எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, July 5, 2014

வாகன பூஜை...!!!

••• திருக்கோயில்களுக்குச் சென்று அங்கு பெறும் பிரசாத மாலைகளை பலரும் வாகனத்தின் முன்னே கட்டி விடுவதுண்டு . இது மிகவும் தவறான பழக்கம் , இறைவனின் பிரசாதமான மலர்கள் தெருவில் விழுந்து மக்கள் , விலங்குகளின் பாதங்களில் மிதிபடும் சூழ்நிலை உருவாகும் . அதனால் ஏற்படும் தோஷங்கள் வாகனத்தையும் அதன் உரிமையாளரையும் பாதிக்கும்.

••• இறைபிரசாதமாக பெற்ற மாலைகளை வாகனத்தின் உட்புறத்தில் வைத்து எடுத்து வந்து , ஓடும் நதிகளிலோ , கடலிலோ விட்டுவிடுதலே முறை....,

••• திருஷ்டிக்காக வாகனங்களின் கீழ் எலுமிச்சைப் பழங்களை வைத்து நசுக்குவதும் தவறான பழக்கம்...

•••திருஷ்டி பூசணிக்காயை நடுரோட்டில் உடைத்தால் , பரவெளியை அடைந்த திருஷ்டி தோஷங்கள் மீண்டும் யதா ஸ்தானத்தை சேர்ந்து விடும் என்பதி நியதி....!!
•••எதாவது வாகனங்கள் ஏறி , வழுக்கி விழுந்து விட்டால் அந்தத் துன்பங்களும் வேதனைகளும், பூசினிக்காயை உடைத்தோரையே சென்று சேரும் .

••• இத்தகைய துன்பங்களைத் தவிர்க்க , திருஷ்டி கழித்த பூசணிக்காயை , நடுரோட்டில் உடைக்காமல் , ஒரு ஓரத்தில் வாகனங்களுக்கோ , மற்றவர்களுக்கோ , இடையூறு இல்லாதபடி வைத்து விட்டு விட வேண்டும்.

---- TAKEN FROM BOOK : கண் திருஷ்டியைக் களைவது எப்படி.. [ ஸ்ரீ அகஸ்திய விஜயம் வெளியீடு

No comments:

Post a Comment