுநாதர் வாழ்வில் நடந்த கடைசி சம்பவம் இங்கே ஒப்பு நோக்கப்படுகிறது. இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டார். "இயேசுநாதரின் மரணம் கடவுளின் முடிவா? மனதின் முடிவா?' என்கிற பலமான அறிவு மோதல் நடக்கிறது.

இயேசுநாதரே, "பரமபிதாவே இவர்கள் அறியாமல் பாவம் செய்கிறார்கள். இவர்களை மன்னித்தருளும்' என்கிறார்.

இதனால் நாமறிவது, "இயேசுபிரானுக்கு வந்த மரணத்தை இறைவன் கொடுக்கவில்லை. தனக்கு அன்னியமாக இருக்கிற புற மனதுக்குச் சொந்தமான யூதர்கள் கொடுத்தார்கள்' என்றே கருதினார் என்பதைத்தான்.

"கடவுளுக்குப் புறம்பாகவும் ஒரு செயல் நிறைவேறும்' என்கிறது கிறிஸ்துவ மதம். காரணம், மனதின் எல்லைக்கு அப்பால் அவர்களால் பயணம் செய்ய முடியவில்லை.

இந்திய ஞானிகள் இதில் தேர்ந்து தெளிந்து மனதைக் கடந்து மகேசனை  அடைந்து நிறைகிறார்கள்.
இன்றளவும் கிறிஸ்துவ மதத்தில் பெரிய பதவி என்பது "மறை சாட்சிகள்' என்ற பதவி தான். மறை சாட்சி என்றால் இயேசுநாதரைப் போலப் புறமனது எதிரிகள் மூலம் ரத்தம் சிந்திக் கொலையாகி இறந்து போவது. அவர் களுக்கே மறை சாட்சிகள் என்ற பதவி கொடுத்து முக்தி அடைந்தவர்கள் என்று போற்றுகிறார்கள்.

இறை விமர்சனம் செய்வது நமது நோக்க மல்ல. தத்துவ ஒப்பீடு மட்டுமே செய்கிறோம். கிறிஸ்துவ நெறி ஒரு உயர்ந்த கோட்பாடு என்பதில் எமக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.

அதேசமயம் இந்திய யோகிகள் சற்று வித்தியாசமானவர்கள் என்பதை எடுத்துச் சொல்வது அவசியம் எனத் தோன்றுகிறது.

இயேசுநாதர் எப்படி சிலுவையில் அறையப் பட்டாரோ அதேபோல இங்கு சைவ மரபில் வந்த பட்டினத்தார் கழுமரத்தில் ஏற்றப் பட்டார். இயேசுபிரான், பட்டினத்தார் இருவருமே பெரிய ஞானிகள். இருவருமே எந்தப் பாவமும் செய்யாதவர்கள். இயேசு பிரான்மீது மதத்துரோகம் செய்துவிட்டார் என அபாண்டமாய் பழிசுமத்தி சிலுவையில் ஏற்றினார்கள். இங்கு பட்டினத்தாருக்கு "பத்ரகிரி மகாராஜா அரண்மனையில் திருடிவிட்டார்' என அபாண்டமாய் பழியைச் சுமத்தி கழுமரத்தில் ஏற்றி விட்டார்கள்.

மரணத்தின் எல்லையில் இருவருமே நிறுத்தப்பட்டார்கள். இன்னும் சில நிமிடத்தில் மரணம் வரப்போகிறது. கடைசி நேரத்தில் இரண்டு ஞானிகளும் இரண்டு விதமான கருத்துகளைச் சொன்னார்கள்.

இயேசுபிரான் சொன்ன வாசகமோ, உலகில் அத்தனை தேசமும் இயேசுவின் ஆதரவாளர் களாக மாறி அவரே ரட்சகராக இருந்து வழிநடத்துவது போன்ற காரியப்பட்டது.

"பரமபிதாவே! இவர்களை மன்னித்துவிடு' என்ற அந்த வாசகம், "பாவிகளுக்குப் பாவ மன்னிப்பைக் கொடுத்துவிட்டு, மனுமகன் ரத்தம் சிந்தி உயிர் துறந்தார்' என்ற அர்த்தத் துடன் உலகில் அதிக மொழியில் வாழ்ந்து சாதனை படைக்கிறது.

நமது பட்டினத்தார் கடைசியாகச் சொன்ன வசனம்தான் இந்திய யோகிகள் இறவாமை பெற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்தி, யோக தர்மத்தின் வேகத்தைக் காட்டுகிறது.

"என்செயல் ஆவது யாதொன்றும் இல்லை
இனித் தெய்வமே உன்செயல் என்று
உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்றும் இல்லை
பிறப்பதற்கு முன்செய்த தீவினையோ
இங்ஙனம் வந்து மூண்டதுவே!'

பட்டினத்தார் ஆழமான செய்தியை இங்கு முன்மொழிகிறார். இயேசுநாதர் சொன்னது போல், "கடவுளுக்குப் புறம்பாக ஒரு செயல் திட்டம் இருக்கிறது' என்பதை பட்டினத்தார் முதலில் மறுக்கிறார். "கழுமரத்தில் என்னைக் கட்டி வைப்பதற்குக் காரணமும் கடவுள்தான்!' என அங்கீகரிக்கிறார். வரப்போகிற முடிவையும் ஏற்கிறார்.

"இந்த முடிவை மாற்றி என்னைக் காப்பாற்று!' என இறைவனிடம் வேண்டுதலும் செய்ய வில்லை. மனதை வென்ற மகான் என்பதால்- "இந்த முடிவு தனக்குள் வாழும் எதிர்மறை மனத்தின் தீர்வா என்றால் அதுவும் இல்லை.

எதனால் இந்த முடிவு வந்தது என்றால், "இந்தப் பிறவியில் செய்த பாவம் இல்லை. திட்டவட்ட மாகக் கூறுகிறேன்- போன பிறவியில் செய்த பாவமே காரணம். நடப்பது நடந்தேறட்டும்' என்று சமாதானம் கூறிவிட்டுச் சாந்தமாக அமர்ந்து விட்டார்.

இயேசுநாதரின் முடிவின்போது ஈட்டியால் துளையிடுகிறார்கள். ரத்தம் சிந்துகிறது; உயிர் விடுகிறார்.

இங்கே பட்டினத்தாருக்குக் கொடுங்கோல் தண்டனை. கீழே கழுமரத்திற்குத் தீ மூட்டுகிறார்கள். கருகிச் சாக வேண்டும் என்று பெருத்த தீ மூட்டினார்கள். கழுமரம் எரிந்தது. நமது கருணை வள்ளல் தீயிலே குளித்தெழுந்து விட்டு திருமுக தரிசனம் தந்தார். அன்று மலர்ந்த செந்தாமரை பூப்போல வெளிவந்தார்.

பூவுலகச் சூழ்ச்சி மனம் கொல்ல முடியாமல் ஒதுங்கியதால், பட்டினத்தார் உயிருடன் நின்றார். சூழ்ச்சி மனம் வணங்கியது. இயேசு பிரானின் முடிவு மரணத்தில் முடிந்தது. பட்டினத்தாரின் முடிவு மறுகணத்தில் மாறியது.

காரணம், இந்திய யோகிகள் மனத்தை வென்றவர்கள். அவர்களுக்கு அக மனமும் மரணம் தராது; புற மனமும்- அதாவது எதிரிகளின் மனமும் மரணம் தராது. தானே விரும்பாதவரை தனக்கு மரணம் வராத தகையாளர்கள். இந்த மரணமில்லாப் பெருவாழ்வு வித்தை இந்தியாவில் மட்டும் உள்ளது. தேர்ந்த குருமார்களிடம் கற்றுத் தேற வேண்டும்.

ஒரு வெளிநாட்டுக்காரர் குழந்தைத்தனமாக ஒரு செய்தியைச் சொன்னார். அதாவது, "வடலூர் வள்ளல் பெருமானை ஒரு ஞானி, முக்தியடைந்தவர் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது' என்றார். "என்ன காரணம்?' எனக் கேட்டோம். "அவர் ரத்தம் சிந்தி இறக்கவில்லை. அவர் ரத்தம் சிந்தி இறந்திருந் தால் நாங்கள் ஞானி என ஒத்துக்கொள்வோம்' என்றார்.

நாம் நொந்து நூலாகிவிட்டோம்.

அடப்பாவிகளே! நீங்கள் இகலோகப் பாவிகள் மட்டுமல்ல; பரலோகம் போனாலும் அங்கும் பரலோகப் பாவிகளாகத் திரிவீர்கள்.

"இந்திய நாட்டுச் சித்தர்களின் ரத்தம் பூமியில் பட்டால் அந்த இடத்தில் பூகம்பமே உண்டாகும். "ரத்தம் சிந்தி உயிர் போகக் கூடாது' என்ற கோட்பாடே உள்ளது. ஏன்? வியாதி வந்தும் இறக்கக்கூடாது! பிணமாகி விடுவதுகூட உயர்நிலை யோகம் அல்ல 
என்று கூறுகிறது சித்தர் கோட்பாடு.

உடலோடு மறையும் வித்தையை உலகுக்கு உணர்த்தினார்கள் இந்திய ஞானிகள். அதன்படி வாழ்ந்து பிணமாகாமல் மறைந்தவர் வள்ளல் பிரான். செத்தவர்கள் அனைவரும் சித்தரல்லர் உமது சித்தம் தெளியட்டும் என்றோம்.

உலக மதங்கள் அனைத்துமே மனதின் மரணத்தோடு வாழ்வை முடிக்கிறது. சித்தர்கள் நெறி மட்டுமே மனம் கடந்த பெருநிலையைக் காட்டி நிற்கிறது.

மனதை நம்பிப் பயணம் செய்யும்வரை மனம் மரணம்வரை அழைத்துப் போகும்.

மனம் கடந்து பயணம் செய்யப் பழகினால் மரண அவதிப்படாமல் தண்ணீரில் புளியைக் கரைப்பதுபோல இந்த உடலை கடவுள் என்னும் சோதியில் கரைத்துவிட முடியும்.

எனவே, மரணம் என்பது மனத்தின் தீர்வாக முடிந்தால் அது நாத்திகம். மரணம் என்பது ஆன்மாவின் தீர்வாக முடிந்தால் 
அதுவே ஆன்மிகம் ஆகும்.

கவனம் வைத்தால் மனதில் கலகம் ஒழியும். மயானத்திற்குக் கொண்டு போகும் மனதைத் தியானத்தை நோக்கித் திருப்பிவிடலாம். திருப்பலாமா?

4 comments:

 1. திருபுலிப்பானி சித்தர் அடிமை அவர்களே.தங்களின் கருத்துக்கள் தெளிவான தன்மையும், ஒரு இனிமையும் காண்கிறேன்.மனத்தைப் பட்டினி போட்டால் அகோரப் பசியுடன் இன்னும் வேகத்துடன் கெடு வழியில் பயணிக்கும்.பசித்திரு என்பது பசி+திரு,பசி என்பது ஒரு செல்வம்.மற்றவற்றை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 2. அன்பரே ,
  மிக்க நன்றி ., தாங்கள் கூறியது சரியே !!!தங்களின் கருத்துரை ., ஏற்றுகொள்ளபட்டது ., அந்த பகுதியை நீக்கிவிட்டேன் . நன்றிகள் பல .,

  இப்படிக்கு ,
  புலிப்பாணி சித்தர் அடிமை,
  சித்தர் பைத்தியம்

  ReplyDelete
 3. திரு அழகப்பன் அவர்களுக்கு இங்கு தவயோகி ஞானதேவ பாரதி சுவாமிகள் அருளிய உரை முழுவதும் அவர் இறைதரிசனம் என்னும் ஆன்மீக வெற்றியை அடைந்த பின் வழங்கியவை, அதனால் நமது அற்ப அனுபவங்களை,நிலையை வைத்து ஞானிகளின் அனுபவங்களைப் பிழை சொல்வது தகுமா? என்பதை ஆராயவும்.
  "சினம் இறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும்
  மனம் இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே!" என்கிறார் தாயுமான சுவாமிகள்.
  மேலும் சுவாமிகளின் பல அருளுரைகளைப் படித்து விளங்கிக்கொள்ளவும்.
  http://thavayogi.blogspot.com/

  ReplyDelete
 4. தாங்கள் கருத்துக்கு நன்றி. சித்தர்களைப் பற்றி மேலும் கூறவும்

  ReplyDelete