எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, March 19, 2014

செல்லூர்....,


*யுகங்கள் சென்றாலும் தவம் அகன்று செல்லாத் தலம் !!!

*தவச்செல்லத் தழிச்செல்வத் தலம்,!!!

*யுகந்தோறும் உவக்கும் சிவத்தமிழ் பவத்தலமே செல்லூர் !!!***தீய வழக்கங்களை , கெட்ட சகவாசகங்களை அகற்றி வாழ்க்கை முழுதும் நற்குணங்களை வார்த்தருளும் செல்லூர் குணாம்பிகை***

***கோடிக்கணக்கான யுகங்களைத் தாண்டிப் புற்றே வளர்ந்து தம் உடலை மூடியும் இன்றும் தவத்தை இடைவிடாது சித்தர்கள் தொடரும் தவபூமியே செல்லூர்ச் சிவபூமி ஆகும். 

*** “சித்தர் சுவாமி! பிரளய வெள்ளம் வந்து விட்டது . புற்று மலையே கரைந்து விடுமே , தவத்தில் இருந்து எழுந்து வாருங்கள் !!” என்று அரும்பெரும் மஹரிஷிகளே கூவி அழைத்தனர் 

“செல்லரித்துப் போனாலென் ! சிவனாரே வந்திரிக்கும்வரை அர(ற)த்தவம் செல்லும் காண்”! 

என்று சித்தர்கள் பதில் குரல் கொடுத்தனர் .இவ்வாறு செல்லரித்த உடலிலும், புற்று மண்ணால் மூடப் பெற்ற போதும் , சித்தர்களின் கனிந்த சிவதவ பல(ழ)த்தை மென்மேலும் கனிய வைப்பதே செல்லூர் சிவத்தலம்.

***செல்லூர் செல்லா மானுட வாழ்வு செல்லரித்த வாழ்வே ! எனவே வருடத்திற்கு ஒரு முறையெனும் செல்லூர் சிவதரிசனத்தை குல தெய்வ வழிபாடு போல் கொண்டிடுக !

***உத்தம் தெய்வீக விள்க்கங்களில் நற்புண்ணியத்தையும் “செல்அரியா அரிஅரச்செல்வம்” என்றே தெய்வ குணப்பெயராகப் போற்றுகின்றார்களே !!

*** அகஸ்தியர் நட்சத்திர சூக்த மந்திரங்களை ஓதி வழிபட்ட தலம்

--, [ ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் 2009ஜுன் இதழில் இருந்து தொகுத்தது ]

திருவாரூர் –கும்பகோணம் மார்கத்தில் ,கொரடாச்சேரி – குடவாசல் இடையில் ( திருக்களம்பூர் பாடல் பெற்ற தலத்திற்கு மிக அருகில் செல்லூர் உள்ளது [ கைலாசநாதர் சமேத குணாம்பிகை ஆலயம் .]

No comments:

Post a Comment