எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, March 18, 2014

அறிவியல் --- திருமந்திரம்

அறிவியல் --- திருமந்திரம் 

பொதுவாகவே விஞ்ஞானிகள் பேச்சு வேடிக்கையாக இருக்கும் அல்லது எரிச்சல் வரும் . ஆனால் கலைக்கதிர் அறிவியல் டாக்டர் "க.மணி" என்பவர் ரேடியோவில் பேசும் போது அவரது ரசிகனாகி இருக்கிறேன் .., அழகாக ஆழமாக , தெளிவாக ஒவ்வொரு கருத்தையும் நிறைவாக பதிவு செய்வார் .., இறை என்ற பிரபஞ்ச சக்தி உண்டு என்று உறுதியாக கூறுவார் .., அவரது "அணு ,உயிர் ,அண்டம் "எனும் புத்தகங்கத்தில் இருந்து ஒரு துணுக்கு செய்தி :-

எலெக்ட்ரானுக்கு அதன் இருப்பிடமும் ,வேகமும் ஒரே சமயத்தில் துல்லியமாக இருப்பதில்லை ,பரவி இருக்கும் போது தன் இருப்பிடத்தையும் ,தனித்து இருக்கும் போது தனது பரவுதலையும் எலெக்ட்ரானே அறிந்து கொள்ள முடியாத நிலை இருக்கிறது .

மரத்தில் மறைந்தது மாமத யானை
மரத்தை மறைத்தது மாமத யானை
பரத்தில் மறைந்தது பார் முதற் பூதம்
பரத்தை மறைத்தது பார் முதற் பூதம்

என்ற திருமூலரின் திருவாக்கு நினைவுக்கு வருகிறது ., மரத்தில் செய்த யானையைப் பார்த்து குழந்தை அஞ்சுகிறது .அப்போது யானை என்ற விலங்கின் உருவத்தில் மரம் மறைந்து விட்டது .சிலையைத் தட்டிக்காட்டி குழந்தையின் பயத்தை நீக்கிய பின் மரம் வெளிப்பட்டு யானை மறைந்துவிடுகிறது .ஒரே சமயத்தில் நமக்கு யானை என்ற பயமும் ,மரம் என்ற தெளிவும் எற்ப்படுவதில்லை .தெளிவு வந்ததும் பயம் இருப்பதில்லை ., பயம் இருந்த போது தெளிவு நிச்சியம் அங்கே இல்லை ., இது தான் நிச்சியமிமைக் கோட்பாடு ! --

1)இது அவர்கள் அறிவியல் பார்வையில் எலெக்ட்ரானை ஒத்து உவமை செல்கிறது

2)இதே பாடலுக்கு உரை பலவாறாக பிரிக்கலாம் ., பிரித்து கூறியிருக்கிறார்கள்

3)ஆனால் தூய மெய்ஞானப் பாதையில் இன்னும் அறிவியலைத் தாண்டி ஒரு பேரானந்த பராபர விளக்கம் இருக்கும் ..

இதனால் தான் சித்தர் பாடல்களுக்கு பொருள் எடுத்து கொள்ளும் விதம் .., அவரவர் ஆன்ம நிலைக்கு ஏற்ப அமையும் என்பார்கள் .,அதனால் தான் சித்தர் பாடல்களுக்கு அபத்தமான பொருள் வேண்டாம் எனக் கூறினோம் .


இறை தரிசனம் பெற்ற நால்வர்கள் திருமறை ., சிவபுராணம் ., கந்த சஷ்டி ., சமயக் குரவர்கள் கொடிக்கவித் துதி , திருப்புகழ் ,திருப்பாவை போன்ற பாடல்களை தொடர்ந்து பாடப் பாட சுவாசக் களைகளும் சீர்பெறும் எத்தனையோ நன்மைகளும் இறை அருளோடு கிடைக்கும் .
ஆனால் தற்போது சித்தர் பாடல்களைப் பலரும் படிப்பது .பொருள் கண்டுபிடிக்க முயல்வது ., வீண் ஆராய்ச்சி , தேடல் என்று காலம் தான் செலவாகிறது . அதனால் சித்தர் பாடல்களை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை ஓரிரு முறை படித்து சிந்தித்தல் ,மகிழ்தளோடு நலம் . ஏனனெனில் அவரவர் வினைக்கேற்ப தான் அனைத்தும் நடக்கும் .., கர்ம வினையை குறைக்கும் மார்கத்தை முதலில் தெளிந்து நடத்தல் வேண்டும் .., எடுத்து கொள்வது அவரவர் மனப்பாங்கு . திருமறை பதிகங்கள் , திருப்புகழ் ,சிவபுராணம் ., கந்த சஷ்டி .,திருப்பாவை கொடிக்கவித் துதி இவற்றில் அனைத்து வேதச் சாரங்களும் உள்ளன

No comments:

Post a Comment