எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, March 19, 2014

மத்துவரசி ஓங்காரத் தத்துவம்.....,

ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில்யிருந்து :--

***தெய்வ மூர்த்திகளிடையே நிகழ்கின்ற ஓங்காரத் தத்துவப் பரிமாற்றங்களுள் ஒன்றே மத்துவரசியாம்! தண்டபாணித் தெய்வமாம் முருகப் பெம்மான் தன் தந்தையாம் 
சிவபெருமானுக்கு உரைத்த ஒங்காரப் பொருளே மத்துவரசி ! இது சித்தர்களுடைய சிருஷ்டியைப் பற்றி உணர்விப்பதாகும் .

*** மத்துவரசி ஓங்காரத் தத்துவம் மூலம் சித்தர்களை உதிக்க வைக்கும் சிக்கல் சிங்காரவேல மூர்த்தியை ட்க்கென்று எளிதில் அடைந்து விடலாமே!!!

*** உலகின் ஒவ்வோரு உயிரினத்தின் ஆத்மசக்தியும் “ஆவினம்” என்ற பலகோச உறையில் வாழைப் பூ போல் , தேங்காய் போல் மூடப் பெற்று வரும் இந்த ஆவினத்து உறைக்குள் பல கோசங்கள் , கோட்டைகள் உண்டு.

*** பழநிதானே ஆவினன்குடி! முருகப் பேரொளியில் ஆத்மா எளிமையாய் ஐக்கியமாக வல்லது என்பதால்தான், முருகப் பெருமானும் ஆவினங்குடியில் (பழநி) குடி கொண்டு அருள்கின்றார்.

*** அதாவது ஆத்மாவானது , ஆவி போன்று நுண்ணியதாய் உள்ளுள் நன்கு குடி இருக்கும் இடமே ஆவினங்குடி இது இறைவனின் திருவடிதானே ! ஆவி எனும் நுண்ணிய உயிரொளி, நன்கு சாசுவதமாய் குடி (நிலைத்து) இருப்பதற்கு . ஆவினங்குடியே சிறந்த குடியிருப்பு.

“ மக்கள் பிற மாக்களாய் பிற அற்ற தேசத்தில் பிறந்திடலாம் .கொண்ட மக்கள் ஈசன் எண்ணத்துடன் பூண்டிருப்பவனாயும் பிறந்திடலாம் . இருப்பினும் , ஒரு செஞ்சொற் பொருளாய்க் கூட்டி வந்த , தமிழாய் ஆகி இருக்கும் திருவருள் முருகன் இடத்தில் பற்றுதல் வைத்துப் பிறக்கின்ற ஊரில் பிறப்பது அரிது பாரேன்!” – (ஸ்ரீ அகஸ்தியர் )

===============================================

சித்தர்கள் சிருஷ்டியே முருகனிடத்தில் தாம் எனில் என்னே ,,!!! .. விந்தை சிறப்பு ... சர்வ கோடி சித்தர்களின் அருளும் ., தரிசனமும் , ஆசியும் சுயம்பாய் வார்க்கப் பெரும் ..., கந்த சஷ்டி துவக்கம் ..., வரும் 6 நாட்களில் ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் அமிர்தத் தாரையில் இருந்து முக்கியமான சிறப்பு வாய்ந்த முருகப் பெருமான் ஆலயங்களை பகிர்ந்து கொள்கிறோம் ., நன்றி....

No comments:

Post a Comment