எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, April 5, 2014

"கணக்கதிகாரம்"


••• நம் பண்டையத் தமிழ் எழுத்துக்கள் ஆன்ம சக்தி நிறைந்தவை .

••• பலத்த ஆன்மசக்தி பொலிந்த க, உ ,ச , ரு என்று எண்களைக் குறிக்கும் தமிழ் எண் முறையும் நாட்டில் வழக்கொழிந்து போனதும் நம் துரதிஷ்டமே ..!!! ..,

••• கணக்கதிகாரம் எனும் பண்டைய தமிழ் நூல் ஒன்றுள்ளது ., ஒரு பலாப்பழத்தை அறுக்காமலேயே அதனுள் இருக்கும் பலாப் பழச் சுளைகளை வெளியில் பார்த்தவாறே மேலிருக்கும் முட்களை கணக்கிட்டுச் சொல்வது போன்ற ஆன்ம சக்தி நிறைந்த பழமையான கணக்கு முறைகளை இவ்வரிய பண்டைய தமிழ் நூலில் காணலாம் ...••• தெய்வத் தமிழ் மொழியில் இருந்தே பல எழுத்துக்களையும் ,வார்த்தைகளையும் பாரதத்தின் , உலகின் ஏனைய பல மொழிகளும் பெற்று நன்கு விருத்தி அடைந்துள்ளன . 
-- ஜனவரி 2014 ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழிலிருந்து
===============================================

••• பழந்தமிழ் நூல்களில் "கணக்கதிகாரம்"என்றொரு நூலுண்டு. அதில் பல கணித விதிகளும், சித்தாந்தங்களும் பாடல்கள் உருவில் விளங்கும்.

••• ஒரு பலாப்பழத்தில் எத்தனை சுளைகள்இருக்கின்றன என்பதனை அதன் காம்பைச் சுற்றியுள்ள முட்களின் எண்ணிக்கையை வைத்துக் கணக்கிட்டு அறிந்துகொள்ளும முறையை ஒரு பாடல் கூறுகிறது:

"பலவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருகு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே, ஐந்தினுக்கு ஈந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை".

பலாப்பழத்தின காம்பைச் சுற்றிலுமுள்ள முட்களை எண்ணி, அவ்வெண்ணிக்கையை ஆறால் பெருக்கி வரும் தொகையை ஐந்தால் வகுத்தால் வருவதுதான் அப்பழத்தினுள் இருக்கும் சுளையின் எண்ணிக்கை.

••• இப்போது ஒரு சந்தேகம். [???....???]

••• சுளையின் எண்ணிக்கையை வைத்து முட்கள் தோன்றினவா? 

••• அல்லது முட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுளைகள் எற்பட்டனவா?

••• விண்ணில் உள்ள கோள்களின் நிலைகளுக்கு ஏற்ப உலகில் நிகழ்வுகள் நடை பெறுகின்றனவா? அல்லது அந்த நிகழ்வுகளுக்கு ஏற்ப கோள்கள் அந்தந்த நிலைகளில இயங்குகின்றனவா? •••

••• காரணத்தின் விளைவாகக் காரியமா?அல்லது காரியத்துக்கேற்ற காரணங்கள் அதற்கு முன்னதாகவே தோற்றுவிக்கப் பட்டுவிட்டனவா?
••• [ நன்றி : visvacomplex.com] •••
===============================================
குறிப்பு :- கணக்கதிகாரம் மின்நூலை tamilheritage.com வலைத்தளத்தில் தரைவிறக்கம் செய்து கொள்ளலாம் .

••• இதனால் தானும் “ இறைவன் போடும் கணக்கு தப்பாது” என்னும் ஆன்ம பழமொழி “பழ(பை)ந்தமிழில் “ திளைக்கின்றதோ....!!!! ••• 

••• என்னெ தெய்த் தமிழின் தெய்வத் தன்மை ...!!!! ••• 

••• ஆனால் ..., பெறுதற்க்கரிய .., தெய்வத் தமிழ் நாட்டில் வாழும் பேறு பெற்றும் .. லௌகீய இச்சை ., சதா சர்வகாலமும் வெட்டியான பேச்சு கேளிக்கைகள் ., பயனற்ற சினிமா மோகத்தில் முழ்கியும் சுய குடும்ப நலத்தை சுற்றியே வாழ்க்கை வட்டத்தை முடித்துக் கொள்கின்றனர் அன்றோ இன்றைய தெய்வத் தமிழ் திரு நாட்டார்...!!

••• ஆதி தமிழன் ஆண்டவனான் தற்போதைய தமிழன் 
[ மோகத்தின்] அடிமையானான்...

No comments:

Post a Comment