எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, July 5, 2014

திருவோண விரதம்

••• பறவைகள் எந்த மொழியையும் எளிதில் அறிய வல்லவை ., குறிப்பாக , மனித குல மொழிகளை பட்சிகள் நன்கு அறிந்து கொள்ள வல்லவை . இந்த ஏட்டறிவில்லா ஏலாக்குறிச்சி அறிவு தான் “ ஓணக் கீரப் பரிமழம்” என்பதாகும் .

••• ஒன்றுமறியா ஆட்டுக் குட்டிக்கு எது நல்ல தழை , எந்த விஷமுள்ள தழையை ஒதுக்க வேண்டும் என்ற ஏலா-அறிவு எப்படி கிட்டுகிறது ? சிந்தித்துப் பார்க்வும் ,

••• இதுவுமே “ ஓணக் கீரப் பரிமழம்” , தானாய் இயற்க்கையாய்க் கனிவது . இது இல்லையெனில் உலக ஜீவ இயக்கம் ஒரு போதும் சரியாக இயங்காது . இந்த “ஓணக் கீரப் பரிமழ” சக்தியை மனித குலம் பெற்றிட திருவோண நட்சத்திர நாள் விரதம் உதவும்.

•••மனிதர்களுக்கு ஏனைய உயிர்களுக்கும் ,பாமரர்களுக்கும் இது எவ்வாறு கிட்டும் ? இதற்காகவே சித்தர்கள் , மாமுனிகள் தம் திருவோண நாளின் விரத பலன்களை யாவர்க்கும் அர்ப்பணிக்கின்றார்களே ! இவர்களே உலகின் உண்மையான தியாகிகள்...!!!

••• திருவோண நட்சத்திர நாளுக்கான விரதாதி பலன்கள் நிறையவே உண்டு .

••• கலியில் ஒருவர் மனிதில் அடிக்கடி ஏற்படும் அல்லது மனதில் உண்டாக இருக்கின்ற தீய எண்ணங்கள் தாமாகவே இயற்கையாகவே விடுபட்டு அதற்கு பதிலாய் நல்ல எண்ணங்கள் முளைத்து மலர்வதற்க்கும் . திருவோண நாள் விரதம் உதவும் . அதாவது மனத் தூய்மை இதில் ஸ்திரம் பெறும்.

••• மனித உடலில் உள்ள “ஓணத் துழாய்” எனும் அரிய நாடிகள் திருவோண நட்சத்திர நாளில் மகத்தான முறையில் ஆக்கம் பெறுவனவாகும் .இந்நாடிகள் மனித சரீரத்திலும் , பரவெளியிலும் பல துறைகளிலும் பயன்படுவதாம்

••• ஓணத் துழாய் நாடி என்றால் என்ன ? •••

••• நாடி என்பது சித்த வைத்தியம் முதல் , சோதிடம் ஈறாக மட்டும் அல்லாது , இன்னும் பல துறைகளிலும் கை வரப் பெற்று ,பல அர்த்தங்களில் சமுதாய நடைமுறையிலும் மிளிர்வதாகும் , ஆனால் நடப்பு உலகச் சமுதாயத்தில் ,மக்கள் சமுதாயம்

••• விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டு வருவதால் – உடல் நாடி இயக்கம் அறிந்து மருந்தளிக்கும் சித்த முறையை கடைபிடிப்பதும் குறைந்து வருகிறது .. நாடி சோதிடமும் தற்காலத்தில் பெரிதும் பிராபல்யம் அடைவதால் நாடி என்றாலேயே மருத்துவப் பூர்வ நாடி கூட நினைவுக்கு வராது , “ நாடி சோதிடம்” என்று மட்டுமே பலருக்கும் முதலில் மனதில்படுகின்றது ...,

••• நாடி சோதிடத்திலும் , புனிதமான உண்மையான ஓலைச் சுவடி நாடிகள் தற்காலக் கலியில் மிகவும் அரிதாகி வருகின்றன . மாத சிவராத்திரி நாளுக்கும் , இத்தகைய ஓலைச் சுவடிகள் நாடி வாக்யமார்கமாய் வார்க்கும் கர்மவினைத் தெளிவு மண்டலத்திற்கும் நெருங்கிய ஆன்மப் பினணப்பு உண்டு.

••• இத்தகைய கால சக்தி ஆன்ம ரகசியத்தை நன்கு அறிந்தவர்களால் தாம் , துல்லியமாய் ஓலைச் சுவடி நாடி வாக்கியங்களின் சூக்குமத்தை அறிந்து உணர்த்த முடியும் . இதற்கு உதவுவதும் “ தாளதள ஓணத் துழாய்” எனும் நாடி வகைகள் ஆகும். ஆனால் இதனை அடைதற்குக் கடுமையான நியதிகளை கடைபிடித்தாக வேண்டும் நல்லொழுக்கமும் இதற்கான மூலமே !!!

•••மிருகங்கள் ,தாவரங்கள் போன்று ஒவ்வொரு ஜீவகுலப் பேச்சையும் புரிந்து கொள்ள உதவும் வகைப்பாடுகளும் “ ஓண துளத்துழாய் “ எனும் அரிய நாடி வகைகள் தாம் ...,

••• மொழியறிவு மட்டும் அல்லாது , தீர்க தரிசனம் , தீர்க ஞானம் போன்ற பரவெளி ஞானத்திற்கும் , ஓணத் தளித் துழாய் எனும் விசேஷமான நாடிவகைகள் உதவும் . இவ்வாறு மனித சமுதாய நலனுக்கென உள்ள நாட்கள் பலவிதம் , பலவும் மானுடக் கபால வழியில் இயங்ககுவன ..,

••• இதற்கான இயக்க சக்திகள் பலவும் பரவெளியில் இருந்தும் கிட்டலாகும் . தாவரங்களும் இதர ஜீவன்களுடன் பேச வல்லவையே ! விஞ்ஞானத்திலும் இதை ஏற்கின்றார்கள் !!

•••தாவரத்தின் உரையாடலையும் புரிந்து கொள்ள உதவும் மனித குலத்து ஆறாம் பகுத்தறிவின் ஒரு வகை நாள நாடிக்கும் “ ஓணத் தும்பித் துழாய்” என்று பெயர் ...,!!!

••• இவ்வகையான “ ஓணத் துழாய்” நாடி அம்சங்கள் பலவும் , திருவோண நட்சத்திர நாளில் நன்கு மலர்கின்றன ...!

••• இதுவுமே தலையானதாய் இங்கு விளக்கப் பெறும் சித்சக்திப்பூரணம் ஆகும்...

••• மேலும் “ ஓணப் பரிமழம்” என்றால் எளிமையாய் தீர்கத்துடன் , எதையுமே சொல்லும் முன்னரேயே சட்டென்று புரிந்து , அறிந்து , உணர்ந்து கொள்வதாகும் .. கற்பூர புத்தி என்று இந்த அறிவு நுணுக்கத்தைப் போற்றுவர்...,

••• ஓணப்பரிமழ சக்திகள் பரிமளிக்கின்ற , பரிணமிக்கின்ற , பரிபூரணிக்கின்ற , திருவோண நட்சத்த்திர நாளில் , நீங்கள் ஆற்ற வேண்டிய முக்கியமான கடமை என்ன ?????

••• “திருவோண விரதப் பா”சுரத்துடணான பூரண விளக்கங்களுக்கு ஆகஸ்ட்2011 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழை காண்க....,


No comments:

Post a Comment