எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, April 5, 2014

கோட்டைத்’ தலங்கள்


••• மன்னார்குடி – மதுக்கூர் அருகே உள்ள பரவாக்கோட்டை , பரலக்கோட்டை , ஆவிக்கோட்டை , உள்ளிக்கோட்டை போன்ற “கோட்டைத்’ தலங்கள் யாவும் ஒவ்வொரு மனிதரிடமும் அவரவரின் உள்ளே உள்ள மனக் கோசங்களைக் குறிப்பவை...,

••• ஜீவன்களின் மரணத்தின் போது மனிதனாயினும் சரி , எறும்பு , புழு , பூச்சியாயினும் சரி உடலை விட்டுப் பிரியும் ஆவியானது , 

••• அடுத்தடுத்த .., கோசங்களுக்குள் அதாவது வெவ்வேறு சூக்கும சரீரங்களை [உடல்களை] தாங்கி அடுத்தடுத்த பிறவிகளை எடுப்பதற்கு முன் , குறித்த ஆன்மப் பயனத்தைக் கைக்கொள்கின்றது. இதனையும் விளக்கி , முக்தி நல்பேற்றுக்கும் முகிழ்த்த நல்வழி காட்டும் ஆன்மசக்திக் தலங்களே இத்தகைய கோட்டை அல்லது கோசக்தித் தலங்கள் 

••• பூவுலகில் எந்த உயிரும் எந்த உடலை விட்டுப் பிரிந்தாலும் , மேற்கண்ட கோசக்தித் தலங்களின் வான்வழியே அந்தந்த ஆன்மாவின் சூக்கும சரீரம் விண் வழியே செல்லும் என்ற ஆன்ம ரகசியத்தையும் சத்குரு வேங்கடராம சுவாமிகள் புலப்பித்துள்ளார் .

••• இந்தக் கோசபூமிகளுக்கு மேல் விண்பரவெளியில் சக்தி வாய்ந்த பிதுர் லோகங்கள் உள்ளன. இதனால் தான் பௌர்னமி தோறும் ஆவிக்கோட்டை-மெய்கை விநாயகர் ஆலயத்தின் ஸ்ரீவித்யா தீர்த்தக் குளத்தைச் சுற்றி ஆற்றும் தீர்த்த வலமானது , பலத்த ஆன்மசக்தி வாய்ந்ததாய்ப் பலன்களைப் பொழிந்து அருள்கின்றது . 

••• பூவுலகில் ஆலயத் தீர்த்த நீராடல்கள் , புனித நிதித் தீர்த்த நீராடல்கள் மங்கி வருவதால் , மக்கள் சமுதாயம் பல ஆன்ம வளங்களை இழ்ந்து வருகின்றது . குடந்தை மகாமகக் குளத் தீர்த்த நீராடல் மற்றும் மெய்கைத் தீர்த்த வாரி போன்ற தீர்த்த வலங்களும் , தீர்த்த நீராடல்களும் ஆன்மசக்தியைப் பெய்து தருவதாம்....,
--- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மார்ச் 2014


===============================================

••• ஒவ்வொரு மனிதருக்கும் ”தூல சரீரம்” எனப்படும் வெளிஉடல் தவிர , அவரவருக்குள் சில சூக்கும வடிவிலான , கண்ணுக்குத் தெரியாத ஆன்ம சரீரங்களும் உண்டு...,

••• இதை ஒரு உதாரணம் மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம் . கனவில் பல அனுபவங்கள் உண்டாகின்றன இவற்றை வெளிஉடல் அனுபவிக்கவில்லை. ஆனால் வெளியுடல் தூங்கி கிடக்க , நம் உள்ளுக்குள் இருக்கும் ஏதோ ஒரு சூக்கும உடல் , கனவுலக நிகழ்ச்சிகளை அனுபவிக்கின்றது இவ்வாறு நம் உடலுக்குள் இருக்கும் மற்றொரு சூக்கும உடலானது , கனவு நிகழ்ச்சிகளாய் அனுபவிப்பதை , உறங்கி எழுந்தவுடன் நமக்கு எடுத்துரைப்பது எதுவோ ? . 

••• இந்த ஆன்மப் பணியை ஆற்றுவது தான் “மனக்கால்” எனப்படும் ஒரு வகை ஆன்ம நாள நாடி . வெளிஉடல் , சூக்கும சரீரம் ஆகிய இரண்டு உடல்களுக்கும் இடைப்பட்டது இந்த “மனக்கால்” [மனோபாது] எனும் ஆன்மசக்தி நாளம் . அனைவருக்கும் நாபிப் பகுதியில் [தொப்பிளில்] இந்த நாள நாடி பதிந்திருக்கும்....,

••• வெளிஉடலைத் தவிர , உடலுக்குள் இருக்கும் ஏனைய சூக்கும சரீரங்கள் யாவும் மெல்லிய பஞ்சு போலானவையே , இவற்றை மனோமய கோசம் , விஞ்ஞானமய கோசம் , என்றெல்லாம் ஆழ்ந்த தாத்பர்யத்தோடு விளக்குவார்கள் . உபநிஷத்துக்களில் இவற்றுக்கான அரிய விளக்கங்களை நன்கு காணலாம்..

••• இதனை எளிமையாகப் பாமர மக்களுக்கு விளக்குவதற்காகவே – ஆவிக்கோட்டை , பரவாக்கோட்டை , பரலக்கோட்டை , என்றெல்லாம் இவற்றுக்குப் பெயருண்டு [ கோடை =கோசம் = உடல் ] இப்பெயரில் தக்க ஆன்மசக்தி அர்த்தங்களுடன் தற்போதும் ஊர்கள் உள்ளன.

••• இப்பெயர் கொண்ட தலங்களில் உள்ள ஆலயங்களில் வழிபட்டு வந்தால் ., இத்தகைய உடல் கோசங்களில் அமைப்பு நிலை எளிதில் புரிபடும் .இன்ப , துன்பங்களுக்குக் காரணம் அவரவருக்கே நங்கு தெரிய வரும் . அததற்குக் காரணம் நங்கு தெரிய வருவதால் , வாழ்வும் சாந்தம் பெறும்... 
--- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் நவம்பர் 2012
===============================================
••• தெய்வத் தமிழ் நாட்டின் ஒவ்வொரு ஊரின் பெயரும் ஆன்ம விளக்கங்களைக் கொண்டுள்ளன.................,

••• ஆனால் நாமோ.. ஊர் பெயர்களை கேலி செய்தும் [ tanjore , vellore , tripilicane ] என்றெல்லாம் பின்னப்படுத்தியும் .. வருகின்றோம்....., 

No comments:

Post a Comment