எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, March 19, 2014

அதிசியங்களை சுமந்து நிற்கும் அக்னீஸ்வரர் - 4 ( நிறைவு பகுதி )

அதிசியங்களை சுமந்து நிற்கும் அக்னீஸ்வரர் - 4 ( நிறைவு பகுதி )

***திருப்பணிக் குழுவினர் மற்றும் அந்த அர்ச்சகரிடம் சொன்னார்கள் – “ பாரப்பா .. உன்னை இங்கே கண்டிக்கிற மாதிரி கண்டிச்சு , உனக்காக உன் வேலையைக் காப்பாத்த விளக்கும் ஏத்தி வெச்சிருக்காங்க இங்கே இருக்கிற சித்த புருஷர்கள் ,., நீ எவ்வுளவு பெரிய பாக்கியவான் .”

***ஆம்! படிப்பதற்கு கதை போல் இருந்தாலும் , இவை அத்தனையும் நடந்திருக்கிறது . அடுத்த நாள் அந்த டிரஸ்டியே , அர்ச்சகரை அழைத்துக் கொண்டு நெய்வேலி வந்து தன் சந்தேகத்தையும் நிவர்த்தி செய்து கொண்டதும் , அவரது நான்கு வருட பிராத்தனை ஒன்று இந்த ஆலய வளாகத்தில் அவர் இருக்கும் போதே நிறைவேறியதும் , சித்தர் செயலா ? அக்னீஸ்வரர் செயலா? 

***ஸ்ரீ லலித்தாம்பீகை சந்நிதி , ஸ்ரீ விநாயகர் சந்நிதி ., ஸ்ரீ சுப்பிரமண்யர் சந்நிதி என்று விஸ்தாரமாக அமைய இருக்கிறது இந்த ஆலயம் . பழமை கெடாமல் – பழைய லிங்கத்துக்குத்தான் முதல் மரியாதை !

***எதிர்காலத்தில் இந்தக் கோயில் வெகுவாகப் பிரபலம் அடையும் என்றும் திருக்காளத்திகு ஒப்பான சிற்ப்புக்களைப் பெறும் என்றும் பிரஸ்னத்தில் வந்திருக்கிறது . பிரஸ்னம் பார்க்க வந்திருந்த கேரள ஜோதிடரே இங்கு நிலவும் சக்திகள் குறித்து ஆச்சரியப்பட்டு அந்த அனுபவங்களைத் திருப்பணிக் குழுவினரிடம் பகிந்து கொண்டாராம்.. 

என்ன ...அக்னீஸ்வரர் தரிசனத்துக்குப் புற்ப்பாடாகி விட்டதா ???

(மார்ச் , 2011 திரிசக்தி இதழில் இருந்து தொகுத்தது....)
===============================================

***இத்தல நாதனின் திருநாமம் அக்னீஸ்வரர். அன்னையின் அழகுப் பெயர் லலிதாம்பிகை. பதினெண் சித்தர் பெருமக்களால் தோற்றுவிக்கப்பட்டு இன்றளவும் அனுதினமும் நள்ளிரவில் அவர்களால் வழிபட்டு வரப்படும் இறைவன் இவர். இவர்களில் முக்கியமானவர்கள் கருவூர்தேவர் என்ற கருவூராரும், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரரும் ஆவர். இவ்வாலயத்தை மீண்டும் சீர் அமைக்க வேண்டுமாயின், கருவூரார் மற்றும் நெரூவூராரின் அனுமதி பெற வேண்டும் என்றும் ஒரு திங்கட் கிழமையன்று கருவூராரின் சிவ சந்நதியில் வஸ்திர தானம் செய்ய வேண்டும் என்றும் அதை சித்தர் பெருமானே வலிய வந்து ஏற்றுக்கொள்வார் என்றும் ஆரூடம் சொன்னார்கள். 

***(அதன்படி, சிவ பக்தர் கரூர் சென்று வழிபட்ட சமயம், அதிஷ்டான அலங்காரத்திலிருந்த வஸ்திரத்தை பிரசாதமாக அளித்தும் அடுத்த திங்கட்கிழமை ஒரு முதியவராக சென்னையில் பக்தரின் வீடு தேடி வந்து வஸ்திர தானத்தை விரும்பி கேட்டு, ஏற்று அருள்பாலித்த அதிசயமும் நிகழ்ந்தது. இது கரூவூராரின் அற்புத திருவிளையாடலே!) இங்கு ஓங்கி வளர்ந்து அடர்ந்து பரந்திருக்கும் கல்லால மரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. 

***அன்னை மாகாளி இக்கோயிலின் காவல் தெய்வமாக இம்மரத்தில் உறைகின்றார். இம்மரத்தின் அடியில் ஒன்பது மாமுனிவர்கள் அமர்ந்து இன்றளவும் தவமியற்றி வருகின்றனர். இவர்களே நாகங்களாகவும் கருவண்டுகளாகவும் உருக்கொண்டு இம்மர பொந்துகளில் வாழ்கின்றனர். ***இது சிறந்த நாகதோஷ நிவர்த்தி தலமாகவும் புத்திரபாக்யம் அருளும் தலமாகவும் விளங்குகிறது. விரைவில் இத்திருக்கோயிலை நாடி பக்தர்கள் நாட் டின் பல பாகங்களிலிருந்தும் வருவார்கள் என்றும் ஜோதிடர்கள் கூறியிருக்கிறார்கள். புனித கல்லால மரம் விழுதுகளற்ற ஆலமர இனத்தை சேர்ந்தது. இம்மரமே சிவஸ்வரூபமானது. தட்சிணாமூர்த்தி பெருமான், மௌன குருவாக இம்மரத்தடியிலிருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்ததாக நம் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. 

***சிவனாரின் முக்கண்ணிலிருந்து தோன்றிய இத்திருக்குள அக்னி தீர்த்தத்தில் நீராடி அக்னீஸ்வரரை வணங்கினால், தீராத வியாதிகளும் குணமாகும். திருமணம், புத்ர பாக்கிய சம்பத்துகளும் கைகூடும் என்றும் ப்ரசன்னத்தில் குறிப்பிட்டார்கள்.
முகவிரி :- திருவள்ளூர் கலெக்டர் ஆபீஸிலிருந்து ஊத்துக்கோட்டை சாலையில், பூண்டி கூட்டு ரோட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது, நெய்வேலி அக்னீஸ்வரர் ஆலயம்.

1 comment: