எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Tuesday, March 18, 2014

சுகர் ஜீவ நாடி

ஸ்ரீ சுகர் ஜீவ நாடி அற்புதங்கள் "புத்தகத்திலிருந்து சில வரிகள் ...."

நாடிக் குறிப்பு தேதி : 25.4.1996

இமயமலைப் பிரதேசத்தில் "சுக்தேவ் வாடிகா" எனும் இடத்தை நான் தரிசித்து வந்து சென்னையில் நாடி வாக்குக் கேட்டபோது எனக்கு ஸ்ரீ சுகர் அளித்த வாக்கு இது : " நீ கண்ட இந்தக் குகையின் சூட்சும நிலைகளை யார் அறிவார் ?

நேர்வழியாகச் சென்றால் ஹரித்துவார் போகலாம் . வலப் புறமாகச் சென்றால் கைலாயப் பகுதியையும் குபேரப்பகுதியையும் அடையும் வழியன்றோ ? இடக்கைப் பக்கம் சென்றாலோ கேதாரநாதன்,பத்ரிநாதனைத் தரிசித்து விட்டு அங்கு என் தந்தை வியாசன் குகை செல்லக்கூடிய வழியன்றோ அது ? நீ சற்றே மேலாகச் சென்றிருந்தால் என்னையும் காகபுஜண்டரையும் கண்டிருக்கலாம்

நாடிக் குறிப்பு : 27.4.1996

ஸ்ரீ சுகர் வாசம் செய்த குகையின் போடோக்களைச் சென்னை ஸ்ரீ சுகர் ஆஸ்ரமத்தில் அவர்தம் பாதத்தில் வைத்து அவர்தம் வாக்கினைக் கேட்க ஸ்ரீ சுகர் விளக்க உரையை நீங்களும் அனுபவியுங்களேன் ..

நீ கண்ட குகையில் யாம் இக்காலத்திலும் வாசம் செய்கின்றோம் அன்றோ ?

விதி உடையோருக்கு யாம் நேரில் காட்சி அளித்தும் ,விதியிலார்க்கு கிளி உருக் கொண்டும் காட்சி தருவோம் அன்றோ ? ..........................................
நாம் தவம் இயற்றும் குகையின் படத்தைப் பெரிதாக அமைக்கும் போது என் உருவைக் காணும் படி அமையும் அன்றோ ? இக் குகையின் உருவப் படத்தை வைத்துப் பூடனை நிலை காண்போர் பூரணத்துவ நிலையை வாழ்வில் பெருவாரன்றோ ? ........

-----------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு : அந்த "சுக்தேவ் வாடிகா குகையின் " படத்தை புத்தகத்தில் போட்டிருந்தார்கள் . உற்று பார்த்த போது ஸ்ரீ சுகரின் முக உருவ அமைப்பு தெரிகிறது ..இரண்டு வருடம் முன்பு யாம் இந்த புத்தகத்தை வாங்கி படித்தும் .., சென்ற வருடம் தான் எதேற்ச்சியாக மீண்டும் அந்த பக்கத்தை பார்த்த போதுதான் ஸ்ரீ சுகரின் முக உருவ அமைப்பு தெரிந்தது .. மெய் சிலிர்த்தது ..எல்லாம் குருவருள் , குருசெயல் , குருவே துணை , குருவே சரணம் .!!!

1 comment:

  1. ஐய்யா, வணக்கம். சுகர் ஜீவ நாடியில் குறிப்பு வந்ததையறிந்து மகிழ்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள சுகர் ஜீவ நாடி அற்புதங்கள் புத்தகம் எங்கு கிடைக்கும். பதிப்பகம் என்ன என்பதையறிந்தால், வாங்கி பயனடையலாம். மிக்க நன்றி.

    ReplyDelete