எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Saturday, April 5, 2014

மந்திரக்குகை மர்மம்

••• “ பொருட்கள் எதுவும் அவை எப்படித் தோற்ற மளிக்கிறதோ அதுபோலவே உண்மையில் இருப்பதில்லை லாப்சாங் . நீ லாசா பள்ளத்தாக்கை மூடி மறைக்கும் அளவுக்கு மிகப் பெரிதாக “ஒம் மா நீ பாட் மீ உம்” என்ற மந்திரத்தை எழுதுகிறாய் என்று வைத்துக் கொள். அதை யாராலும் படிக்க முடியாது. அவர்களால் கைக்கொள்ள முடியாத அளவுக்கு அது பெரிதாக இருக்கும்.

••• லாமா மிங்கயார் டாண்டப் இப்படிக் கூறி நிறுத்தி விட்டு என்னைப் பார்த்தார் .

••• “அதுபோலத்தான் நட்சத்திரக் கூட்டங்களும் நம்மால் அவை உண்மையில் எந்த வடிவத்தில் இருகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவை பெரிதாக இருக்கின்றன . திபெத் பள்ளத்தாக்கு அளவுக்கு நாம் எழுதும் எழுத்துக்களை யாரும் படிக்க முடியாது . காரணம் அதன் அளவு” என்ற லாமா ...,

••• “இப்பொது நீ சுருங்கி சுருங்கி ஒரு மணல் துகளை விட சிறியதாகிவிட்டாய் என்று வைத்துக்கொள் . நான் உனக்கு எப்படித் தோன்றுவேன்? 

••• ஒருக்கால் நீ மணல் துகளை விட இன்னும் சிறதாகப் போனால் மணல் துகளே கூட உனக்கு ஒர் உலகமாகத் தோன்றும் , அப்படியானால் நான் உனக்கு எப்படித் தெரிவேன் ? எப்படிக் காட்சி யளிப்பேன்?”

••• நான் என்ன சொல்வது என்று தெரியாமல் தரையில் தூக்கிப்போட்ட மீனைப் போல வாயைப் பிளந்தேன் ,

••• இருட்டில் அப்போது தனித்தனியாக ஒன்றுக் கொன்று தொடர்பில்லாத உலகங்கள் மிதப்பதை நீ பார்ப்பாய் லாப்சாங் . உன் சிறுத்த உருவம் காரணமாக எனது மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் தனித்தனி உலகங்களாக மிதப்பதையும் , அவைகளுக்கு இடையே மிகப் பெரிய இடைவெளிகள் இருப்பதையும் நீ பார்பபாய் லாப்சாங் !'

••• சுழலும் உலகங்களைச் சுற்றி வேறு வேறு உலகங்கள் சுழல்வதைக் காண்பாய் . சூரியன்களைக் காண்பாய் ஒர் பிரபஞ்சத்தையே பார்ப்பாய்!”

••• என் மூளை கிறீச்சிட்டது . எனது குரு லாமா மிங்கயார் டாண்டப் கூறிய தகவல்களை உள்வாங்கிக் கொள்ள முடியாமல் என் புருவங்களுக்கு மேலிருந்த எனது மூளை திணறித் திக்குமுக்காடியது ...,

••• நான் சுதாரிப்பதற்காக சற்று நேரம் கொடுத்தபின் லாமா தொடர்ந்தார் ....

--- புத்தகம் [மந்திரக்குகை மர்மம் ]

குறிப்பு : மிக மிக அற்புதமான புத்தகம் வாய்ப்பிருப்பின் படித்துப் பாருங்கள்...,
===============================================

••• அகஸ்திய விஜயம் இதழில் கூட வானில் உள்ள கிரகங்கள் நடசத்திர அமைப்புக்கள் , கோள்கள் நம் உடலிலும் உள்ளது என்பார்கள்..., 

••• அகத்தியம் பெருமான் கூட ஜீவ நாடியில் 
"வெறும் புறக் கண்களுக்கு சிலப் புற பொருட்கள் தான் தெரிகிறது.. “ இப் பொழுது நீ அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து இந்த சுவடியை படிக்கின்ற இவன் அமர்ந்திருக்கும் இடைப்பட்ட இடத்திலே பலகோடி உயிரினங்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன தெரியுமா? "

••• ஒரு மெல்லிய நீலத் திரையும் மெல்லிய செவ்வண்ண திரையும் இங்கு அறையெங்கும் நிறைந்திருக்கிறது.. யார் கண்ணுக்கும் தெரியாதப்பா ..” எனவே செப்பு என்பது காலகாலமாக இருக்கின்ற பொருள் காந்தம் எனபதும் காலகாலமாக இருக்கின்ற பொருள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கூடினால் சக்தி கிடைக்கும் என்று புரிந்து கொள்ளவே மனிதனுக்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டது....,

===============================================

என்னெ இறைவனின் பிரபஞ்ச சிருஷ்டி......!!!

No comments:

Post a Comment