எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Saturday, April 5, 2014

அகஸ்தியாம்பள்ளி


••• பூமியில் சித்தர்கள் முதற்காலடி எடுத்து வைக்கும் ஆதி முழுமுதல் சித்சக்தித் திருவடித் தலமே அகஸ்தியாம்பள்ளி

••• சித்தர்கள் எவ்வாறு நாம் வாழும் பூமிக்குள் வருகின்றார்கள் என்பதையும் அறிவோமே! 

•••கோடிக்கரை , இதனருகில் ஸ்ரீராமபாதம் துலங்கும் (ஸ்)கந்தமேடு , அகஸ்தியாம்பள்ளி 

••• ஆகிய முன்று தெய்வச்சுடராழி பூமிகள் தாம் சித்தர்களின் வானுக்கும் பூமிக்குமான மைய நிலையங்கள் ஆகும்.


••• சித்தர்களின் பால் தீரா குருவருட் பக்தி கொண்டிருக்கும் யாவரும் , மேற்கண்ட முன்று சித்தச் சுடராழித் தலங்களையும் நிச்சியமாக தரிசித்தாக வேண்டும் ....,

இவற்றில் முதற்பட்ட கோடிக்கரைக் கடற்கரையில் உள்ள நவநாத கோடிச் சித்தர்கள் இறைத் திருமணக் காட்சி பெற்ற “ சிவமாங்கல்ய மேடு” தற்போது கீற்றுக் கொட்டகயாய் விளங்குகிறது....,

•••அகஸ்தியாம்பள்ளி – பூமியில் சித்தர்கள் முதற்காலடி எடுத்து வைக்கும் முழுமுதல் மூலச்சிவத் தலம்

••• ஸ்ரீஅகஸ்திய மாமுனி போன்ற ஆதிமூலச் சித்புருடமே – ஸ்ரீஇடியாப்ப சித்தர் , சத்குரு வேங்கடராம சுவாமிகள் உள்ளிட்ட சகல கோடிச் சித்தர் குழாமுமே – இப்பூவுலகிற்கு வருகையில் , கோடிக்கரையில் நவகோடி சித்தபூமியில் இறங்குவர் , கோடிக்கரை மூலிகாவனத்தில் ஸ்ரீராமபாத தரிசனத்தைப் பெறுவர் , பிறகு அவர்கள் தம் முதல் காலடியை பூமியில் பதிக்கும் திருத்தலமே அகஸ்தியாம்பள்ளி புண்ணிய பூமி

••• மேலும் திவ்ய விளக்கங்களுக்கு டிசம்பர்2010 மாத ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழை காண்க.........

No comments:

Post a Comment