எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Wednesday, March 19, 2014

காவி அணியக் கூடாது ஐயா கூடாது.


••• காவி அணியக் கூடாது ஐயா கூடாது... •••!!!

••• ஐயப்ப விரதம் ., கோயிலுக்கு செல்லும் போது காவி அணிதல் பின்பு களைதல் இவையெல்லாம் ஒவ்வாத செயல்கள் .•••

•••[யாமும் ஒரிரு முறை இவ்வாறு செய்திருக்கிறோம் . ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் காவி உடை பற்றி இரண்டு வருடம் முன்பு கீழ்கண்ட விஷியத்தை படித்தேன் ., அதிலிருந்து யாம் இந்த தவறு செய்வதில்லை..., படித்ததை பகிர்கிறேன் .. எடுத்திக் கொள்வது அவரவர் மனப்பாங்கு..., ]

•••தற்காலத்தில் ஸ்ரீ ஐயப்ப விரதம் மற்றும் பலவிதமான விரத காலங்களில் காவியை உடுத்திப் பிறகு களைந்து விடுகின்றார்கள், இனியெனும் இந்தத் தவறை செய்யாதீர்கள் .

••• எவ்வாறாக ஒரு துறவியின் காவி உடையானது தயாரிக்கப்பட வேண்டும் என்ற நியதிகளை முறைகளை நம்முடைய சாஸ்திரங்களிலும், சித்தர்களுடைய அருள் முறைகளிலும் மிகவும் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளன .., இயற்க்கை சாயப் பூச்சு ,மட்டுமே காவி உடைக்கு ஏற்புடையது . எக்காலத்தும் இரசாயனக் காவி கலவையில் ஒரு பயனும் கிடையாது. இதில் எவ்வித தெய்வீக சக்தியும் ஏறபடாது ..,

••• மேலும் காவி உடை அணிந்து பலரும் பிச்சை எடுக்கின்ற அவல நிலையையும் இன்று நாம் காண்கிறோம் . எந்தக் காவி உடை உடுத்தியவரை நாம் மதித்து , போற்றி , புனிதமான முறையில் வணங்கினோமோ , அந்த தெய்வ அம்சங்கள் மறைந்து போய் காவி அணிந்து மன்னிக்கவும் ., காவி என்ற பெயரால் ஏதோ வண்ண உடைகளை அணிந்து , பிச்சை எடுக்கின்ற பெரும் பாவச் செயல் தற்போது பெருகியுள்ளது .
*** ஏழைகளுக்குத் தான , தர்மம் செய்வது சிற்ப்புடையது தான் . ஆனால் காவி உடை அணிந்து பிச்சை எடுப்பது பெருந்தவறே .!!

••• அன்னதனம் , வஸ்த்திரதானம் போன்றவை வேத சக்திகளுக்கு ஈடான ஹோமம் மற்றும் பலவிதமான உத்தம வழிபாடுகளுக்கு நிகரான பலன்களைத் பெற்றுத் தரக்கூடியவைதாம்.., காவி உடை அணிந்து போலித் துறவியாக வேடம் பூண்டு பிச்சை எடுப்பவர்களுக்கு பிச்சை அளிப்பதும் தவறே! காவியின் பெயரால் எந்தவிதக் குற்றங்களுக்கும் நாம் இடம் அளிக்க கூடாது . நாமும் அதற்குப் பாத்திரமாகக் கூடாது.

••• காவியுடை மிகவும் பவித்ரமானது ! காவியுடையணிந்து தீச் செயல்களில் ஈடுபடில் ( தாம்பூலம் தரித்தல் , பீடி ,சிகரெட் ,மது ,காமச் செயல்கள் ...) பாவங்கள் பல கோடி மடங்காய்ப் பெருகும் .

••• உடலால் மட்டுமன்றி மனதாலும் ஒரு தீங்கும் , ஒரு தீயெண்ணமும் எழாதோரே காவியத் தரித்திடலாம் .

••• ஒரு முறை காவியை அணிந்திடில் பின்பு வாழ்க்கையில் ஒரு போதும் அதனைக் களைந்திடலாகாது !! ஏனெனில் காவித்துணியை எரித்தல்லோ , புதைத்தலோ , எரிதலோ கூடாது . "காவி பஸ்மம் " என்ற முறைப்படி காவித்துணியை "பூமியில் அடக்கும் " முறையை தக்க சற்குருவை நாடி அறிக ,,

--- செப்டம்பர் 1999 & ஆகஸ்ட் 1997 ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் இருந்து தொகுத்தவை…,


===============================================
•••குறிப்பு : இதை வைத்து தற்போதைய போலிகளை அல்லது அறியாமையில் யாம் குரு /ஆசான் / ஸ்ரீ-ல-ஸ்ரீ , அந்த ஸ்ரீ , இந்த ஸ்ரீ ., அந்த சித்தர் ., இந்த சித்தர் என்று பேசுவர்களை அடையலாம் காணலாமே .. !!

••• இது போன்று ஆன்மீகத்தில் அவரவரர் பக்தி நிலைய அறிய பல அளவீடுகள் உள்ளன . .,

•••“இறைவனை மட்டும் வணங்குங்கள் அதுவே சாலச் சிறந்த்தது என்றென்றும்” •••

••• மானசீகமாக அவரவர்களுக்கு பிடித்த ஒரு மஹானையோ . சித்தரையோ . குருவாக எண்ணி சத்குருவாக ஏற்று வணங்குகள் .., அவர்கள் தோன்றாத்துனையாக இருந்து தக்க வழி காட்டி நடத்துவார்கள் ..ஏனெனில் “குரு” என்பதெல்லாம் மிக மிக உயர்வான நிலை…,தற்போது பலரும் பலரையும் “குருஜி , சாமிஜி” என்று அர்த்தம் தெரியாமல் அழைக்கிறார்கள் மிக மிக வேதனையாக உள்ளது . •••

No comments:

Post a Comment