எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Wednesday, March 19, 2014

குரு......

இதற்கு முந்தைய பதிவை படித்து விட்டு இந்த பதிவை தொடரவும் அன்பர்களே ,

சத்குருவை அறியும் பாங்கு !

சத்குருவை அறிதல் எளிதல்ல . இருதயப் பூர்வமாகவே உணர முடியும் , ஆழ்ந்த நம்பிக்கை தான் இதனை உணர்விக்கும் .இவர்தான் "சத்குரு" என அறிகையில் , மனமும் மௌனமாகும் . அதன் பிறகு வாழ்வில் நடக்கும் அனைத்துமே பூர்வ ஜன்மக் கர்ம விளைவுகளால் ஆவதே , எதையும் ஏற்று அனுபவித்துக் கர்ம வினைகளைக் கழித்து வாழ்வோம் என்ற உண்ர்வுடன் செயல்படும் பாங்கும் தானாகவே உறைந்தமையும் . " - ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் செப்டம்பர் 2005 .


================================================

அகத்தியெம் பெருமானின் கீழ்க்கண்ட ஜீவ அருள் நாடி வாக்கை பொதுவில் வெளியிடும் அதிகாரம் எமக்கு இல்லை .., இருப்பினும் முருகப் பெருமான் துணை வேண்டி ., , அகமர்ஷண மகரிஷியை துதித்து ., அகத்தியெம் பெருமான் தாழ் பணிகிறோம் . இதோ ..., இரண்டு ஆண்டிற்கு முன் அகத்தியெம் பெருமான் ஜீவ அருள் நாடியில் ஒரு அடியாரின் கேள்விக்கு இவ்வாறு பதில் தருகிறார் ..

அகத்தியெம் பெருமான் : குரு என்று நீ யாரை கூறுகிறாய் ?

அடியார் : மனிதர்களே கூறிக்கொண்டு அவர்களுக்குள் இருக்கின்றவர்களில் உயர்ந்த நிலையில் இருக்கின்றவர்களாக ( நினைத்து கொண்டு )அல்லது அவ்வாறு கூறிக்கொள்பவர்கள் ...

அகத்தியெம் பெருமான் : அதையெல்லாம் நாங்கள் குரு என்று எவ்வாறு ஏற்று கொள்வது ???

*** எவனுக்கு பிறர் கர்ம வினைகளை மாற்ற கூடிய சக்தி இருக்கிறதோ !!!

*** எவனுக்கு மனிதனின் விதியை மாற்ற கூடிய சக்தி இருக்கிறதோ !!!

*** எவனுக்கு தீட்சை எனும் உண்மையான மெய்ஞான தீட்சையை தரக்கூடிய தகுதி இருக்கிறதோ , அதாவது தீ எனப்படும் ஆக்னியிலே ஒருவனுடைய பாவங்களையெல்லாம் அழிக்கக்கூடிய சக்தி எவனுக்கு இருக்கிறதோ !!!

*** எவனை சந்தித்தாலே வார்த்தைகளின்றி அவன் உள்ளத்தில் ஓடுகின்ற அனைத்தையும் அந்த மனிதன் புரிந்துகொள்கிறானோ ஆகுதப்ப நிலையில் உயர்ந்தவன் தான் குரு., அப்படி யாரவது இருந்தால் "குரு" என்று கூறலாம் . 

“மண்ணுலகில் இப்பொழுது அப்படி யாரும் இல்லையப்பா மனிதர்கள் அறிகின்ற வகையில்“. !!!
-------------------------------------------------------------------------------------

இது தான் சித்தர்கள் பாணி "நான்கு வரி தான் ஆனால் நான்கு யுகங்களையும் தாண்டி .. சதுர் கோடி யுகங்களுக்கும் பொருந்துவதாய் அண்டசராசரமெங்கும் பரந்து விரிந்து ஓங்கி ஒலிக்கும் அன்றோ இந்த சத்திய வாக்கு நித்தியத்துவமாய் என்றென்றும் " .

பசுமரத் ஆணி போல் “மண்ணுலகில் இப்பொழுது அப்படி யாரும் இல்லையப்பா மனிதர்கள் அறிகின்ற வகையில்“ இந்த வாக்கியங்களை மனதில் பதித்து வைத்து கொள்ளுங்கள் .

“மனிதர்கள் அறிகின்ற வகையில்“

இந்த வரியின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளத் தான் "சத்குருவை அறியும் பாங்கு” பற்றி ஸ்ரீ அகஸ்த்தியர் விஜயம் இதலில் இருந்து அந்த ஒரு குறிப்பை முதலில் கொடுத்தோம் “.

அப்படியானால் " தற்போதைய சுவாமிஜி , குருஜிகள்" பற்றி உங்கள் எண்ணத்திற்கே விட்டு விடுகிறோம் " அகத்தியெம் பெருமானின் இந்த வாக்கை எடுத்துக் கொள்வதும் அவரவர் விருப்பம் அஃதே .

ஆனால் தற்போது ஆன்மீக உலகில் நடப்பது என்ன??

“சித்தர்கள் பெயரையும் , இறைவன் பெயரையும் வைத்து கொண்டு எமாற்று வொரை சித்தர்களும் ., இறைவனும் ஏன் விட்டு வைக்க வேண்டும்? ...,” மெய்யான மெய்ஞான பாதையில் செல்வார்க்கு இக்கேள்வி எளாது .., இப்பொழுதாவது இறையருளால் நமக்கு இந்த விஷியம் தெரிந்த்தே என்று மகிழ்ச்சி கொள்வார்கள் .., இல்லை பதில் வேண்டும் என்றால் . யமக்கு தெரிந்த பதிலை கூறுறோம் ...”

“சித்தர்கள் பெயரையும் , இறைவன் பெயரையும் வைத்து கொண்டு எமாற்று வொரை சித்தர்களும் ., இறைவனும் ஏன் விட்டு வைக்க வேண்டும் ?இதை விட இன்ணொரு கேள்வி கேட்களாமே ஏன் கெட்டவர்களை முதலில் படைக்க வேண்டும் ..., இந்த கேள்வியே நீண்டு உலகத்தை இறைவன் ஏன் ,எதற்கு படைக்க வேண்டும் ., இறைவன் எங்கிருந்து வந்தார் . என்று இறைவன் படைத்த ஆறறிவை வைத்து இறைவனை தேடும்/ கேள்வி கேட்கும் நிலையில் தாம் நாம் உள்ளோம் ..., அஃதே அனைத்தும் வினைப்பயன் என்று உளமார ஏற்று தர்ம நெறியோடு வாழ்ந்து முடிந்த தானம் செய்து இறைவன் திருப்பாதம் பற்றி நடந்தால் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தானாய் சுயமாய் குருவாய் மொழியாய் உணர்விக்கபடும் ..., அவ்வாறு உணர்விக்கவட்டவர்கள் வாய்திறவார் ஏனெனில் ..., " கண்டவர் விண்டதில்லை ., விண்டவர் கண்டதில்லை " யாவரும் அறிந்தது தானே !!!


தானாயிருக்கும் பிரமத்தின்
தன்செயல் தன்னை அறிந்தாக்கால்
வானாகி நின்று மறைபொருள்
ஆனதை வாய்கொண்டு சொல்லுவாரோ?
- ஏகநாதர் என்ற [ பிரம்மானந்தச் சித்தர் ]

No comments:

Post a Comment