எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, March 18, 2014

கொடுவிலார்பட்டிச் சித்தர்

***சித்தர் களஞ்சியம் புத்தகத்தை எழுதிய யோகி கைலாஷ்நாத் அவர்கள் விஞ்ஞானம் படித்துவிட்டு அறிவியல் ஆதாரத்தோடு நிருபிக்கப் படக்கூடிய உண்மைகளை தேடிகொண்டிருந்ததாக சித்தர் களஞ்சியம் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் . பல வருடம் இமயமலைக் குருகுலக் கல்வி பல்வேறு இடங்களில் பயின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார் . 

இதோ அந்த சித்தர் களஞ்சியம் புத்தகத்திலிருந்து மேலும் சில வரிகள் :
***" என் இமயமலைக் குருகுலக் கல்வியின் இடைவெளிக் காலங்களில் தமிழ்நாடு வரும் போதெல்லாம் நான் செய்த செய்த முயற்ச்சி கொடுவிலார் பட்டிச் சித்தரை நேரடியாகச் சந்திக்க எடுத்துக்கொண்டதுதான் ..1986ல் சந்திக்க முயற்ச்சி செய்து இறுதியாக அவர் என்னைத் தன்னைப் பார்பதற்கு அனுமதித்தது 1998ல் ." எனக்குத் தெரிந்து இந்தக் கொடுவிலார்பட்டிச் சித்தரிடம் தான் நான் ஒரு முக (ஏகமுகி) உத்ராட்சம் பார்த்து இருக்கிறேன் . தான் வைத்திருந்த ஏகமுகம் என்ற ஒரு முக உத்ராட்சத்தை எடுத்து வந்து ஒரு குடத்தில் பாலை ஊற்றி அந்தப் பாலுக்குள் அந்த ஒரு முக உத்ராட்சத்தைப் போட்டு மூழ்கச் செய்து காயத்ரி மந்திரம் இன்ன பிற சித்தர் மந்திரங்களை உச்சரித்தவுடன் குடத்திலிருந்த பால் முழுவதையும் ஒரு முக உத்திராட்சம் குடித்துவிட்டிருந்தது . மீண்டும் அதே மந்திரங்களை திருப்பி மாற்றித் தலைகீழாக உச்சரித்தவுடன் குடித்த பாலையெல்லாம் அந்த ஒரு முக உத்திராட்சம் கொப்புளித்து குடத்தில் நிரப்பிவிட்டது .இந்த ருத்திராட்சம் சிவனுடைய அனுக்ரகத்தால் சித்தர் நவபாஷாண முருகன் சிலையை வடிவமைத்தபோது நேபாளத்தில் வைத்து ஆதிசிவனால் கொடுக்கப்பட்டதாகும் .மேலும் இந்த ருத்திராட்சம் நேபாள மன்னர்கள் தாங்கள் பூஜையறையில் வைத்து சுவாமிகளால் சொல்லப்பட்ட மந்திரத்தைத் தினசரி உச்சாடனம் செய்து பூசைகள் செய்து வந்தனர் . 2002ல் சுவாமிஜி அதை அவர்களிடம் இருந்து தம் உபயோகத்துக்காகத் திருப்பி வாங்கியவுடன் மன்னர் தம்பியால் சுடப்பட்டார் .அந்த மன்னர் ஆட்சியே கலைக்கபட்டது .தற்போது அந்த உருத்திராட்சத்தைச் சித்தர் பெருமகன் யாரிடம் கொடுத்தார் என்று யாருக்குமே தெரியாது .சிவனால் கொடுக்கப்பட்டதை சிவனே எடுத்துக் கொள்வார் என்று சித்தர் ஒருமுறை சொல்லியுள்ளார் .

***சுவாமிஜி சித்தர் பெருமகன் ஆவியுலகத் தொடர்புள்ளவர் .இரவு 12முதல் 3.00 மணிவரை ஆவிகளை வரவழைத்துப் பேசும் மீடியமாக இருப்பார் . ஒரு முறை தன் தந்தையின் ஆவியை அழைத்துப் பேசினார் . அப்படிப் பேசியபோது சச்சிதானந்தப் பெருமானின் ஆவியானது தன் மகனாகிய சித்தரிடம் என் சமாதியைக் திறந்து பார்த்து என் அழியாமல் இருக்கும் உடலை எடுத்து ஊர்வலமாகக் கொண்டு வந்து மீண்டும் அடக்கம் செய்துவிடு என்று சொல்லியது .அதன்படியே 1977ல் வைக்கபட்ட சமாதியானது மீண்டும் 1991ல் 14ஆண்டுகள் கழித்துத் திறக்கப்பட்டது . 1977ல் வைக்கப்பட்ட போது எப்படி இருந்ததோ அதே போலவே 1991லும் இருந்தது . இந்தக் காட்சிக்கு இந்நூலாசிரியரும் ஒரு சாட்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது .இந்நிகழ்ச்சிக்கு பிறகு சித்தருக்கும் எனக்கும் இருந்த நெருக்கம் அதிகரித்தது .

****இக் கொடுவிலார்பட்டிச் சித்தர் அகத்திய முனிவரின் சீடர் .மேலும் அகத்திய முனிவரே நேரில் ஆட்கொண்டு ஞானி ஆக்கினார் . ஸ்ரீ காகபுசண்டரும் ஸ்ரீ பகுளாதேவியும் சித்தரை நேரடியாக ஆட்கொண்ட நிகழ்சிகளும் உண்டு .****ஒரு முறை புகழ்பெற்ற நரம்பியல் நிபுணரான டாக்டர் கே.ராமமூர்த்தி அவர்கள் முன்னால் இறந்து காட்டி விஞ்ஞான மருத்துவ உபகரணங்களை எல்லாம் செயல் இழக்கச் செய்துள்ளார் .

****முன்னாள் பாரதப் பிரதமர் திருமதி .இந்திராகாந்தி முன்பாக ஒரு முறை வானில் பறந்து காட்டியுள்ளார் . திருமதி இந்திராகாந்தி இந்த நிகழ்ச்சிக்குப் பின் ஒரு முறை கொடுவிலார்பட்டி ஆசிரமத்துக்கே வந்து சென்றுள்ளார் .

****இந்நூலரியனாகிய எனக்கு ஒரு முறை அமானுஷ்யங்களை நேரில் செய்து காட்டியுள்ளார் . நான் அமர்ந்து இருந்த சேரில் இருந்தபடியே அப்படியே மேலெழும்பி மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறிக்கு இடையில் சென்று அமர்ந்து மின்விசிறியின் இறகுகள் தன் ஒளி உடம்புக்குள் நுழைந்து வருமாறு செய்துள்ளார்

****ஆன்மீகத் தேடல் இருப்பவர் ஒவ்வொருவரும் வந்து செல்ல வேண்டிய நிலையமும் கூட . இந்நிலையத்துக்கு வந்து சென்ற முக்கியமானவர்களில் சிலர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ,திரு G .K மூப்பனார் , திருமதி இந்திராகாந்தி , திரு C .சுப்பிமணியம் , டாக்டர் . k .ராமமூர்த்தி .

No comments:

Post a Comment