எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, April 5, 2014

••• பூமியின் வடிவு என்ன?
••• பூமியின் வடிவம் நிச்சயம் உருண்டையானதல்ல ..,

••• இது பற்றி சித்தர்களின் ஞானப் பத்ர வேத வாக்கியகளை அறிந்து கொள்ளுங்கள் !

••• உருளும் உலக்கையே உலகம் !

••• பூமியின் வடிவு என்ன? இது பற்றி சித்புருஷர்கள் என்ன ? சொல்கிறார்கள்...,

••• உருளும் உலக்கையே உலகம் என்பது சித்தர்களின் பரிபாஷைப் பாடல் !

••• இதனுடைய உட்பபொருளாக நீங்கள் ஆயிரம் ஆயிரம் தெய்வீக தாத்பர்யங்களை உணரலாம்.

••• இந்த மூன்று வார்த்தைகளைக் கொண்டு நீங்கள் யோக பூர்வமாக , தியான பூர்வமாக, மெய்ஞான , விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்திடுக .பூமியானது உருண்டை வடிவு இல்லை என அறிவீர் ! உருளும் உலக்கை வடிவென உணர்வீர் ! 

••• இன்று இல்லையெனும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இந்த வேத உண்மையை இந்த விஞ்ஞான உலகம் நிச்சியமாக ஏற்கும்.

••• உருளும் உலக்கையே உலகம் என்ற உலகின் வடிவு பற்றிய சித்தர்களின் பரிபாஷை வேத வாக்கைப் பற்றி மேலும் தீவிரமாக ஆத்ம விசாரம் செய்யுங்கள் ., இது தான் பூமியின் வடிவம் என்றால் , இதற்குள் எத்தனை அரிய அர்த்தங்கள் பொதிந்திருக்கும் என்று சிந்தியுங்கள் .

••• உருளும் உலக்கையே உலகம் என்ற வேத வாக்கை ஒரு பரிபாஷையிலான வேத வாக்கியமாக பூமியின் வடிவை சித்புருஷர்கள் நமக்கு அளித்துள்ளார்கள். எனவே எவர் வேண்டுமாயின் இது பற்றி எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளலாம்.., 

••• இன்று இல்லையெனும் பல்லாயிரம் ஆண்டிற்குப் பிறகாகவது இதன் தெய்வீக தாத்பர்யத்தை , இந்த சத்திய வாக்கை இவ்வுலகம் உணரும் .எனவே பூமியின் வடிவம் உலக்கை வடிவே இவ்வுலகின் பெருவடிவு என்பதே சித்தர் வாக்கு ! இறைமயமாகச் சிந்தித்தால் இதன் உண்மைப் புலப்படும் . 

••• இந்த ஸ்ரீ அகஸ்தியர் விஜய ஞானப் பத்ர பொக்கிஷத்தைப் பத்திரப்படுத்தி சித்தர்களின் தீர்க்க தரிசனத்தை எதிர்காலத்திற்கு நிரூபியுங்கள்...,

--- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் [ பிப்ரவரி 2001 ]===============================================
••• லிங்க வடிவே நம் பூமியின் வடிவு !

••• லிங்கத்தின் உலக்கை வடிவு தான் இன்று நாம் வாழும் பூமியின் வடிவாகும் . பூமியின் வடிவை , உருண்டை, உருண்டை என்று எப்படித் தான் அறிவியல் பூர்வமாகப் பறை சாற்றினாலும் , சித்தர்களோ பூமியின் வடிவை உலக்கை , உலக்கை என்றே மெய்ஞானப் பூர்வமாகப் பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்..,

••• பூமியின் மேல் அச்சும் , கீழ் அச்சும் சற்றே உலக்கை வடிவில் இருப்பதாக விஞ்ஞானமே ஒத்துக் கொண்டிருக்கிறது .., எனவே லிங்க வடிவம் என்பது நாம் வாழ்கின்ற பூமி வடிவைக் குறிப்பதாகும் .

••• ஏனென்றால் ., பூமியின் வடிவு உருண்டை என்பதாக பூமிக்கு அப்பால் செலுத்தப்படும் விண்கலன்களிலிருந்து எடுக்கும் புகைப்படத்தை வைத்தும் , பல ஆராய்ச்சிகள் மூலமாகவும் கண்டு கொண்டிருக்கிறார்கள் ...,

••• ஆனால் நம் பூமி போல எத்தனையோ பூமிகள் உண்டு. பூமியினுடைய ஆகர்ஷண சக்திகளைத் தாண்டியும் , பூமியைச் சுற்றியுள்ளதுமாயும் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ கிரகங்கள் உண்டு...,

----- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் நவம்பர் 2006

===============================================

••• குறிப்பு : “பூமியினுடைய ஆகர்ஷண சக்திகளைத் தாண்டியும் , பூமியைச் சுற்றியுள்ளதுமாயும் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ கிரகங்கள் உண்டு...,” --- இதன் தாத்பர்யமோ மகா திவ்யமானது .., அனுபூதியாக உணர்வதே சிறப்பு “நரகலோக வாழ்வு” என்ற தலைப்பில் அக்டொம்பர் 2004 அகஸ்தியர் விஜயம் இதழில் இதன் சாராம்சம் சற்றே சூட்சுமமாக விளங்கும் .. இதுவும் சமீபத்தில் அகத்தியெம் பெருமான் ஜீவ நாடியில் கூறிய விஷியங்களை கேட்ட போது தான் சற்றே விளங்கியது...,

No comments:

Post a Comment