எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Sunday, August 18, 2013

அடிப்படை ஆன்மிகம் - 4

(அறிவியல் புர்வமாக நான் எனும் உணர்வை பற்றி ) அறிவியல் பார்வை எனும் அறிவியல் புத்தகத்தில் இருந்து : -

ஒலியும் ஒளியையும் பார்ப்பது யார் ?

மூளை ஒரு திரையரங்கம் என்றும் அதில் சினிமா ஓடுகிறது என்றும் தெரிகிறது , அதில் உள்ளிருந்து பார்த்து ரசித்து இன்ப துன்பங்களை அனுபவிப்பது யார் ? அந்த ஆளும் மூளையின் செல்கள் தானா ? செல்களின் சர்க்யூட் தானா ? அதற்கென்று ஒரு தனிப் பகுதியிலிருந்து "நான்" காண்கிறேன் என்ற உணர்வு பிறந்தால் உணர்வை உணர்பவர் யார் ?

இது சிக்கலின் இரண்டாம் பகுதி 

இந்த ஒற்றைச் செல் ஜீவனைப் பாருங்கள் ., இதற்க்குச் எதைச் சாப்பிடலாம் , எதைச் சாப்பிடக் கூடாது என்ற அறிவு இருக்கிறது . தன் ஒரே ஒரு செல்லையே நடக்க , எடுக்க , சாப்பிட என்று பயன் படுத்துகிறது . இதற்கு உள்ளேயே எல்லாச் செயல் பற்றிய முடிவுகளும் எடுக்கப் படுகின்றன .அதாவது அந்த ஒரு செல்லே மூளையாகவும் இருந்து கொள்கிறது .., நானிருக்கிறேன் என்ற நினைப்பையும் அந்த ஒற்றைச் செல்லுக்கு உண்டு .

                        

ஏன் இந்த "நான் " உணர்வு தேவைப் படுகிறது ? எண்ணிப் பாருங்கள் இந்த உணர்வு இல்லாவிட்டால் இந்தச் செல்லின் கதி என்னவாகும்? எதையாவது சாப்பிட எண்ணுமா ? சாப்பிடுவது ஒரு எந்திரச் செயலாக நடைபெறுவதானால்  அச்செயல் எதையாவது சாப்பிட்டு விட்டு இறந்து போகலாம் . "நான் " என்ற இருப்பு நினைவு இல்லாது போனால் அது எப்படி ஆபத்திலிருந்து தப்பிக்கும்  ? ஏன்  தப்பிக்க விளையும் ! அதன் உணர்வும் , ஓட்டமும் அந்த நான் என்ற உணர்வுக்குத் தானே . யாருமே இல்லாத போழ்து , யாருக்காக அச்செயல் செய்யப்பட வேண்டும் .எனவே ,நான் என்ற உணர்வு இருப்பதால் மட்டுமே , ஒரு செயல் பெருகி ,பல்லூயிராகி ,மரம் , செடி , கோடி , புழு , பூச்சியாகி , மனிதனாகப் பரிணாமம் அடைய முடியும் .

தம் உடலில் உள்ள சிறுநீரகம் ,நுரையீரல் ,குடல் முதலானவை அவ்வ வற்றிக்கு உரித்தான செயல்களை மட்டுமே செய்கின்றன .ஆனால் மூளையோ ,மற்ற உறுப்புகள் என்ன செய்கின்றன ,எப்படிச் செய்ய வேண்டும் என்று மேற்பார்வையிடுகிறது .மூளை உடம்பை நிர்வகிக்கிறது . மூளையிலேயே நமது முழு உடம்பும் இருக்கிறது .கனவின் போது அந்த உடம்பும் , உணர்வுகளும் ,நினைவுகளும் மூளையில் பதிவாகியிருக்கின்றன . உடம்பு ஹார்டுவேர் என்றால் மூளை ஒரு சாப்ட்வேர் .

                                


ஓர் உயிரின் எல்லாப் பணிகளையும் மூளை செய்கிறது .செய்விக்கிறது . ஒரு குறிப்பிட்ட சந்தர்பத்தில் ஒரு விலங்கு ஒரு மாதிரி நடந்து கொள்கிறது என்றால் , அதன் மூளையில் அப்படி ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் .அதாவது உடம்பு என்ற வீட்டுக்கு மூளை ஒரு சொந்தகாரர் .அவ்வாறெனில் மூளைக்கும் ஒரு சொந்தகாரர் வேண்டும் செயல்படுத்துவது போல் , மூளையின் கட்டுப் பாட்டை வேறு ஓர் உறுப்பு (அது மூளைக்குள்ளாகவே இருக்கலாம் ) முன் நின்று செய்யலாம் .அதுவே "நான்" என்பதாகும் .

மன உணர்வுகள் யாருக்கு ? என்ற கேட்காத கேள்விக்கு ஒரு பதிலாக நான் என்ற உணர்வு சதா பிறந்து கொண்டே இருக்கிறது . இவ்வுணர்வு மூளையில் எழும் சினிமாவிலிருந்து வேறுபட்டதல்ல  சினிமாவும் , சினிமா பார்பவர்வரும் ஒன்றே . எப்படி எளிமையான வேதியல் செயலால் மொழியும் , உணர்வுகளும் எழும்புகின்றனவோ , அவற்றிலிருந்து இன்னொரு மேல் தளத்தில் "நான் இருக்கிறேன் " என்ற உணர்வும் எழும்புகிறது . இவ்வாரு பலபடி நிலைகளின் மனம் செயல்படுகிறது . கோபுர உச்சி போல் பிரதானமாக "நான் " என்ற உணர்வு எழும்புகிறது .

இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடிகிறது . இதுவே முடிவானதும் அல்ல  அடுத்த 50 ஆண்டுகளுகளில் இதற்கு முடிவு கிடைத்து விடலாம் . கிடைக்காமல் போனாலும் நாம் வெட்கப்பட வேண்டியதில்லை . ஏன்னெனில் "நாம் " நாம் தான் !

நன்றி : - அறிவியல் பார்வை புத்தகம் 
---------------------------------------------------------------------------------------------------
அடியேனின் கருத்து
                              


"நான் " என்னும் உணர்வு அறிவியல் முறையில் மூளையின் நடுமையத்தில்

 இருப்பதை அறிவியல் பார்வையில்  சொல்லவதை தாம் நாம் குண்டலியின் 7 சக்கரங்கள் உச்சியில்(சகஸ்ரஹாரம்) சகஸ்ரதளம் என்று குறிப்பிட்டுகிறோம் ..,யோகத்தில் குண்டலினி சக்தி  பாம்பு வடிவில் பின்னி மேல் எழுந்து சகஸ்ரதளத்தில் கொட்டும் போது நான் கரைந்து ஆயிரம் தாமரை எழுந்து " நான் " உணர்வு ஆத்மாவில் கரைந்து மறைகிறது ..., ஆத்மா விடுதலை பெற்று ஆதியோடு (அதாவது பிரம்மத்தில் பரம்பொருளில் இணைகிறது ) இது தான் ஆதியோடு சமமாகுதல் (சமாதி ).  


                                             


 சரியை ,கிரியை , யோகம் , ஞானம் 

சரியை ,கிரியையில் - முதலில் நம் கர்மாவை உணர்ந்து . கர்மாவை ஏற்று அனுபவிக்க சித்தமாக இருக்கிறேன் இறைவா என்று பற்றில்லாமல் இப்பிறவி கர்மா , கடமைகளை ஆற்ற வேண்டும் . இதை தான் காரைச் சித்தரும் இப்படி சொல்கிறார் 

இல்லறமே நல்லறமா மென்று சொன்னால் 

இன்பமெனப் பள்ளியறைக் குள்ளாகாதே 

தொல்லறமே துறவறமே தனது வண்ணம் 

துறந்திட்டா பற்றறவே துறந்தி டாமல் 

சொல்லறமே யுலகமெல்லாம் கண்ணின் ரூபம் 
சொர்ணமய மாம்சொர்க்கம் சுகவை போகம் 
கல்லறமே கனகமணிப் பூஷ ணங்கள் 
கமலத்தைக் காத்திடுவான் பத்ம யோகி. 

பெற்றவர்கள் தங்கடனைத் தீர்க்க வேண்டும் 
உற்றவர்கள் உறுகதியைப் பார்க்க வேண்டும் 
பற்றுவர வத்தனையு முடிக்க வேண்டும் 
பற்றில்லாப் பாமரைக் காக்க வேண்டும் 
செற்றபுலன் பொறியடக்கிச்சேர வேண்டும் 
சித்தமுறச் சிவபூஜை செய்யத் தானே. 
கற்றவர்க்கே பலயோகம கனியும் பாரே. 
"கல்லாதவர் யோகமெல்லாம் பொல்லா யோகம் "
                                                      --- காரைச் சித்தர் 

"கல்லாதவர் யோகமெல்லாம் பொல்லா யோகம் ".. என்றால் அடிப்படையாக நமக்கு கர்மா ,கடமைகள் உள்ளது என்பதை உணர்ந்து செயல்படுதல் .. தானம் , தர்ம நெறி (பண்பாடு , ஒழுக்கம் , ஜீவகாருண்யம் , அன்பு ) இவற்றில் தான் கர்மா கழியும் . நான் என்ற உணர்வு உண்மையாக மறையும் .., "  ஏனெனில் நான் என்ற உணர்வு மறைந்தால் அங்கு அதை சொல்வதற்கு அவரில்லை .. 

தானாயிருக்கும் பிரமத்தின்
         தன்செயல் தன்னை அறிந்தாக்கால்
வானாகி நின்று மறைபொருள்
          ஆனதை வாய்கொண்டு சொல்லுவாரோ ?? ?
                                       - ஏகநாதர் என்ற [ பிரம்மானந்தச் சித்தர் ]
பின்பு தான் யோகம் , ஞானத்தை அடைய முடியும் .சித்திக்கும் . வெறுமனே யோகம் செய்தால் ராவணைப் போலத்தான் சிறந்த சிவபக்தனாக இருந்தும் தவம் செய்தும் .., நவகிரங்கங்களை கட்டுபடுத்தும் சக்தியிருந்தும் .. சபலத்தாலும் ., அகந்தையாலும்  அனைத்தும் வீணாகியது .., ஞானத்தை பற்றி வெறுமனே படித்தாலும் பயனில்லை .. இதை தான் ஸ்கந்த குரு கவசத்தில் "தத்துவ குப்பையை மறந்திட செய்திடப்பா "  என்று வரும் ..,

ஆதாலால் தாம் யாமும் அடிப்படை ஆன்மீக குணங்களை ,கடமைகளை முடிந்த மட்டும் கடைப்பிடித்து ., கடைபிடிப்பதை மட்டும் சொல்கிறோம் . அடிப்படை ஆன்மீகத்தை பின்பற்றி இறைபாதத்தை பற்றினால் 

                                  இல்லாதது இல்லையாகி இரவுமில்லை  பகலுமில்லை 
                                    இறப்பின்றி பிறப்பின்றி ஏகாம்பரன் மூச்சொன்றே 
                                    எல்லாம் உளதாகி ஏகசக்தி ஆகுதப்பா 
                                                                                  -  (மஹா மக தீர்த்த நீராடல் மகிமை)
என்ற ஏக பரம்பொருள் பாதம் பற்றல்லாகும்  ..
இது அடியேனின் கருத்து மட்டுமே எடுத்துக் கொள்வது அவரவர் விருப்பம்  

இப்படிக்கு 
புலிப்பாணி சித்தர் அடிமை 
சித்தர் பைத்தியம்   

No comments:

Post a Comment