எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, July 30, 2013

அடிப்படை ஆன்மிகம் - 1

முன்னுரையும் ,  முடிவுரையும் இல்லா  - பொருளுரை  !!!!!!!!!


     ஏகம் ஏன்? அனேகமானது  . அதாவது இறை என்னும் ஏகப் பரம்பொருளாகிய பரமாத்மாவில் இருந்து ஏன்? ஜீவாத்மா வந்தது .., வந்தாலும் முதலில் மாயை உயிரை ஏன்? எதற்கு? பற்றவேண்டும்  .., ஆன்மா அசுத்தம் அற்றது  ,   இவையல்லாம் ஏன் ?, எதற்கு? ,

எதனால் மனம் , அறிவு .,  ஆத்மா ., இவை இனைந்து  உடம்பில்  கலக்கிறது / ஏன் கலக்க வேண்டும் ? . உலகியலில் பரிநாமவளர்ச்சி அடைந்துகொண்டேபோகிறது .,  ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து ., அறிவோடு ஒடுங்கி ஞானத்தை தேடி ., ஜோதியில் கலக்கிறது ., மீண்டும் ஜோதியில் இருந்து தெரித்து ., ஆன்மாவில் மீண்டும்   .....தானாயிருக்கும் பிரமத்தின்
     தன்செயல் தன்னை அறிந்தாக்கால்
வானாகி நின்று மறைபொருள்
     ஆனதை வாய்கொண்டு சொல்லுவாரோ?
                                       - ஏகநாதர் என்ற [ பிரம்மானந்தச் சித்தர் ]

சொல்லமுடியாது தான் .. இருந்தாலும் முயற்சிக்கிறோம், முடிந்தவரை இறையருளால் புரிந்து கொள்ள முயற்ச்சியுங்கள் ., கந்த குரு கவசத்தில் வரும் அதி திவ்ய வாசகம் " அறிவை எல்லாம் அறியும் அவ்வறிவை கொடுத்தது யார் ? இதற்க்கு ஸ்ரீ கந்த குரு கவசத்தில் வரும்  அடுத்த வரிகள விளக்குகின்றன .., " நல்லதும் ., கேட்டதும் ., நான் என்பதும் மறக்கவேண்டும் - நான் யார் என்பதை அறிவதை விட "நான்" என்பதை மறத்தலே சிறப்பு .., எண்ணங்கள் அற்ற நிலை . இதுவே ஆன்மாவின் உச்ச நிலை ..,  இதுவே ஆன்மாவின் பரிபுரன நிலை .இதை அறிவின் துணை கொண்டு அடையவேண்டும்   இந்த எண்ணங்கள் அற்ற நிலை தான் காலம் நிதர்சனமாகும் ,.., [ இந்த காலம் பற்றி சொல்கையில் . முக்காலத்தையும் கடந்த கடக்க வல்லவர்கள் சித்தர்கள் என்பார்கள் . சக்திய உண்மைதான் . இந்த காலத்தை கடத்தல் என்பதில்  சிருஷ்டி படைப்பு பற்றிய  சிதம்பர ரகசியத்தின் திறவுகோள் ., உள்ளது .. 
சித்தம் பலத்திலச் சிதம்பர 
வித்தையைத் தேறித் தெளிந்தேதான் 
சத்தம் பிறந்திட வாசி 
அறிந்து தானும் நடந்தேன் .
                   --- ஏக நாதர் 
[அடியேன் 21 வருடமாக வரும் ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழின் கடை நிலை வாசகன் இரண்டு ஆண்டுகளாய் படித்து பேரானந்ததில் திளைக்கின்றேன்  ...,  ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் காலம் பற்றி குறிப்பிடுகையில் "நடந்ததே நடப்பனவாய் நடந்து கொண்டிருகின்றன " என்ற வாசகத்தை குறிபிடுவார்கள் .., இந்த வாசகத்தில் காலத்தை  பற்றி நன்கு விளங்கும் .., மேலும் காலத்தை கடத்தல் பற்றி அதிதிவ்யமாக அறிய விரும்பினால் 2002 செப்டம்பர்  மாத இதழ் அடிமை கண்ட ஆனந்தத்தை படித்து பாருங்கள்  ஆழ்ந்த  நம்பிக்கையோடு  படித்தால் .,முக்காலத்தையும் கடந்த ., கடக்கும் ., கடக்க ., வல்ல  பேரானந்த குரு குல வாச அனுபூதி .., ] 

சரி ., விசயதிற்கு வருவோம் .., "எண்ணங்கள் அற்ற நிலை" ., இதுவே ஆத்மாவின் உச்ச நிலை . மாயை பற்றாத கர்மா அற்ற நிலை  ., இதை இறைவன்  கொடுத்த அறிவை கொண்டு அடைவோம் .., இதற்கு என்ன செய்ய வேண்டும் .., "அடிப்படை ஆன்மிகம் தான் " வேறேதுவும் தேவைவில்லை . அடிப்படை ஆன்மிகம் பற்றி அடுத்த பதிவில் தெரிவிக்கின்றேன்...,  படித்ததை .,கேட்டதை ,  உணர்ந்ததை ஏதோ யம் அறிவுக்கு எட்டியதை  .., நன்றி , வணக்கம் .

இப்படிக்கு ,
புலிப்பாணி சித்தர் அடிமை 
சித்தர் பைத்தியம் .

No comments:

Post a Comment