எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, April 5, 2014

கொங்கரத்தி


•••“ ஜய தமிழ் ஆண்டு வழிபாட்டுத் தலம் “ - கொங்கரத்தி

••• மானுடரைப் போல் பேச வல்ல ‘அறவாசி’ எனும் கீரவாணி சக்திப் பறவைகள் , பண்டைய காலத்தே கொங்கரத்தி வனங்களில் இருந்தன . இவை தம்பரத்தை போன்ற அரத்தை வகை மூலிகைப் பழங்களை , இலைகளை மட்டுமே உண்பவை ..,

••• குறித்த ஹோரை நேரத்தில் வேம்பு , வில்வ மரங்களில் ‘அறவாசி’ பட்சிகள் அமர்ந்து , சில பல உலகளாவிய கலியுக நிகழ்வுகளை , ஆன்மீக விஷியங்களை தீர்க தரிசனமாய் உரைவிக்க வல்லன ., 

••• “கீரவாசகம்” எனும் இந்த பட்சிவாக்யம் , இன்றும் பாக்யம் உள்ளோர்க்குக் கிட்டுவதாம் . பறவைகளுடன் பேச வல்ல விக்ரமாதித்ய மஹாராஜா , இங்கு பெருமாளை வழிபட்டு , பன்மொழிப் புலமையும் , ஆன்ம ஞானமும் பெற்றான் . அறவாசி பட்சியுடன் உரையாடி , பல ஆன்மீகப் பணிகளை அறிந்து , சமுதாய நலனுக்காய் கடைபிடித்தான் .

••• பூதநாதன் எனும் 18ஆம் படிக்கருப்பர் முர்த்தியை வலப்புறம் இருத்தி இங்கு நாராயணப் பெருமாள் அருள்கின்றார் . மரப்பாதுகை , சூலம் , தாமிரப் பாதுகைளை இங்கு நேர்த்தியாக வைத்தும் , நாகப் பிரதிட்டை செய்தும் குடும்பத்திற்கு ஆன்ம பலம் கூடிய காப்பு சக்திகளைப் பெறுகின்றனர் .

••• பாற்கடலின் அடியில் , கோடானு கோடி யுகங்களாய் யோகத்தில் திளைத்த திருமால் , அமிர்தக் கடையலுக்குப் பின்னர் , இங்கு ஏகினார் .

••• சித்தர்களும் , மஹரிஷிகளும் 16வகை அரத்தை மூலிகைத் தைலக் காப்பைப் பாதாதி கேசமாய் இட்டிட , திருமாலும் , களைப்பகன்றார் . சாந்த வர்ஷிதத்துடன் ஆனந்தமாய் அருளலானார் .••• ஸ்ரீ தேவி , பூதேவியருடன் ஸ்ரீவன்புகழ் நாராயணப் பெருமாள் அருளும் கொங்கரத்தி புண்ய பூமி . சித்தரத்தை , கொங்கரத்தை , விந்தரத்தை , தம்பரத்தை தேனரத்தை போன்ற 16 அரத்தை மூலிகை வகை வனங்கள் முற்காலத்தில் நிறைந்த தலம்.

••• வழி : -மதுரை/புதுக்கோட்டை – திருப்பத்தூட் 8 கி.மீ – கண்டரமாணிக்கம் 2 கி.மீ – கொங்கரத்தி .

••• 14.4.2014 ஜய தமிழ் வருடம் , சித்திரைப் பிறப்பில் – சூரிய பகவானின் மேஷ ராசிப் பிரவேச நேரத்தில் , காலை 7.38 மணிக்கு , பஞ்சாங்க வாசிப்பு , ராசிச் சக்கர வழிபாடு , 28 நட்சத்திர விளக்குகளை ஏற்றுதலுடன் ,மகளிர் இவற்றைச் சுற்றி கோலாட்ட நடன வைபவம் , உணவுப் படையல் , அன்னதானத்துடன் பூஜிக்கவும் ..,

••• "ஜய மங்களம் சத்ய சுப மங்களம் , ஜய தமிழ் ஆண்டு தரும் பவ மங்களம்" – தமிழ் வருடப் பிறப்புக் கோலாட்டத் துதி ..., 

••• மேலும் திவ்ய விளக்கங்களை ஏப்ரல் (2014) ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் காண்க...,

No comments:

Post a Comment