எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, March 19, 2014

பஞ்சாங்க படனம்


யாவர் இல்லத்திலும் தினமும் பஞ்சாங்க படனம் நிகழ்வதாகுக !!!

***தினமும் காலையில் பஞ்சாங்கத்தை படிப்பது ,சிறப்பான காலபைரவ பூஜையாகும் . கீழ்க்கணட தொன்மையான பஞ்சாங்கத் துதியொன்று தினமும் பஞ்சாங்கத்தைப் படித்து வருவதன் பலாபலங்களை திவ்யமாய் எடுத்துரைக்கின்றது .

“நிதந்தோறும் திதி சொல்ல நெடிய திரு கிட்டும்
பதங்கிழமை பரி சொல்ல பரிந்தநல் ஆயுளாம்
சுததாரை நாச்சொல் நனிபாவ மகலுவதாம்
பதயோகம் கூறிடவே பொல்லாப் பிணி போகும்
சதகரண சாதகமும் காரியநற் சித்தியாம்
இதனைவப் பஞ்சாங்கப் படன மென்றாமே”

(திரு – நீடித்த செல்வம் , தாரா – நட்சத்திரம் )
--- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம்
===============================================


***குறிப்பு :- திதி, ஏழு கிழமைகள் , நட்சத்திரம் , யோகம் ., கரணம் – ஆகிய ஐந்து பஞ்ச (5) கால அங்கங்களும் தினமும் மாறி வருவதை விளக்குவதே பஞ்சாங்கம் எனும் புனிதமான நூல்.

***உதாரணமாக இன்றைய நாள் = செவ்வாய் ., திதி = நவமி ., நட்சத்திரம் = ஆயில்யம் ., யோகம் = மாகேந்திரம் ., கரணம் – ப்வம்... , ஆக

"ஒஃம் செவ்வாய் தேவதா மூர்த்தி போற்றி
ஒஃம் நவமி திதி தேவதா மூர்த்தி போற்றி
ஒஃம் ஆயில்ய நட்சத்திர தேவதா மூர்த்தி போற்றி
ஒஃம் மாகேந்திரம் யோக தேவதா மூர்த்தி போற்றி
ஒஃம் ப்வம் கரண தேவதை மூர்த்தி போற்றி !!! "

என்று கூறி எளிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம்
.., இது போக அனைத்து கால தேவதா மூர்த்திகள் வழிபாடும் உள்ளது .., அடுத்த பதிவில் ஹோரை வழிபாடு பற்றி கூறுகிறோம் .., 

***காலத்தை அறிதல் மிக முக்கியம்., முக்காலத்திலும் வாழ்ந்து கடக்கும் மார்கத்தை அறிதல் தாம் முக்தி . மோட்சத்திற்கான வழிகளை காட்ட வல்லவை...,

No comments:

Post a Comment