எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Wednesday, March 19, 2014

அதிசியங்களை சுமந்து நிற்கும் அக்னீஸ்வரர் - 3


அதிசியங்களை சுமந்து நிற்கும் அக்னீஸ்வரர் - 3 
(முக்கியமான பதிவு பொருமையாக படியுங்கள்)

***பூமி பூஜை போடுவதற்கான நாள் குறிக்கப்பட்டது .. ஆனால் , அன்றைய தினத்தில் பூஜையை நடத்தி வேலைகளைத் துவங்க உரிய பண்டிதர் கிடைக்கவில்லை . எனவே, திருவான்மியூரில் அம்மன் கோயில் ஒன்றில் பூஜை செய்யும் அர்ச்சகர் ஒருவர் கிடைத்தார் . பூமி பூஜை செய்ய நெய்வேலிக்கு வருவதாகவும் , அதே சமயம் இரவு ஏழு மணிக்குள் திருவான்மியூர் ஆலயத்தில் விளக்கேற்றி வைக்கத் தான் அங்கே இருக்க வேண்டும் என்றும் , ஒருவேளை தவறினால் தனது வேலையே கேள்விக் குறி ஆகி விடும் என்றும் ,ஆலய அறங்காவலர் அந்த அளவுக்கு கண்டிப்பானவர் என்றும்.இத்ற்கு ஒப்புக் கொண்டு அழைத்துப் போய் திரும்ப விடுவதென்றால் தயார் எனவும் நிபந்தனைகளைச் சொன்னார் அர்ச்சகர் . திருப்பணிக் குழுவினரும் வேறு அர்ச்சகர் கிடைக்காததால் இதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் .

***ஆனால் சோதனையாகப் பார்த்து பூமி பூஜை போடுவதற்கு திருவான்மியூர் அர்ச்சக்ரைக் கூட்டிக் கொண்டு போன தினத்தில் கடும் டிராபிக் ஜாம் . இவர்கள் நெய்வேலி ஸ்ரீஅக்னீஸ்வரர் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்ததே மதிய வேலையில் ., இருந்தாலும் ,பூமி பூஜைக்கு உண்டான பொருட்கள் அனைத்தையும் விறு விறுவென்று எடுத்து அர்ச்சகரிடம் கொடுத்தார்கள். “ஏகத்துக்கும் லேட் ஆகி விட்டதே ... சீக்கிரமாக இந்த பூஜையை முடித்தால்தான் நேரத்துக்கு கோயிலுக்குப் போய் விளக்கேற்ற முடியும் . இல்லாவிட்டால் , டிரஸ்டின் பேச்சுக்கு ஆளாக நேரிடும்” என்கிற எண்ணத்திலேயே முனைப்பாக இருந்தார் திருவான்மியூர் அர்ச்சகர் .ஆனால் திருப்பணிக் குழுவில் இருந்த அன்பர் ஒருவர் , அர்ச்சகரின் அவசர கதியைச் சுட்டிக் காட்டி , 

***“நிதானமாக மந்திரங்களைச் சொல்லுங்கள் எப்படியும் உங்களை ஏழு மணிக்குள் திருவான்மியூர் கோயிலில் கொண்டு போய் விட்டு விடுகிறேன்” என்று சொன்னார். ஆனால் அர்ச்சகர் ஏணோ தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.அடுத்தடுத்த நிமிடங்களில் நடந்ததுதான் ஆச்சரியப்பட வைக்கும் சம்பவம் . மந்திரங்களை உச்சரித்து ஹோமம் செய்து கொண்டிருந்த அர்ச்சகர் திடீரென “ஐயையோ.... யரோ என்னை அடிக்கிறாங்க .... அடிக்கிறாங்க என்று அலறி இருக்கிறார் . ஹோமம் நடக்கும் இடத்துக்கு முன்னால் அமர்ந்திருந்த ஊர்க்காரர்களும் ,திருப்பணி அன்பர்களும் திகைத்துப் போனார்கள் . அர்ச்சகரை நெருங்கி ,”யார் உங்களை அடிப்பது ?எவரும் அடிக்கவில்லையே?” என்று கேட்க .. சிரியாக பதில் இல்லை .. பிறகுதான் அர்ச்சகரிடம் நிதானமாகக் கேட்ட போது .***”மந்த்திரத்தை விடாம சொல்லுன்னு யாரோ அடிக்கிற மாதிரி இருந்தது “ என்று சொல்லி இருக்கிறார் . இந்த ஆலயத்தில் உலவும் சக்த்திகள் பற்றி அப்போதுதான் பலரும் உண்ர்ந்திருக்கிறார்கள் .மெய் சிலிர்த்திருக்கிறார்கள் .

***ஏழு மணிக்குள் விளக்கேற்ற வேண்டுமே? ஒரு குறிப்பிட்ட இடம் வரைக்கும் இவர்கள் காரிலேயே போன அர்ச்சகர் ,அதன் பிறகு பேருந்திலேயே பயணித்து திருவான்மியூரை அடந்திருக்கிறார் . ஆனால் அப்போது இரவு மணி ஓன்பது .”ஆலயத்துக்குள் போய் எப்படியாவது விளக்கேற்றி விட வேண்டும் . லேட்டானால் என்ன .. டிரஸ்டியிடம் வருத்தம் கேட்டு வடலாம்” என்று தீர்மானித்து .அவசரம் அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தார் , கோயில் சாவியை எடுத்து கொண்டார் ., சைக்கிளை எடுத்தார் .வேகமாக மிதித்தார் ..
நன்றாக கவனிக்கவும் கோயிலுக்கு இருப்பது ஒரே சாவி தான் .அது – அர்ச்சகரான இவர்கையில் தான் இருக்கிறது .அதனால் , இவர் போய் தான் விள்க்கேற்றினால் தான் அங்கே அம்மனின் முன்னால் தீபம் பிரகாசிக்கும் ..,

***வியர்வை விறுவிறுக்க கோயிலுக்கு முன் சைக்கிளை நிறுத்தியவர் .திகைத்துப் போஇ விட்டார் .. கோயில் கதவு திறந்திருந்தது . அம்மன் சந்நிதியில் அற்புதமாக தீபம் பிரகாசித்துக் கொன்டிடுந்தது .கோயில் வளாகத்தில் டிரஸ்டி , அவரது மனைவி இன்னும் , ஒரிருவர் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர் .அர்ச்சகரின் முகம் குழப்பத்தில் திவித்தது..
பேந்த பேந்த கோயிலுக்குள் நுழைந்தார் அர்ச்ச்கர் ., டிரஸ்டி இவரை நிமிந்து பார்த்தார் . பிறகு டிரஸ்டியப் பார்த்து “சார் . இப்பத்தான் நான் கோயிலுக்கு வர்றேன் .....உங்களுக்கு கோயில் சாவி எப்படி ...?” அர்ச்சகர் கேட்டார்....
டிரஸ்டி கடுப்பானார் ..” ****யோவ் அர்ச்சகரே ....., வர வர உம் போக்கு சரி இல்லே ... இப்ப நீ பேசறது முன்னுக்குப் பின் முரணா இருக்கு .. நீதான் ஆறேமுக்கால் மணிக்கு வந்து கோயில்ல விளக்கு ஏத்தி இருக்க .. என் சம்சாரம் உன்னைக் கூப்பிட்டு ஏதோ கேட்க .. ஒரு மாதிரி முறைச்சுக்ட்டே போயிருக்கே.. அவ கூப்பிட்டதுக்குப் பதிலே சொல்லலை .. இதெல்லான் சிரியில்ல.. சொல்லிப்புட்டேன்” என்றார் ..,அவர்..

***பிறகு அம்மனுக்கு ஒரு நமஸ்காரத்தை பண்ணி விட்டு .ஆரத்தையைக் காண்பித்து விட்டு வந்த அர்ச்சகர் தரையில் அமர்ந்தார். தான் நெய்வேலி கிராமம் போன கதையையும் , லேட்டாக வீட்டுக்கு வந்த கதையையும் சொன்னார் . டிரஸ்டியிடம் . அங்கு அமர்ந்திருந்த அனனவரும் வாய் பிளந்து இதைக் கேட்டு கொண்டிருந்தனர் .காரணம் – ஆறேமுக்கால் மணிக்கு இதே அர்ச்சகர் வந்து விளக்கை ஏற்றி இருக்கிறார் .

***கிட்டதட்ட அதே நேரத்தில்தான் திருவள்ளூரை நெருங்கி இருக்கிறார் . உண்மையான அர்ச்சகர் . சாவியோ வீட்டில் இருக்கிறது.., வேறு ஏவரும் சாவியை வாங்கி வரவில்லை . அப்படியானால் கோயிலில் விளக்கேற்றியது யார் ??? ... 

(தொடரும்..... )
[ அடுத்த பதிவில் முற்றும்...]

No comments:

Post a Comment