எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, April 5, 2014

2014 – ஞானசக்தி வழிபாட்டு பூமி

••• 2014 – ஞானசக்தி வழிபாட்டு பூமி ராமேஸ்வரம் ஜடா தீர்த்தக் கரைச் சிவாலயம் .

••• ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் 7கீ.மீ தொலைவில் ஜடா தீர்த்தமும் இதன் கரையில் ஸ்ரீஞானேஸ்வரர் , ஸ்ரீஅஞ்ஞானேஸ்வரர் சிவாலயமும் உள்ளன .

••• 2014 ஆம் ஆண்டில் ஞானசக்திகள் மிகுவதால் , இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பண்டைய கேதுமாலம் எனும் தற்போதய ஜடாதீர்த்த நீராடலும்...,

••• கேது , ராகு நிதமும் பூஜிப்பதான. ஸ்ரீஞானேஸ்வரர் , ஸ்ரீஅஞ்ஞானேஸ்வரச் சிவலிங்க வழிபாடும் முக்கியத்துவம் பெறுகின்றன .

••• காலத்தை ஜலதத்துவமாயும் போற்றுவர் . இதன்படியே “ நீர்க்குமிழி போலாகும் வாழ்க்கை” என்ற மொழி பிற்ந்தது .

••• நீர்க்குமிழி நெறி மூலம் -2014ம் ஆண்டில் பரிணமிக்கும் ஞானசக்திகளை அடைந்திட அஞ்ஞானமாகிய அறியாமை , அகந்தை , செருக்கு ,மமதை , கர்வத்தை களைவதற்காய் உலகத்தார் யாவரும் கடும் முயற்சி எடுத்து வாழ்ந்தாக வேண்டும் . இதற்கு உறுதுனையாய் ஆன்மபலம் அளிக்கும் ஞானபூமி ஜடா தீர்த்தமும் இதன் கரையில் ஸ்ரீஞானேஸ்வரர் , ஸ்ரீஅஞ்ஞானேஸ்வரர் சிவாலயமும் .

••• அஞ்ஞானத்தை அகற்றிட மனித சமுதாயம் வரும் 2014ல் கடும் முயற்சி எடுக்க வேண்டும் .

••• ஞானசக்தி மிகுந்த ஆண்டு 2014 எனும் போது அஞ்ஞானங்களைக் களைந்திட ஆக்கப் பூர்வமாய் முனைது செயலாற்றிட வேண்டிய வரும் என்றும் பொருளாகின்றது அல்லவா .ஏனெனில் அஞ்ஞானம் தீர்ந்தால் தான் அங்கே ஞானம் ஏற்படும் ..,••• ஞான மார்கத்திற்கான வழி அவ்வுளவு சுலபம் இல்லை என்பதைச் சிரமமான ஜடா தீர்த்தப் பாதை குறித்தாலும் ஏதோ கடுமையான தவம் புரிந்தது போல் கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்து ஜடா தீர்த்தத்தில் நீராடியோ , தீர்தத்தை ஸ்பரிசித்துக் கொண்டாலோ – முறையான தீர்த்த நீராடலின் பலனாய் குருவருளால் அதியற்புத சித்த சுத்தி கிடைக்கும் என்ற ஒப்பற்ற அனுகிரகமும் 2014 – ஞானசக்தி வழிபாட்டு பூமி - ராமேஸ்வரம் ஜடா தீர்த்தக் கரைச் சிவாலயத்திற்க்குண்டு .

• வேறெந்தத் தீர்த்ததிலும் இவ்வளவு எளிதில் சித்தசுத்தி கிட்டி விடாது என்பதும் –வியாஸ மாமுனி மொழிவது போன்று எந்த யுகக் காலத்துக்கும் நிதர்சனமான உண்மையே.

---- ஏனைய விளக்கங்களை [டிசம்பர் 2013,ஜனவரி2014] ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் காண்க...

No comments:

Post a Comment