எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, April 5, 2014

••• 27 நட்சத்திரத்திற்குரிய பூத கண வேதாளங்கள் •••
••• செய்யூர் கந்தசுவாமி கோவிலில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் வேறு எந்த ஊரிலும் உள்ள கோவில்களில் இல்லாத ஒன்றாகும். அது வெளிப்பிரகாரத்தை சுற்றி அமைந்துள்ள நட்சத்திர வேதாளங்களாகும்.

••• சாதாரணமாக நாம் வேதாளங் களைப் பற்றி விக்கிரமாதித்தன் கதையில் படித்திருப்போம். ஆனால், இங்குள்ள வேதாளங்கள் முருகன் சூரபத்மனையும், பிற அரக்கர்களையும் வதைக்கும்போது அவருக்கு துணை புரிந்த சிவகணங்களாகும். 

••• ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்றாக மொத்தம் 27 பூத கண வேதாளங்கள் இக்கோவிலைச் சுற்றி அமைந்திருப்பது ஒரு இன்றியமையாத தனிச்சிறப்பாகும்.

•••தேய்பிறை அஷ்டமி அன்று மாலை ‘வேதாள பூஜை’ விநாயக சங்கல்பத்துடன் தொடங்குகிறது. பிறகு 5 மணிக்கு 

•••ஒவ்வொரு நட்சத்திர வேதாளத்திற்கு செவ்வரளி பூக்களால் பூஜையும், மாலை 7 மணிக்கு மூலவர் அபிஷேகமும், இரவு 8 மணிக்கு பைரவருக்கு அஷ்ட புஷ்பார்ச்சனையும் நடைபெறுகின்றது.ஆதாளியை ஒன்(று) அறியேனை, அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ!
கூதாள கிராத குலிக்(கு) இறைவா
வேதாள கணம் புகழ்வேலவனே!
-கந்தர் அனுபூதி

••• 27 நட்சத்திர பூத வேதாளங்களின் பட்டியல்:

1. நாகாயுதபாணி பூத வேதாளம்-அஸ்வினி
2. வஜ்ரதாரி பூத வேதாளம்-பரணி
3. வைராக்கிய பூத வேதாளம்-கிருத்திகை
4. கட்கதாரி பூத வேதாளம்-ரோகிணி
5. ஞானபூத வேதாளம்-மிருகசீரிஷம்
6. தோமரபூத வேதாளம்-திருவாதிரை
7. வக்ரதந்த பூத வேதாளம்-புனர்பூசம்
8. விசாள நேத்ர பூத வேதாளம்-பூசம்
9. ஆனந்தபைரவபக்த பூத வேதாளம்-ஆயில்யம்
10. ஞான ஸ்கந்த பக்த பூத வேதாளம் -மகம்
11. தர்பகர பூத வேதாளம்-பூரம்
12. வீரபாகு சேவக பூத வேதாளம்-உத்திரம்
13. சூரபத்ம துவம்ச பூத வேதாளம்-ஹஸ்தம்
14. தாரகாசுர இம்ச பூத வேதாளம்-சித்திரை
15. ஆனந்த குக பக்த பூத வேதாளம்-சுவாதி
16. சூர நிபுண பூத வேதாளம்-விசாகம்
17. சண்டகோப பூத வேதாளம்-அனுஷம்
18. சிங்க முகாசுர இம்ச பூத வேதாளம்-கேட்டை
19. பராக்ரம பூத வேதாளம்-மூலம்
20. மஹோதர பூத வேதாளம்-பூராடம்
21. ஊர்த்துவ சிகாபந்த பூத வேதாளம்-உத்திராடம்
22. கதாபரணி பூத வேதாளம்-திருவோணம்
23. சக்ரபாணி பூத வேதாளம்-அவிட்டம்
24. பேருண்ட பூத வேதாளம்-சதயம்
25. கோரரூப பூத வேதாளம்-பூரட்டாதி
26. குரு பைரவ சேவக பூத வேதாளம்-உத்திரட்டாதி
27. குரோதன பேரவ பக்த பூத வேதாளம்-ரேவதி

••• மேலும் இக்கோவிலில் பெரியாண்டவர் பூஜையும் அனுஷ்டிக்கப் படுகிறது. கோவிலுக்கு வெளியே நவசந்தியில் நவக்கிரகங்கள் பூஜித்த விநாயகர்கள் காணப்படுகிறார்கள். 

••• இதுவும் இக்கோவிலின் ஒரு தனிச்சிறப்பாகும். இக்கோவிலிற்கு மேற்கே செட்டிகுளம் என்ற திருக்குளம் உள்ளது. செட்டி என்பது முருகனின் ஒரு திருப்பெயர். இக்குளம் ஆலயத்திற்கு சொந்தமானது.

••• தல சம்பந்தமான நூல்கள்:

••• செய்யூர் கந்தஸ்வாமி பெருமானைப் பாடி அந்தகக் கவி வீரராகவ முதலியார் இயற்றிய சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர் கலம்பகம், சேறை கவிராஜ பிள்ளையின் சேயூர் முருகன் உரை, ஸ்ரீ முருகதாச ஸ்வாமிகளின் சேயூர் முருகன் பதிகக் கோவை, சிவப்பிரகாச சுவாமிகளின் நெஞ்சுவிடு தூது ஆகிய நூல்கள் தோன்றியுள்ளன.

••• மிக முக்கியமாக இத்தலம் அருணகிரிநாத ரால் திருப்புகழ் பாடல் பெற்ற ஒரு தலமாகும். இத்தல முருகனை புகழ்ந்து பாடிய அருணகிரி நாதருக்கு தீபாராதனை மண்டபத்தில் சிலையும் அவர் பாடிய பதிகங்களின் கல்வெட்டும் காணப்படுகிறது.

••• செல்லும் வழி : - செய்யூர் மதுராந்தகத்திலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவிலும், கிழக்கு கடற்கரை சாலையில் எல்லையம்மன் கோயில் நிறுத்தத்தி லிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

••• Taken from : astrologer.swayamvaralaya.com

••• மற்றும் இந்த மாத குமுதம் பக்தி இதழிலும் இக் கோயில் பற்றிய சிற்ப்பை காணலாம் ...

No comments:

Post a Comment