எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, March 18, 2014

ஸதாசிவப்ரம்மேந்திரர் ........

ஸதாசிவப்ரம்மேந்திரர்

****தஞ்சை சரஸ்வதி மஹால் நூல் நிலையத்தில் ஸதாசிவப்ரம்மேந்திரரின் ‘ஆத்மவித்யா விலாசம்’ என்ற நூலின் கையெழுத்து பிரதி ஒன்று உள்ளது. அதில் முதலாம் சரபோஜி (1711-1729) மன்னரின் அவைப் பண்டிதர் மல்லாரி பண்டிதர் என்பவர் அரசருக்கு எழுதிய கடிதம் ஒன்று உள்ளது. அதில் அவர் தீபாம்பாபுரம் என்ற இடத்தில் தாம் ஸதாசிவரை தரிசனம் செய்து அவரிடம் மன்னருக்கு வாரிசு அனுக்ரஹிக்க வேண்டும் என்று வேண்டியதாகவும் அவரும் குழந்தை பிறக்கும் என்று சைகை மூலம் காண்பித்ததாகவும் செய்தி காணப்படுகிறது. மன்னருக்கும் அவ்வாறே குழந்தை பிறந்தது. இந்த எல்லா நிகழ்ச்சிகளுமே ஸதாசிவரின் காலத்தை 18ஆம் நூற்றாண்டு என்று நிர்ணயிக்கின்றன. ஸ்ரீதர அய்யாவாள், போதேந்திரர் ஆகியோர் இவரது சமகாலத்தவர் ஆவர்.****ஸதாசிவப்ரம்மேந்திரர் காவிரியில் அகஸ்தியம்பாறை என்ற இடத்தில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த போது வெள்ளம் வந்து விட்டது. அது வடிந்த பிறகு அவரைக் காணவில்லை. சுமார் ஆறு மாதம் கழித்து மண் அள்ளுவதற்காக சிலர் தோண்டு போது ரத்தம் வருவதைக் கண்டவர்கள் கவனமாக மேலும் தோண்டிப் பார்த்த போது உலகை மறந்து தவமியற்றிய நிலையிலேயே அவர் காணப்பட்டார். விழித்தெழுந்த சதாசிவர் ஒன்றுமே நடவாததைப் போலச் சென்று விட்டார்.****ஸதாசிவப்ரம்மேந்திரர் புதுக்கோட்டை அருகிலுள்ள திருவரங்குளம் என்ற ஊரில் இருந்த போது 1730 முதல் 1769 வரை புதுக்கோட்டை அரசராக இருந்த விஜய ரகுநாத தொண்டைமான் சந்தித்து வணங்கி மந்திரோபதேசம் வேண்டினார். மௌன விரதத்திலிருந்த அவரும் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை மணலில் எழுதினார். அரசரும் அந்த மண்ணை எடுத்துச் சென்று ஒரு தங்கப் பேழையில் வைத்துப் பூஜித்து வந்தார். அது இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் தன் இளமைக் கால மாணவராகிய பிக்ஷாண்டார் கோவில் கோபால கிருஷ்ண சாஸ்திரியாரை குருவாக வைத்துக் கொண்டு அவர் விதித்தபடி விசேஷ ஆராதனைகள் செய்யும்படி அறிவுறுத்தினார். அச்சமயத்தில் செய்யப்பட்ட தான, தருமங்களுக்கென புதிதாக அம்மன் காசு அச்சிடப்பட்டது.

***நெரூரில் இருந்து கொண்டிருக்கும்போது தாம் சமாதி அடையப் போவதாகவும் அதற்காக காவிரிக் கரையில் ஒரு குழி தோண்டும்படியும் கூறினார். மைசூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மன்னர்கள் வந்தனர். தாம் குழியில் அமர்ந்த பிறகு அதில் விபூதி, உப்பு, மஞ்சள், செங்கல் தூள் முதலியவற்றை விட்டு நிரப்பி மூடச்சொன்னார். புதுக்கோட்டை மன்னர் மிகவும் அழுது கதறினார்.****அன்றிலிருந்து 9ஆம் நாள் அந்தக் குழியிலிருந்து ஒரு வில்வ மரம் தோன்றுமென்றும், 12ஆம் நாள் காசியிலிருந்து ஒருவர் ஒரு லிங்கம் கொண்டு வருவார் என்றும் அதை 12 அடி தள்ளி ப்ரதிஷ்டை செய்யுமாறும் கூறினார். பிறகு குழி மூடப்பட்டது. அதே போல வில்வ மரம் தோன்றியது. காசியிலிருந்து லிங்கம் வந்துசேர, சொன்னபடியே ப்ரதிஷ்டை செய்யப்பட்டது. இன்றும் அவற்றைக் காணலாம். நெரூரில் நடந்த இந்த நிகழ்ச்சியை அப்படியே மானாமதுரையில் ஓர் அந்தணரும் கராச்சியில் ஒரு முகமதியரும் கண்டனர். அவ்விடங்களிலும் அதிஷ்டானங்கள் எற்படுத்தப்பட்டன. இதை தம் துதியில்ஸ்ரீஸச்சிதானந்த சிவாபிநவ நரிசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகள் ஸதாசிவர் தன் ஸ்தூல சூக்ஷ்ம மற்றும் காரணம் ஆகிய மூன்று சரீரங்களை மூன்று இடத்தில் தியாகம் செய்ததாகக் கூறுகிறார்.

( SOURCE) TAKEN FROM : -http://www.ammandharsanam.com/magazine/May2009unicode/page023.html

No comments:

Post a Comment