எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, July 5, 2014

ஸ்ரீபோகர் சித்தர்

••• பொதிய மலையில் ஸ்கந்த ஈர்ப்புப் பள்ளம் என்ற தபோவனப் பகுதியானது ஜோதி விருட்சங்கள் நிறைந்த அருள் வனமாகும் ! ஐம்பதாயிரம் வருடங்களுக்கு மேலாக இதே திருமேனியில் (படத்தை காண்க),

••• ஸ்ரீபோகர் இங்கு ஜோதி விருட்சத்தின் அடியில் நவநாத யோகத்தில் உறைந்து ஜீவன்களுக்கு இறையருளைப் பெற்றுத் தரும் அருள் கனியாய்க் கருனண வெள்ளத்தைச் சுரக்கின்றார்...,

••• தமக்கு இறைவன் அளித்த மானுட வடிவில் 50000தேவ ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்து நவயோகப் பஞ்சாட்சர சக்தியில் திளைப்பவரே ஸ்ரீபோகர் சித்தர்!

••• இந்த ஜோதி விருட்த்தின் அடியில் மிகழம் பலகையில் நவயோகப் பஞ்சாட்சர தாரனணயில் பொழியும் ஸ்ரீபோகர் பெருமானின் அருகில் சிவந்த நாசியை (மூக்கு) உடைய சிம்புறா என்னும் இரண்டு அரிய அபூர்வமான தெய்வீகப் புறாக்களும் ஸ்ரீபோகர் சித்தரின் யோக மா ஒளியில் ஆனந்தப் பரவசத்தில் திளைத்து அமர்ந்துள்ளன...

••• இறைப் படைப்புக்களின் மூன்றாம் நேத்திரப் பார்த்திரத்தைப் பரிபூரணமாக உய்த்து உணர்ந்த சித்புருஷர்களுள் ஸ்ரீபோகர் சித்தரும் ஒருவராவார் .

••• ஸ்ரீபோகர் சித்தர் பரவெளியிலிருந்து பொறிக்கும் ஜோதி வாக்கியங்கள் யாவும் ஜோதி விருட்சங்களின் ஒளி பொருந்திய இலைகளில் அவர்தம் யோகத் திறத்தால் பிரகாசித்து ஒளி அட்சரங்களாகவே பரிமளிக்கும் ..

••• இவற்றையே கர்ண பத்திரங்களாக ஸ்ரீபோகர் தம் திருக்கரங்களில் தாங்கிட அவற்றையே சிம்புறாக்கள் தம் சிவந்த நாசியில் தாங்கிச் செல்லும் . இவைதாம் லலாடங்க பிரசன்ன கர்ணிகா பத்திரங்கள் எனச் சிறப்புப் பெயர் பூண்டு வேத கிரந்தங்களாகப் பல தேவலோகங்களில் உருப்பெற்றுப் பிரபஞ்சத்தில் திகழ்கின்றன...,

••• இவ்வாறாக ஸ்ரீபோகர் சித்தபிரான் ஒவ்வொரு வினாடி நேரமும் தம்முடைய ல்லாட முனிபுங்கவ யோகத் திறத்தினால் இப்பிரபஞ்ச வாழ்விற்கான , அரிய ஒளி பொருந்திய மந்திரப் பத்திரச் சுடர்களை நமக்குப் பெற்றுத் தந்து கொண்டு இருக்கின்றார் .

••• தினந்தோறும் , குறிப்பாக புதன் ஹோரை நேரத்தில் , ஒரு தட்டில் பசு நெய் விளக்கேற்றி, தீப ஜோதிதனை ஜோதி விருட்சமாக பாவித்து மாவிலைகளைப் பரப்பி “ஸ்ரீபோகர் தர்ப்பயாமி” என்று 18முறை ஐவிரல்களின் நுனியிலும் நீரை வார்த்து அர்கயம் இடவேண்டும்

••• இதனால் குருவருளால் யோக சகதிகளின் தன்மைகளை உணரும் பக்குவத்தையும் , சக்தியையும் பெற்றிடலாம் . ஜோதி விருட்சத் தரிசனத்திற்கு ஸ்ரீபோகர் சித்த பிரானின் குருகடாச்சம் மிகவும் முக்கியமானதாகும்.!

••• ---- மேலும் பல முக்கியமான விளக்கங்களுக்கும் .., •••


••• போகர் பெருமானின் நித்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான மாளாபுரம் மும்மூர்த்தி விநாயகர் பற்றியும்...

••• பிரசன்ன கர்ணிகா பத்ர மகிமை பற்றிய அதித்வ்ய மஹா சித்தமாமறை விளக்கங்களுக்கும்...

••• ஸ்ரீபோகர் பெருமான் ஸ்கந்த ஈர்ப்புப் பள்ளம் , ஜோதிவிருட்சம் சிம்புறாக்கள் கீரபாவனம் கிளி உடணான , முழுப்படத்தையும் ஸ்ரீ அகஸ்திய விஜயம் 2001ஜுலை மாத இதழை காண்க..., [இங்கு படத்தில் காண்பது முழு படத்தின் கால் பகுதி..]

No comments:

Post a Comment