எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Wednesday, March 19, 2014

ஸ்ரீ ராகவேந்திரரின் பரமகுரு! - ஸ்ரீ விஜயீந்திரர்

***(மந்திராலய மஹான் ஸ்ரீராகவேந்திரரின் பரமகுரு! - ஸ்ரீ விஜயீந்திரர்.) ஸ்ரீராகவேந்திரரின் பரமகுருவாக விளங்கியவர் இவர். அதாவது, குருவின் குரு. ஸ்ரீராகவேந்திரரின் குருநாதர் ஸ்ரீசுதீந்திர தீர்த்தர். இவரின் குருநாதரே ஸ்ரீவிஜயீந்திரர் இவர் ஆயகலைகள் 64-லிலும் வல்லவர். அத்தோடு அந்த 64 கலைகளிலும் வல்லவர்களாய் இருந்தவர்களைப் போட்டியிட்டு வென்ற வெகு அபூர்வமான புருஷர்.

****ஆந்திர தேசத்தில் அவதரித்தாலும் தமிழகத்தின் கோயில் நகரமாம் கும்பகோணத்தில் ஸ்ரீமடம் அமைத்தார் விஜயீந்திரர் (பிரளய காலத்தில் காஸ்யப முனிவர் தவம் இருந்து, ஸ்ரீமந் நாராயணரின் தரிசனம் கிடைக்கப் பெற்ற இடமாம்). அங்குள்ள கோயில்களின் நிர்வாகப் பொறுப்பைச் சிறப்புற ஏற்றது மட்டுமின்றி, ஊர் மக்களையும் ஆசீர்வதித்தவர் விஜயீந்திரர்

ஸ்ரீ விஜயீந்திரர் :-
97 ஆண்டுகளாக அருள்பாலித்து வந்த மஹான் இவர் . மத்வரின் துவைத சித்தாந்த்ம் நிலைத்திருப்பதற்கு இவறே காரணம் என்று கூறுவோரும் உண்டு கி.பி 1517 முதல் 1614வரை வாழ்ந்தவர் .மந்திராலய மஹான் ஸ்ரீராகவேந்திரரின் பரமகுரு ! இவர் இயற்றிய 104கிரந்தங்கள் இன்றும் துவைத சித்தாந்த்க் கோயிலின் கலசங்களாகத் திகழ்கின்றன . 1614-இல் சமாதியடைந்தபோது இவருக்கு வயது97. இன்றும் அவர் சூட்சும வடிவில் உலாவுவதை உணரமுடிகிறது . கும்பகோணம் வடமேற்கு பாகத்தின் காவிரியாற்றின் தென்கரையில் 159,சோலயப்பன் தெரு என்னும் விலாசத்தில் இவரது சமாதி இருக்கிறது.
No comments:

Post a Comment