எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, March 18, 2014

திமிரி பாஷாண லிங்கம்


நவபாஷாணம் பற்றி பல வித கருத்து நிலவுகின்றது .., பல இடங்களில் நவபாஷாணம் சிலையை போகர் செய்து மறைத்து வைதிருக்கிறார் . தக்க காலத்தில் வெளிவரும் என்றெல்லாம் பலர் கூறுகின்றனர் .., பூம்பாறை கோயிலில் இருப்பது நவபாஷாணம் என்றும் ..., புதுக்கோட்டையில் ஒரு பைரவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது ஆனால் மச்சம் குறைவு அதனால் விஷயமாகி விட்டது என்றும் கூறுகின்றனர் .. இதுக்கும் மேல் சில வைத்தியர்கள் மற்றும் சித்தர்கள் அருள் பெற்றவர்கள் என்று கூறிக்கொள்வோர் தங்களிடம் நவபாஷாணம் சிலை உள்ளது .., தாங்களால் நவபாஷாண சிலை செய்யமுடியும் என்று கூறுகின்ற கூத்துக்கு அளவே இல்லை ...


அப்படி அவை எல்லாம் நவபாஷாணமானாக இருந்திருந்தால் அவற்றின் நிலையே வேறு அனைத்தும் ஆய்வு கூடத்தில் தான் இருந்திருக்கும் அல்லது முழுக்க முழுக்க அரசாங்க கட்டுபாட்டில் வந்திருக்கும்
===============================================
"உண்மையில் பழனியம்பதியில் இருப்பது மட்டும் தான் நவபாஷாணம் . மற்றவை எதுவும் நவபாஷாணம் அல்ல அல்ல அல்லவே அல்ல !!.அதே போல் போகர் இன்னொன்றை ஆங்காங்கே மறைத்து வைத்திருக்கிறார் என்பதும் உண்மையல்ல ... போகர் பெருமான் தமக்கு உதவியாக இருந்த புலிப்பாணிக்காக ஆள் காட்டி விரல் அளவு ஒரு நவபாஷாண முருகன் சிலையை தந்திருக்கிறார் அது மட்டும் தற்போது பழனியம்பதியில் மறைந்து இருக்கிறது . அதுவும் தற்போதைய கால கட்ட சுழலில் வெளி வருவதற்கு வாய்ப்பே இல்லை .,திமிரியில் இருப்பதும் பஞ்சபாஷாணமே . ". இது அகத்தியர் ஜீவ நாடியில் கூறிய வாக்கு ... இந்த பேருண்மையை எடுத்துக் கொள்வது அவரவர் விருப்பம் அஃதே .

ஆனால் "திமிரியில் இருப்பதும் பஞ்சபாஷாணமே" என்று அகத்தியம் பெருமான் கூறினார் அல்லவா! அது பற்றி பார்ப்போம் தற்போது வேலூரில் திமிரி எனுமிடத்தில் பஞ்ச பாஷாண சோமநாத லிங்கம் . இதன் தீர்த்தம் , தேனை கடந்த 1 வருட காலம் உபயோகப் படுத்தியுள்ளேன் . பல நண்பர்களுக்கும் கொடுத்துளேன் நல்ல முனேற்றம் பலருக்கு ஏற்பட்டுள்ளது ...


திமிரி பாஷாண லிங்கம் எப்படி , எந்த காலத்தில் உருவானது . தற்போது எப்படி, எவரால் வெளிப்பட்டது என்பது பற்றிய வியப்பான அதிசயங்களை " அண்மைக் கால அற்புதம் " என்ற சிறிய புத்தகத்தை திமிரி சோமநாத பாஷாணலிங்கேஸ்வரர் திருக் கோயில் சார்பில் வெளிடுள்ளார்கள் . அந்த சிறிய புத்தகத்தில் உள்ளனவற்றை அப்படியே முழுமையாக அடுத்து வரும் நாட்களில் முழுமையாக வெளியிடுகிறோம் அன்பர்களே .... நன்றி

for breif info about this temple download the pdf file via this link 
முகவரி : - அருள்மிகு சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் ஆலயம் ,கோட்டை , ( திமிரி அஞ்சல் ) பின்கோடு - 632 512..

ஆற்காட்டியிலிருந்து தெற்கே 8 k.m
ஆரணியிளிருந்து வடக்கே 18. k.m

பேருந்து நிறுத்தம் : திமிரி
( திமிரி மார்கெட் வழியாக திமிரி கோட்டையிலுள்ள இவ்வாலயத்தை அடையலாம் )

1 comment: