எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, November 16, 2010

விஞ்ஞானம் - மெய்ஞ்ஞானம் == சித்தர் விளக்கம்

சித்தர் வணக்கம் ,
        காரைச் சித்தர் பாடல்கள்
           விஞ்ஞானம் -  மெய்ஞ்ஞானம் - விளக்கம்

வேரறியா வினை வறியும் விஞ் ஞானந் தான் 
           வேரறிந் தே விளையாடும் மெய் ஞ் ஞானந் தான் 
சார் பறியுஞ் செயலறியும்  விஞ் ஞானந தான் 
           சார் ப்புதஞ் சாரமதே மெய் ஞ் ஞானந் தான்
ஈரறியு மீர் மையெலாம் விஞ் ஞானந் தான் 
          இருமையெலா மொருமையுறல் மெய் ஞ் ஞானந் தான்
பாரறியும் பேதநெறி விஞ் ஞானந் தான் 
          பரமறியும் போதநெறி மெய் ஞ் ஞானந் தான்

விஞ் ஞான விதியெல்லாம்  வேகம் வேகம்
           வேகமினல் தாமத்தின் வித்தை வித்தை
அஞ் ஞான விதியெல்லாம் போகம் போகம்
          அடடாடா கயிறறுந்த பொம்ம லாட்டம்
செய் ஞ் ஞானக் கதியெல்லா மரண வத்தின்       
           செயலன்றி வேறில்லை சென்மம்  சென்மம்
மெய் யான விதியெல் லாம் யோகம் யோகம்
          மின் னான  சக்தியுடன் சாகம் சோகம்........!!!!! 
     
     என்ன ஒரு அருமையான நடைமுறை விளக்கம் !!!., ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே காரைச் சித்தர் ., எவ்வுளவு அழகாக கூறியிருக்கிறார் .,!!!

 காரைச் சித்தர் திருவடிகள் சரணம் !!!
சித்தர்கள் பாதம் போற்றி !!!!!

இப்படிக்கு ,
புலிப்பாணி சித்தர் அடிமை
சித்தர் பைத்தியம் .

1 comment:

  1. மிக மிக அருமையான எளிமையான விளக்கம்,தெளிவான கருத்துக்கள்.பல சந்தேகங்களை தீர்க்கும் வண்ணம் உள்ள அருமையான பாடல்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete