எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, April 5, 2014

“பெண் மூலம் நிர்மலம்”


••• “பெண் மூலம் நிர்மலம்” ••• ••• 

••• அம்பிகை மகத்தான நிர்மல சக்திகளை அளிப்பவள் . 

••• கர்ம மலங்கள் அற்ற தூய நிலையே நிர்மலம் என்பதாகும் .

••• “பெண் மூலம் நிர்மலம்” என்பதே வேறு மாதிரியாகி மருவித் தவறான பொருளுடன் தற்போதைய வழக்கிற்கு வந்து விட்டது .

••• “நிர்மலம்” எனில் , மாசு மருவற்ற புனிதப் பரல்களை அளிக்கும் தேவ சக்திகள் நிறைந்தது என்பது பொருள் . மூல நட்சரத்தில் பிறக்கும் பெண்கள் , நல்ல விதமான நிர்மல சித்தியை அடைந்து , பிறருக்கும் அளிக்கவல்ல நல்வரம் பூண்டவர்கள் எனப் பொருளாகும்.

••• அதாவது நிர்மல சுத்தியை அளிக்க வல்ல யோக்சித் சக்திகளை மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இயற்க்கையாகவே பூண்டிருப்பர் . ஆனால் இவற்றை வாழ்க்கையில் நன்கு பயன்படுத்திச் சீர்மையில் செறிதல் வேண்டுமே !

••• “ஆண் மூலம் அரசாளும் ....” என்ற சொல் வழக்கில் . “பெண்களுக்கு மூல நட்சத்திரம் அமைதல் கூடாது” என்று தவறான அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன .. உத்தம ரிஷிப் பத்னியர்கள் பலரும் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர்களே~!

••• “ ஆண் மூலம் அரசாளும்” என்பதில் , உயர் அரசுப் பதவிக்கான பேரம்சங்கள் மூல நட்சத்திரக்காரர்களுக்கு ஜாதக ரீதியாகப் பூரித்து நிறையும் எனபதாகும் . உயர் நிலைப் பதவி அம்ங்கள் இருந்தாலும் , அவரவருடைய கர்ம வினைகளின் விளைவுகளையும் இதில் கணித்தே முடிவு செய்ய வேண்டும் .

••• எனவே , நட்சத்திரங்களைப் பற்றிய பொதுப்படையான விளக்கங்களைப் படித்துக் குழ்ப்பிக் கொள்ளாது , இவற்றுக்கான விளக்கங்களையும் தக்க சத்குரு அல்லது தாமறிந்த உத்தமப் பெரியோர்கள் மூலம் பெறுதல் வேண்டும் .••• மூலம் என்பதற்கு , ஸ்தூபி , ஸ்தம்பம் ஸ்திரமானது எனப் பொருளும் உண்டு . மூல நட்சத்திர மண்டலமும் நிறையத் தூண்களைக் கொண்டிருக்கும் .

••• மொத்தத்தில் மூலத்திற்கும் தூணுக்கும் , ஸ்தூபிக்கும் நிறைய தெய்வீகப் பினைப்புகள் உண்டு. இதனால் தாம் மூல நட்சத்திரக்குரிய அஞ்சநேயரும் பல சிவாலயங்களில் தூணில் எழுந்தருளியுள்ளார் . மேலும் , தூணில் தோன்றிய நரசிம்ம அவதாரிகைக்கும் , மூல நட்சத்திரத்திற்கும் தெய்வீக பினணப்புகள் நிறையவே உண்டு..

••• பென்சில்வேனியா , எகிப்து, பீடர்ஸ்பர்க் , நயாகரா , கௌதமாலா போன்றவையும் நரசிம்ம ஸ்தம்பங்கள் , நரசிம்ம ஸ்தூபி சக்திகள் நிறைந்த பகுதிகளாகும் . உலகில் தற்போதுள்ள நரசிம்ம , ஸ்தம்பங்கள் யாவும் பானக நீரோட்டங்களை உடையவையே . இவற்றை இன்றையக் கலியுக அரசியல் நாட்டு அமைப்பை வைத்து நோக்காதீர்கள் , உலகம் முழுதும் ஒரே நாடாக , சனாதன தர்ம நாடாகத் துலங்கிய காலத்தை எண்ணிப் பாருங்கள் ! நீங்களும் அக்காலத்தில் உலகின் பல இடங்களிலும் வாழ்ந்தவர்கள் ஆதலின் , இன்று இங்கு இதனை அறிவதும் காலதேவச் சித்தமாகிறது என அறிக !

••• விஜயவாடாவில் பானக நரசிம்மரின் திருவாயில் ஊற்றும் பானகம் பூமியடியில் மறைவதும் , எங்கு போகிறது என்று எவராலும் அறிய இயலாததும் இன்றும் கலியுகத்தில் நிகழும் தெய்வீக அற்புதங்களே ! இதில் ஒரு பகுதி உலகின் பல நாடுகளிலும் உள்ள நரசிம்ம ஸ்தம்பங்களை அடைகின்றன ..,

••• நரசிம்ம உக்ர ஸ்தம்பங்களில் “ நீவார ஸ்தம்பம்” என்பதான நரசிம்மத் தூணாய் . திருநெல்வேலி – வீரவநல்லூர் அருகே திருப்புடைமருதூர் செல்லும் வழியில், அத்தாழ்நல்லூரில் உள்ள ஆதிமூலப் பெருமாள் ஆலயத்தில் தோன்றி அருள்வது கலியுகத்தின் மஹா பெரும் பாக்கியமே !

••• முழுமையான விளக்கங்களை ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் செப்டம்பர் 2005 இதழில் காண்க...•••

No comments:

Post a Comment