எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Sunday, December 26, 2010

மூடர்கள் அமாவாசை!!!

   மூடர்கள் அமாவாசை


பிறக்குமது வன்றியே ஏழுதோற்றத்துள்ளும்  
பேராக நாலுவகை யோனிக்குள்ளும்
    பிறக்குமது பொறிஐந்தால் கோடாகோடி
     பிணமாகிப்  பிறக்கமட்டும் மாய்கையாலே  
   திறக்குமிது மேல்வாசல் சங்குமூச்சு
     செல்லயிலே விந்துள்ளாய் ஆத்துமாச்செல்லும்!!!
    மறக்குமிது வரைகளிலே செனிப்பதில்லை
       மனஞ்சென்ற  இடங்களிலே பிறப்புஉண்டாமே!!!
    உண்டான மாதாவும் பிதாவுமாண்டால்
     உத்தமனே தற்பனங்கள் செய்வோம்என்பார் 
      பற்றான கிரியையொடு சரியைக்கெல்லாம் 
   பரிசுகெட்ட நினைவாலே நிறைத்துதானும்
   கொண்டாடித் தற்பனங்கள் செய்வோம்என்பார்
     குரும்பரப்பா  எள்ளோடு தண்ணீர்வார்ப்பார்
     தெண்டனிடு வார்கோயில் தோறுஞ்சென்று
     தெளிவற்றே  தெளியார்கள் அலைவார்தானே!!!

அலைவார்கள் அவரவர்கள் தேசவாழ்க்கை!!
        அமாவாசை விரதமென்பார் திதிகள் செய்வார்!
உலைவார்கள் வேதியற்கு அன்னம்ஈய்ந்து !!!   
        உறுதியாய்ப் பிண்டமிட்டு பிதிர்க்குப்பூஜை!
மலையாமற் கொடுப்பார்கள் எள்ளுந்தண்ணீர்  !!
      வார்ப்பார்கள் வேதமுறை வளப்பமாக!
நிலையான விந்துகெட்டுப் பிணமாய்ப்போனால்!!
     நீயார்க்குத் தற்பனங்கள் செய்யும்வாரே.!


       வாரான  பிதுர்கன்மம் யோகிதீர்ப்பான்  !
     மற்றவர்க்கு வாராது லுத்தமாண்பர்  !
   நீறான பிணத்துக்குப் பிண்டமேது???
        நீதிகெட்ட  எள்ளுநீர் வார்ப்பதேது ???
        தூறான வேதநூல் பார்த்துவாசி !
    
  கழன்றலைவார் உலகமெல்லாம் சுத்தமாடு !!
       தேறாத பசுக்களப்பா மாய்கைக்குள்ளே !
            சிக்கினாற் பிறப்பிறப்பிற் சிக்கினாரே.!!!      
 ---  அகத்தியர்.
அப்பொழுது  அமாவாசை என்றால் என்ன ??? அடுத்த பதிவில்


இப்படிக்கு
புலிப்பாணி  சித்தர் அடிமை ,
சித்தர் பைத்தியம்

2 comments:

 1. திருபுலிப்பாணி அவர்களே,
  தங்கள் வலைப்பூ மிக்க திறனுடைய ஒரு கணினி வல்லுனரால் திறம்பட உருவாக்கப்பட்டது போல், இருக்கிறது.தங்களது சமயோசித புத்தியால் ,படங்களை சரியான இடங்களில் கோர்த்துள்ளீர்கள்.மிகவும் ரசிக்கத் தக்கதாயுள்ளது.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 2. அய்யன் அகத்தியர் பாடல்கள் அருமை.
  பதிந்த உங்களுக்கு நன்றி.

  ReplyDelete