எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, April 5, 2014

அட்சர ஆழிப்பா "

••• ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழிலில் இருந்து :-

ஆரோக்யத்தை உணர்த்தும் சித்த வைத்ய "அட்சர ஆழிப்பா "!!!

••• .E.C.G எனப்படும் மருத்துவ டெஸ்டிலே , வரைபடத்தில் கீழிருக்கும் வளைவை இருதயத்தின் ஆரோக்கியக் குறைவாக எடுத்துக் கொள்கிறார்கள் அல்லவா ! உண்மையில் E.C.G 
என்பது அவரவருடைய கையெழுத்து நிர்ணய சக்திகளாகும் .

••• அக்காலத்தில் இருதய நாள நாடிகளை அறிந்திட , ஒரு ஓலைச் சுவடியிலே மயில் தோய்த்துத் தந்து "அட்சர ஆழிப்பா " எனும் ஆரோக்கியப் பரிபாஷைச் சூத்திரத் துதியை எழுத வைத்து , இதில் ஏற்படும் நெளிவு , சுழிவுகளை வைத்து இருதயத்தின் நிலையை அறிவார்கள் ..

••• அட்சர ஆழிப்பா ( அ முதல் ஃ வரை , க முதல் ன் வரையிலான அனைத்து உயிரெழுத்துக்களும் , உயிர்மெய் எழுத்துகளும் அடங்கிய ஆழிமொழிப்பா )

" கசடற இகங் காண் ஊபர ஞாலம் 
குசவள ஒளியே ஒளபர அஃகம் 
விசலூர் ஐயன் வாபர ஓதல் 
அசலாத் துறை ஆழ் இந்த்ரிய ஏகம்
தசமா ஈஸ்வர உத்தம சாரம் 
உசத்தால் நலமே ஓங்கிடும் எண்கண் !”

••• உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும் , மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் இந்த அட்சர ஆழிப்பாவில் (தியானத்தில் ) அடங்கி (ஆரோக்கிய ) யோகத்தில் ஒடுங்கி இருப்பதைக் 
காணலாம் .உயிரும் , மெய்யும் , சேர்வது தானே ஜீவ சக்தி !•••முற்காலத்து நாட்டு வைத்தியர்களும் , சித்த வைத்தியர்களும் இத்தகைய அட்சர ஆழிப்பாக்களை எழுத வைத்தும் , ஓத வைத்தும் , நோயுற்றோரின் இருதய நாடிகளைத் துல்லியமாகப் பகுத்தறிந்து நல்மருந்துகளை அளித்தனர் .., விரல் நுனிகளுக்கும் ,இருதயத்திற்கும் ,மனிகட்டிற்கும் நிறைய தொடர்புகள் உண்டு என்பது இதன் மூலம் புனலாகும் . 

••• மேற்கண்ட அபூர்வமான அட்சர ஆழிப்பாவில் மிகவும் அபூர்வமான பரிபாஷை ஜீவசக்திச் சூத்திரங்கள் உள்ளன . தக்க சத்குருமாற்கள் மூலமாக இவற்றை அறியவும் .

••• ஒருவர் எழுதும் போது , அவருடைய மணிக்கட்டி நாடிகளைப் பிடித்து பார்த்தும் , எழுதும் எழுத்தை வைத்துக் கொண்டும் , அட்சர ஆழிப்பாவை ஓதும் சப்த மார்கத்தைக் கொண்டும் , இருதய சக்திகளை , நாள நாடிகளை , இருதயத்தின் ஆரோக்கியத்தை நன்கு அறிந்து கொள்ளலாம்.

••• “ஒடுக்கத்தூர்ச் சித்தர்” இத்தகைய சகல எழுத்துக்களும் நிறைந்த மிகவும் சக்தி வாய்ந்த அட்சர ஆழிப் பாக்களை ஓதிய வண்ணமே (யோகத்தில்) ஒடுங்கிக் கிடப்பார்.., ••• 

••• மேலும் த்வய விளக்கங்களுக்கு ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் ஜனவரி 2007இதழை காணக....,
 — 

No comments:

Post a Comment