எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Tuesday, July 16, 2013

வைராக்கிய தீர்த்த விரதம் (2) !!!

இதற்கு முந்தைய பதிவை [வைராக்கிய தீர்த்த விரதம் 1]படித்துவிட்டு இந்த பதிவை படிக்கவும் 

*** ஏன் ஜீவன் படைக்கப் பட்டது என்று அறிய முடியாததை அறிய முயல்வதைவிட , முதலில் படைப்பாகிய அனுபூதி எவ்வாறு கும்பகோணம் திருத்தலத்தில் நிகழ்கின்றது என்று ஓரளவு உணர முற்படுவது மூலம் , தக்க தெளிவு கிட்டும் என்றார் சத்குரு வேங்கடராம சுவாமிகள் ., அர்த்தமுள்ள இவை யாவும் புராணங்களிலும் காணப் பெறுவன .*** ஒவ்வொரு மஹாப் பிரளய காலத்திலும் , பூலோகத்தின் கோடிக் கணக்கான ஜீவன்களும்  பிரளய வெள்ளத்தில் மூழ்குவர் . ஒரு பிந்து குடத்தில் - அமிர்தம் சேர்ந்த மண் கலயத்தில் (கும்பத்தில்) -மூலக்கரு அணுக்களாய்ச் சேமித்து வைக்கப் பெறுவர் .

*** ஆனால் , இந்தப் பிரளய வெள்ளத்தில் மூழ்கும் எந்த ஜீவனுக்கும் மூச்சுத் திணராது என்பதே இங்கு நிகழும் தெய்வாற்புதம் .., 
மாறாக " யுக நியதியான பிரளய வெள்ளம் இது . நாம் அனைவரும் ஒரு குடத்தில் அசென்றுடைக்கலம் ஆவோம் " என்ற எண்ணமே அங்கு மேலோங்கி இருக்குமாம் . அல்லது எந்த ஜீவனுக்கும் திணறலோ அல்லது வேறு எதுவுமே அங்கு தோன்றாதிருக்கும்  , அல்லது இவ்வாறு உண்மையை உணர்விக்கப் பெறுவர் .

*** இம்மூன்றைத் தவிர , பிரளய காலத்தில் அங்கு வேறு எந்த மன ஓட்டமும் எந்த ஜீவனுக்குள்ளும் இருக்காது .  வெள்ளத்தில் மூச்சுத் திணறுதல் என்பதே கிடையாது ., இது தான் இங்கு பிரளயம் பற்றி அறிய வேண்டிய அதியற்புதமான ஆரம்பப் பாடமான ஆன்ம ரகசியம் .

*** தெய்வ ரகசியம் என்றால் மறைக்கப்படுவது , மறைமுகமானது என்று மட்டும் பொருளல்ல . அறிய முடியாதது ,(மனித) அறிவிற்குப் புலப்படாதது என்ற அர்த்தமும் உண்டு . படைப்பு பற்றி விஷியங்களைப் புரிபடாத தெய்வ ரகசியங்கள் என்பது ஏனோ ?
ஒரு பழத்தை உண்டு விட்டால் , தின்ற பழத்தை வெளியே காண முடியாது அல்லவா?., இதே வகையில் போல தன்னை யார் என்று அறிவதே படைப்பு ரகசியம் என்பதால் அப்படி உணரும் போதும் அங்கே -- " நான் ராமன் , நான் கிருஷ்ணன் " என்ற தனித்த மனித உணர்வே இருக்காது . ஒருவர் தின்ற பழம் அவரே காண முடியாதவாறு அவருக்கு உள்ளேயே கிடப்பது போல "நான் இன்ன பெயர் கொண்டவன் " என்ற உணர்வுகளும் உள்ளேயே மறைந்து விடும் . ஒருவர்  தன் உடலை விட்டு வெளியே இருந்து கொண்டு தன் உடலை காண முடியுமா ? இதுதான் படைப்பு ரகசியத்தின் மூலம் .
யோகசக்தியால் மட்டுமே இது சாத்தியமே .

*** பிறந்த குழந்தையிடம் பிஸிக்ஸ் , கெமிஸ்ட்ரி பற்றிச் சொன்னால் அதற்குப் புரிபடுமா?  இதைப் போலத்தான் , ஆன்ம அறிவியல் குழந்தையாய் இருக்கும் மனிதர்களும் சிருஷ்டி பற்றி முழுமையாக அறிய முற்படுவதும் . இது பற்றி எவ்வுளவுதான் விளக்கிச் சொன்னாலும் , குழந்தை போல் மனிதச் சமுதாயத்துக்குப் புரிபடாது .படைப்பு ரகசியங்களைப் படிக்கவோ , கற்கவோ முடியாது , தக்கோர் மூலம் உணர்விக்கப் பெறுதல் வேண்டும் என்று முதலில் மனதார ,ஓத்துக் கொள்வதுதான் ஆரம்பப் பாடம் .

மஹாமகம் அகில உலக ஜீவநல வளவர இறைப் பெருவிழா ! 

மகாமக வைபவத்தை நிகழ்த்த வேண்டிய ஆன்மத் திருப்பணியை , பிரபஞ்சத்திலேயே பெறுதற்கரிய அரும்பெரும் இறைக்கடமையாய் ,புண்ணிய பாரதத்தின் தெய்வத்தமிழ்த் திருநாட்டார் அண்ட சராசரத்தின் சார்பாய் ,பல கோடிச் சதுர்கோடி யுகங்களாய் ஆத்மார்த்தமாய் நிறைவேற்றி வருகின்றார்கள் .இதில் உலக ஜீவன்களாகிய உங்கள் ஒவ்வொருவருடைய ஆன்மசக்தி ப (பா)ங்கும் நிச்சியம் உண்டு என்பதையும்  அறிந்தாக வேண்டும் .  இதுவும் ஜீவசிருஷ்டி ரகசியத்தின் ஆரம்பப் பாடம் . திருக்குடந்தைத் தலத்தின் புனிதமான கும்பமேளாவான மஹாமகம் வார்த்தளிக்கும் தான் ,.பிரம்ம ஞானரகசியமும் கூட . இதற்காகவே பிரம்மரும் ,நவநதி தேவதா மூர்த்திகளும் கும்பகோணத்தில் மட்டுமே அபூர்வமான மெய்ஞான விஞ்ஞான யோகப் பிரகாச வடிவங்களில் அருள்கின்றனர்.


  
யுகங்கள் , உலகங்களின் தோற்றமும் , முடிவும் 

*** யுகங்கள் மற்றும் பூமிகள் ,லோகங்கள் தோன்றுவதும் ,மறைவதும் எவருக்கும் புலப்படாத மஹாபிரம்ம கால ரகசியம் .உத்தம தெய்வநிளைகளில் மட்டும் தான் இதனைப் பற்றி ,அதுவும் இறையருளால் மட்டுமே ஓரளவு தெரிய வரும் .தக்க சத்குரு மூலமாய் இதனைப் பற்றி அறிவோரும் அடக்கமாய் இருப்பர்.ஒரு போதும் இதனை வெளியிடார் ., தேவையும் இல்லை ., அப்படியே சொன்னாலும் எவருக்கும் புரிபடாது , அதாவது ,இங்கு இறைச் சித்தம் தான் இயங்கும் ,வெறும் மனித அறிவு அல்ல .

***பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பூமியும் ,நட்சத்திரப் படைப்பிற்கும் கரணங்கள் உண்டு .ஒவ்வொரு உயிரும் ,ஒரு சிறு எறும்பும் கூட எண்ணற்ற காரணங்களுடன் தான் படைக்கப் பெறுகின்றது .இதனையே அடிப்படைப் பாடமாக இப்போதைக்கு ஆழ்ந்த நம்பிக்கையுடன் அறிதலும் போதுமானதே .ஏனென்றால் சாதாரண மனிதப் பகுத்தறிவுக்கு ஓரணுத் துளியும் சற்றும் எட்டாத ஞானங்கள் இவை .
தக்க சத்குரு தான் இத்தகைய அரிய ஞானத்தை உணர்த்திட இயலும் .இதிலும் சத்குருவும் அவரவருக்குத் தேவையானதை மட்டுமே ,அவரவர்தம் ஆன்ம நிலையைப் பொறுத்து அளித்திடுவார் ,அவநம்பிக்கை  ,ஆசை இருந்தால் இது பற்றி ஒரு சிறிதும் அறிய முடியாது .

தீர்த்த நீராடல் செய்தபின் ., மகாமகத் தீர்த்த வலம் .

பிரபஞ்சத்தில் உள்ள எண்ணற்ற புண்ணியத் தீர்த்தங்களும் வந்திணையும் பூவுலகின் ஒரே சமஷ்டிப் புண்ணியத் தீர்த்த வளாகம் ,மாமாங்கத் தீர்த்தமே .

பௌர்ணமி ./ மக நட்சத்திர நாளில் ..,தொடக்கத்தில் மகாமகக் குளத்தை குறைந்தது மூன்று முறையேனும் வலம் வருதல் நன்று ., இயன்றால் 5,7,12,16 முறை வலம் வருதல் , தீர்த்த வலப் பலன்களை விருத்தி செய்வதாம் ., பதினாறு முறை வலம் வருதல் பரிபுரணமான பலன்களை வார்க்க வல்லதாம் .

மகாமகத் தீர்த்தவலத்தின் போது ஓத வேண்டிய மகாமக நவவாசல் வாசித்துதி 

கெஞ்சுவர மாயருளும் கந்தசிவங் காணுமே  கீதபத மோதமே 
பஞ்சுபரி ஆவது போல் பாவவினை தீருமே  பண்டுவளி தாருமே 
எஞ்சிடாத வல்வினைகள் தீரவழி பேணுமே  எவ்வி தவ போதமே 
கஞ்சமடை ஆகுதலே காசிவிச்வ நாதமே   குஞ்சதரு  வேதமே 
அஞ்சுபொறி பாதவலி அண்டகா வீழுமே     ஆரமுத மாகுமே 
விஞ்சிடாத நவநதிமா வேதசார ஆரமே    வாலைமுக யோகமே 
உஞ்சினைமா யோகவழி உய்யவளி பாருமே   உத்துங்க சோதியே 
பஞ்சபூத பஞ்சநாத பங்கயமா ஞாதரே              பாதபத வாழியே 
முஞ்சதிரு குடந்தையது முக்தகலமா வேதியே  மாமாங்க ஆழியே 
தஞ்சயோக மாகவந்த மாகதீர்த்த பாலியே    பல்லாண்டு வாழியே 
                                                                            பல்லாண்டு வாழியே 

தீர்த்தசக்தி தீர்த்தசக்தி  தீர்த்தசக்தி பாஹிமாம் 
தீர்த்தபாத மகாமக திவ்ய தீர்த்த ரட்சமாம் 

ஓம் தீர்த்தபாலாய வித்மஹே நவதீர்த்த நதிவரதாய தீமஹி 
தந்நோ கும்பகோண விஸ்வதீர்த்த மகேஸ்வர ப்ரசோதயாத் 

** தெய்வாதி தேவ தேவாதி மூர்த்திகளாலும் தீர்த்த நீராடப் பெறுகின்றன பிரபஞ்சத்தின் உத்தம தீர்த்த பூமியே மாமாங்கத் தீர்த்தம் என்றால் ,தற்போதைய உலக மனிதச் சமுதாயம் எப்படி எல்லாம் இந்த மகாமகத் தீர்த்த பூமியைப் போற்றி வழிபட்டுப் பயன்படுத்திக் கொள்தல் வேண்டும் !.

பூமியில் உயிர்கள் ஏன் ,எவ்வாறு ,எவரால் எப்படிப் படைக்கப் பெறுகின்றன ? பூமி எவ்வாறு தோன்றியது ? முதன் முதலில் ஜீவன் எவ்வாறு படைக்கப்பட்டது ? .இவை அனைத்துக்கும் தக்க விடைகளை ஆன்மீக ரீதியாக ,அவரவருக்கான அறிவு நிலைப் பக்குவப்படி வார்க்க வல்லது மகாமகத் தீர்த்த நீராடல் .
*** எத்தனை கோடி ஜென்மங்கள் எடுத்தாலும் மகாமகத் தீர்த்தப் பெருமையை விண்டிட இயலாது என்பதும் இதன் மஹிமையின் ஒரு பாங்கே ., மகரிஷிகளின் மாஞானத்திற்கும் எட்டாதது மகாமகத் தீர்த்த நீராடல் மகத்துவம் .


--- மார்ச் & பிப்ரவரி 2013   ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதலிருந்து ..,தொகுத்தவை . மேலும் விளக்கங்களுக்கு மார்ச் & பிப்ரவரி 2013 ., மே 2012 , ஏப்ரல் 2012 .இதழை காண்க மற்றும் மகாமகத் தீர்த்த நீராடல் மகிமை 1&2 .ஆகிய புத்தகங்களிலும் காணாலாம் ., 

இப்படிக்கு 
சித்தர் பைத்தியம் 

No comments:

Post a Comment