எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, March 19, 2014

அதிசியங்களை சுமந்து நிற்கும் அக்னீஸ்வரர் - 2


அதிசியங்களை சுமந்து நிற்கும் அக்னீஸ்வரர் - 2

***இது இறைவனின் வாக்கு போலும் , தரிசித்து விட்டுத்தான் போவோமே என்று நெய்வேலி கிராமத்தை விசாரித்து அடைந்தார்கள் .அங்கே எதிர்ப்பட்ட ஊக்காரர்களிடம் ,”இங்கே காட்டுப் பகுதியில் ஒரு சிவன் கோயில் இருக்கிறதா?” என்று விசாரித்தார்கள் . ஆனால் ,அனைவருமே ஒட்டுமொத்தமாக “ இங்கே அப்படி ஒரு சிவன் கோயில் இல்லை” என்று சொன்னார்கள் . ஆனாலும் , தங்கள் முயற்சியில் சற்றும் தளராத இளைஞர்கள் ஊர் எல்லையில் கல்லால மரத்தின் அடியில் பிரம்மாண்டமான ஒரு புதரைக் கண்டுபிடித்தார்கள். இதற்குள் ஆலயம் ஒருவேளை இருக்கலாம் என்று எண்ணி , ஊர்காரர்கள் உதவியுடன் செடி கொடிகளைக் கொஞ்சம் களைந்து வழி ஏற்படுத்திக் கொண்டு சர்வ ஜாக்கிரதையாக உள்ளே நடந்தார்கள் என்னென்னவோ விநோத ஜ்ந்துக்கள் இவர்களைக் கடந்து சென்றன. கல்லால மரத்தின் அடியில் சிவலிங்கத் திருமேனியைக் கண்டதும் . திக்குமுக்காடிப் போனார்கள் இளைஞர்களும் ஊர்காரர்களும் .

***ஆம் மண் புதருக்குள்ளும் ,செடி கொடிகளின் ஆக்கிரமிப்புக்குள்ளும் பல நூற்றாண்டு காலம் இருந்தாலும் ,பளிச்சென புத்தம் புது லிங்கத் திருமேனி போல் அது தோற்றமளித்தது . கல்லால மரத்தின் வேர்களால் பின்னிப் பினையப்பட்ட கோயில் சுவரின் ஒரு பகுதியையும் கண்டனர் . யாரேனும் நித்தமும் வந்து பூஜை நடத்தி விட்டுப் போனால் எப்படி இருக்கும்? அது போல் அந்த இடத்தில் ஓர் அற்புத மணம் பரவி இருந்தது ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்து விட்டு , கற்பூரம் காண்பித்து விட்டு மனமே இல்லாமல் சென்னைக்கு வந்தார்கள் இளைஞர்கள் , 

பிறகுதான் ,வடபழனியில் வசித்து வரும் ராமமூர்த்தி என்பவரைத் சந்தித்து . இந்த அனுபம் பற்றிச் சொன்னார்கள் இளைஞர்கள் , தான் தரிசிக்க நேரும் பாழடைந்த கோயிகளுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து , முடிந்தால் கும்பாபிஷேகம் வரை போவது வழக்கம் . இந்த இளைஞர்கள் சொன்ன அனுபவம் ராமமூர்த்தியை ரொம்பவும் பாதிக்க ... ஒரு நாள் அவர்களுடன் நெய்வேலிக்கு போய் ஆலயத்தைத் தரிசித்திருக்கிறார் . சிவ தரிசனத்தில் தன்னை மறந்தார் . இதன் பிறகு தான் பிரஸ்னம் , காளியின் உக்கிரம் , விநாயகர் ஸ்தாபனம் , அக்னீஸ்வ்ரருக்குத் தற்காலிக கூரை அமைத்து , அம்பாள் மற்றும் இதர சன்னிதிகளுக்கு கருவறை எழுப்பியது , சுற்றுச் சுவர் எழுப்பியது , ஆலயத்தின் அருகில் உள்ள அக்னி தீர்தத்தை சுத்தப்படுத்தியது என்று இந்தக் குழுவினரின் பணிகள் போய்க் கொண்டே இருக்கின்றன .

***அக்னி தீர்த்தக் குளம் பார்ப்பதற்க்கே அழகாக இருக்கிறது . தெளிவான நீர் ஈசனின் மூன்றாவது திருக்கண்ணில் இருந்து இந்த தீர்த்தம் தோன்றியதாக தேவ பிரஸ்னம் தெரிவிக்கிறது . இந்த தீர்த்தம் சகல வியாதிகளையும் , சர்ப்ப தோஷ்ங்களையும் போக்க வல்லது என்பதும் தெரிய வந்திருக்கிறது .

***இந்த ஆலயத்தில் இதன் பிறகு நடந்து வரும் ஒவ்வோரு செயலும் மாயா ஜாலமாக இருந்து வருகிறது ..., ஆலயத் திருப்பணிக் குழுவினர் சொல்லும் ஒவ்வோரு சம்பவமும் மெய் சிலிரிக்க வைக்கும் விதமாக இருக்கிறது.

“இந்த ஆலயம் கட்டப்பட வேண்டும் எனறால் , கருவூராரும் மற்றும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஆகியோரின் அனுமதி வேண்டும். என்று பிரஸ்னத்தில் சொல்லப்பட்டிருகிறது . அதற்கேற்ற மாதிரி , இருவரின் அருளும் மறைமுகமாகக் கிடைத்த பின்னர் தான் ஆலயத் திருப்பணி வேலைகள் துவங்கினவாம் ..., 

பூமி பூஜை போடுவதற்கான நாள் குறிக்கப்பட்டது .. ஆனால்..... (தொடரும்..)


No comments:

Post a Comment