எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, April 5, 2014

சிவராத்திரி....,


••• பங்குனி மாத சிவராத்திரி நாளில் பக்திப் பூர்வமாக அருணாசலத்தை கிரிவலம் வருவோர்க்கு "அருணாசல ஈசனே" தானே அணிந்திருந்து களாக்காய் சித்தருக்கு அணிவித்த 1008முக அதிசிய ருத்ராட்ச ஜோதி தரிசனமானது பல வகைகளிலும் .., தக்க குருவருளும் கைகூடும்.

••• மதுரை – தேனி அருகே பண்டைய முத்து தேவன் பட்டிப் புண்ணிய பூமியிலே , 1628ம் ஆண்டு வாக்கில் களாக்காய் லிங்க சுவாமி , தாமரைப் பூவின் மேல் பிறந்தார் .

••• இவருக்கு சிவபெருமான் அளித்த உத்தம ருத்ராட்சமானது சர்வேஸ்வரனே அணிந்து வந்த ருத்ராட்சம் என்பதால் , அந்த ருத்ராட்சத்தில் பிரகாசித்த சிவஜோதிப் பேரொளியை தரிசிப்பதற்காக ....,

•••லட்சக் கணக்கான மக்கள் தினந்தோறும் அந்த ஒரு மாத காலத்திலே திருஅண்ணாமலையிலே குழுமினர்.,
சிவபெருமான் வார்த்தளித்த ருத்ராட்சத்தையும் , அதை அணிந்த மகானையும் தரிசித்து மக்கள் பெரும் பேறுகளை அடைந்தார்கள்..,

••• அண்டசராசரத்திற்கே சிவமையமான திருஅண்ணாமலையாம் அருணாசலத்தில் இருந்து சிவ லோகத்திலிருந்து .., திருகயிலாயத்திலிருந்து பெறப் பெற்ற ருத்ராட்சம் என்றால் என்னே அதன் சிவஜோதிப் பிரகாச மஹிமை...,!!!

••• ஒவ்வொரு பங்குனியிலும் இந்த ருத்ராட்ச ஜோதி உத்தம சிவ பக்தியுடன் அருணாசலத்தை கிரிவலம் வருபவருக்கு சிவ ஜோதியாய்க் காட்சி அளிக்கும் . தக்க குருவருள் பூண்டோர்க்கு ருத்ராட்ச தரிசனமாயும் பரிமளிக்கும்.,

••• பங்குனி மாத சிவராத்திரி நாளில் பக்திப் பூர்வமாக அருணாசலத்தை கிரிவலம் வருவோர்க்கு இந்த ருத்ராட்ச ஜோதி தரிசனமானது பல வகைகளிலும் தக்க குருவருளும் கைகூடும் என்பது திண்ணம் ..!

••• முழுமையான விளக்கங்களுக்கு மார்ச்2007 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழை காண்க...,
===============================================

••• நடப்பு பங்குனி மாத சிவராத்திரி 29.32014 சனிக்கிழமை விடியற்காலை 5.08 மணி முதல் இதே நாள் நள்ளிரவு 2.31 மணி வரை...,

===============================================
••• சென்னையில் உள்ள “சுங்குவார் சத்திரம்” என்ற பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சுங்கவ பிருங்கி சித்தர் தம் சீடர்கள் மூலமாய்ப் பேரன்புடன் காசி , பத்ரீநாத் ..., போன்ற நெடுந்தொலைவு தலங்களுக்குப் பாதயாத்திரையாய்ச் சென்ற பக்தர்களுக்கு அன்னதானம் . , மற்றும் ஏனைய சேவைகளை சத்திரங்களில் ஆற்றி வந்தார் .. இதன் காரணமாயும் “சுங்குவார் சத்திரம்” என்ற பெயர் வந்தது.

••• சிங்கநாத பிருங்கி மஹரிஷி எனும் மாமுனிவரின் தலைமையில் , பிரம்ம லோகத்தைச் சார்ந்த பிருங்கி மாமுனிவர்கள் என்ற வகையினர் உண்டு .,

••• இவர்கள் சுங்கவ பிருங்கி சித்தர் போன்ற பிருங்கிச் சித்தர்கள் உறையும் பிருங்கி லோகத்துச் சித்தர்களால் .., சமுதாயத்தில் எளிமையாய்ச் சேவைகளை நடத்தும் வழிமுறைகளைப் பயில்பவர்கள் ஆவர் ..

••• இச் சிவாரத்திரியில் சுங்கவ பிருங்கி சித்தர் கிரிவலம் ஆற்றுகிறார்..., முழுமையான விளக்கங்களுக்கு 

----- மார்ச்2014 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழை காண்க...,===============================================
••• மேலும் 29.3.2014 அன்று சனிக்கிழமையுடன் பூரட்டாதி நட்சத்திரம் சேர்வது நல்ல வேலை கிட்டவும் .. இருக்கின்ற வேலை பணியில் ஸ்திரமாக இருக்கவும் பெரிதும் துனண புரிகிறது. .,, 

••• எனவே 29.3.2014 அன்று அவரவர் இயன்ற வகையில் சனீஸ்வரர் வழிபாடு..., சிறப்பான பலன்களை வார்த்தளிக்கும்... 

– இதன் முழுமையான விளக்கங்களுக்கு அக்டோபர் 2009 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழை காண்க...,

1 comment:

  1. Vanakkam. MikaMika Nalla Pathivukal Matrum Muyarchi. Ungalaipondravarkal moolam than en ponra anparkal thankal aanmeega arivai viruthi seithukolla mudikirathu. Melum ungal pani sirakka vazhthukkal. Nandri. (thodurunkal .... thodarkiren)

    ReplyDelete