எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, July 5, 2014

அடிமை கண்ட ஆனந்தம்

••• பூர்வ ஜன்மப் புண்ய சக்திகள் நிறைந்தோர்க்கே - "அடிமை கண்ட ஆனந்த~(மா)~ம்~!!! (ஆம்) --- ஆமாம் ! ஆமாம் !!! --நிச்சியமாக !!!

==========================================================

••• குருகுல வாசம் என்பது சாசுவதமான , சிரஞ்சீவித்வம் பெற்ற ஞான பூர்வமான குரு-சிஷ்ய இறைப் பினணப்பாகும். எத்தனை கோடி யுகங்களானாலும் இது தெய்வீகத் தொடராகப் படர்ந்து , பரிமளித்துக் கொண்டே இருக்கும்.

••• இவ்வகையில் பள்ளிச் சிறுவனாய் , ஸ்ரீவெங்கடராமன் [குரு மங்கள கந்தர்வா] பெற்ற கலியுக குருகுலவாசமானது ,, பல கோடி யுகப் பரிணமிப்புச் சுடராய் பொலிந்து ,எத்தனையோ கோடி ஜீவன்களுக்குக் குருகுலவாச அனுபூதிகளைப் புகட்டி , இறை லட்சிய வாழ்கைக்கு நடைமுறைப் பாடங்களாகத் துலங்குகின்றது .

••• படித்து , உய்த்துத் துய்த்துப் பாருங்கள் ! எல்லோருக்கும் ஓவ்வோரு இடத்தில் உத்தம பொக்கிஷம் , நல்லதோர் பிராயச்சித்தம் , உன்னதப் பரிகாரம் , இறையுண்ர்வு பொங்குதல் ,

••• பளிச்சென்று பீறிட்டும் பீஜாட்சர ஒலிப் பரல் –இவ்வாறாக இன்னும் பலவும் தெய்வீகப் பரிசாய்ப் பதிந்து முகிழ்ப்பதை நீங்களே நிச்சியமாக உண்ர்வீர்கள் !!!

••• "அடிமை கண்ட ஆனந்தம்" எனும் இத்தொடரில் சற்குருநாதராம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருகுலவாசத்திற்கு இட்டுச் செல்கின்றோம் .

••• பூர்வ ஜன்மப் புண்ய சக்திகள் நிறைந்தோர்க்கே இந்த அனுபூதிகளின் ஸ்பரிசம் கிட்டும் . இதன் கனிந்த பலன்களாய்க் குருவைத் தேடுவதற்கான நெஞ்சு நிறைந்த அருட் சாரல்களும் மகத்தான நல்மாற்றங்களும் அவரவர் வாழ்க்கையில் கூடி வரும்...

---- ஸ்ரீஅகஸ்திய விஜயம் ...!!!

===========================================================

••• குறிப்பு : இதுவரை 1993லியிருந்து ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் நூற்றுக்கணக்கான அடிமை கண்ட ஆனந்த அனுபூதிகள் மலர்ந்திருக்கின்றன ... அஃதுதோடு தனி புத்தகங்களாக *அடிமை கண்ட ஆனந்தகள் 27பாகங்கள் வந்துள்ளன... வெறும் 20ருபாய் தான் ஒரு புத்தகம் படித்துப் பாருங்கள்....!!

••• ஸ்ரீஅகஸ்திய விஜயம் புத்தக நிலைய முகவரிகளை இனணப்பில் காணவும் : - http://www.agasthiar.org/store.htm

••• இதோ அடிமை கண்ட ஆனந்தத்தில் இருந்து சிறு துணுக்குள் படங்களில்....!!
===========================================================

••• 1,200ருக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளிலும் .., 

ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழில் மூலம் 1993 இருந்து இன்று வரை அகஸ்தியர் கிரந்த வாக்கியங்களிலிருந்து அருட் பெரும் எண்ணற்ற தெய்வீக விளக்கங்களை அமிர்த மழையாய் வர்ஷித்து அளித்(த)து வரும்....,
                                            என்றென்றும் வாழும் ஏகாந்த ஜோதி
                                 "அருணாச்சல ஜோதி " "அலங்கார பீடாதிபதி "
                                      திருக்கயிலாய பொதியமுனிப் பரம்பரை
                                             1001வது குரு மஹா சன்னிதானம்
                                        சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை
                                                      "குரு மங்கள கந்தர்வா"
                     ஸ்ரீலஸ்ரீ சத்குரு வேங்கடராம சுவாமிகளின் குருஜெயந்தி
                                                           இன்று : 21-5-2014

••• கோவையில் உள்ள அன்பர்கள் முடிந்தால் இன்று கோவை அகஸ்திய விஜய கேந்திரால்யாவிற்கு வந்து குருஜெயந்தியில் கலந்து கொள்ளலாம் ..,

Sri Agasthia Vijaya Kendralaya Branch
Big Bell Complex
Shop Number 49, First Floor
Diwan Bahadur Road
(opp Sri Ratna Vinayaka Temple) near pazhlamuthir nilayam
R.S.Puram, Coimbatore 002**** அடிமை கண்ட ஆனந்தத்தில் இருந்து சில துளிகள் ....

========================================================================


இந்த திவ்யானுபூதி எவருக்கும் எந்த நேரத்திலும் கிட்டிலாம் ..., !!! 
சிறுவனுக்கென்று வாய்த்த .... அப்படியா சொல்ற” ....  என்ற பெரியவரின் குருமொழி வாக்கியச் சாரமும் “எக்காலத்தும் யாவர்க்கும் பலனளிக்கும் குருவனுபூதி வாக்கியம் ..!”
(((((((((((((**********)))))))))))
*              எனவே , மறக்காமல் இந்த அனுபூதியின் வாக்படுத்வத்தைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் .

***   

‘குரு மஹா குரு தரிசன விழா’

*அதிதிவ்யமான குருதரிசனக் கோலம்*“ கோலமிது கோலமிது வரையாக் - கோலமிது

வாக்காலும் மனத்தாலும் நிறையாக் - கோலமிது

ஆலத்துத் தென்கோவின் அகத்தியப் புலநாதன்

அண்டி வந்து அருள்கின்ற பாமரத்துக் கோலமிது
                          ..............................             .........................................         .................................
*    தலையில் விவசாயி போல் நீண்ட நீல நிறத் தலைப்பாகை | *இடதுபுறக் காதோரம் அந்த நீண்ட தலைப்பாகை முறம் போல் பரந்து , வளைந்து அழகாய் முதுகுப் பக்கம் கீழ் படர்ந்து இறங்கி இறகு போல் விரிந்து இருந்தது | * நெற்றியில் பளிச்சென்று திருமண் (நாமம்) ! | * கிருஷ்ண பரமாத்மாவின் புல்லாங்குழல் ஊதும் தோற்றம் போல் , நின்ற நிலையில் வலது காலைச் சற்றே முன்னே மடித்து சாய்ந்து நின்று இருந்தார் . | *ஆனால் கோவணாண்டிக் கோலம்தான்  இதில் மாற்றம் இல்லை . .,,, ஆனால் கோவணத்தின் வடிவமும் , நிறமும் வேறாய்த் தெரிந்தது .

*    | கை மணிக் கட்டுக்களில் .... தோளில் ஏதேதோ அழகான வண்ணங்களில் காப்புக் கயிறுகள் .| * ஜம்மென்று முறுக்கி விளைந்திருக்கும் மீசை! | * கிராமீயச் சிரிப்பு | * கையில் அந்த மூங்கில் கழி! | * ஏழு முடிச்சுக்களும் அந்த மூங்கிலில் அப்படியே தென்ப்பட்டன . | *அந்த மூங்கில் கழியில் முகவாய்க் கட்டையைப் பதித்தவாறு பெரியவருக்கே உரித்தான பாணியில் தெய்வீகச் சிரிப்பு ....,

                 ||இவ்வாறாய் சற்றுச் சாய்ந்து நின்று காட்சி கொடுத்தார் பெரியவர்|| ...,
...................................,,,,
சிறுவன் அசந்தே போனான் ..,அவனால் பார்த்துப் பார்த்துச் சற்றும் மாளவில்லை ...,
                                                             .................................................,,,,,,,,,,,,,
*    இந்தத் தலைப்பாகைலேந்து ., நாமத்துலேந்து முழங்கால் முட்டில இருக்குற சந்தனக் கீத்து வரைக்கும் ...எல்லாம் அந்தந்த லோகத்துக்குப் போய்ச் சேர வேண்டிய பொருளுங்கன்னு அப்பவே சொல்லிட்டேன் ...,

*    இதெல்லாம் பூலோகத்துச் சரக்கு கெடயாது நயினா .. இந்த வேஷத்தைக் கலைச்சுட்டாக்க ... என்னதான் கோடி வருஷம் தபஸ் பண்ணினாலும் இதே மாதிரித் திரும்பி வராது  , என்ன புரியுதா? இதுக்கெல்லாம் .. பிற்காலத்துல ரொம்ப ரொம்ப அட்வான்ஸ்டு காமெரா எல்லாம் வர்றப் போகுது !
..................................... ,,,                                                                                        .................................................,,,,,,,,,,,,,
*    வாத்யாரே ... நீ விமானத்து மேல நெஜமாவே ஏறி நிக்கற மாதிரியே இருக்கு வாத்யாரே........
*    என்று திரும்பிய பார்த்துப் பேச ஆரம்பித்தவன் ...

*    பெரியவர் அங்கு இல்லாதது கண்டு திடுக்கிட்டான் .கோயில் முழுதும் சுற்றிப் பார்த்தும் அவரைக் காண முடியவில்லை!

*    ஒரு சமயத்துல ஒரு இடத்துல ஒரு வாத்யாரைத்தான் பார்க்கலாம்னு குருகுலவாசத்துல ஒரு தர்மச் சட்டம் ...” – இந்த சத்வாக்கியம் அவனுள் நன்றாய் ஒலித்தது . இப்போதும் உண்மையாகி விட்டது தானே .

*    அதான் வாத்யார் உடனடியாய் இப்படி மறஞ்சுட்டாரோ ?.....’

*    பிற்பாடு பெரியவர் , பூவுலகை விட்டுத் தன்னை முழுமையாய் மறைத்துக் கொண்ட பிறகும் கூட ...., அவ்வப்போது சிறுவன் இந்த ஆலயத்திற்கு வந்து , அந்த விமானத்தில் வடித்திருக்கும் பெரியவரின் பாமரக் கோலச் சிதை வடிவத்தை அடிக்கடி தரிசித்துக் கொண்டு வரலானான்..

 இப்போதும் நிகழ்ந்து வருவதே.!  

*அடிமை கண்ட ஆனந்தம்  - “அப்படியா சொல்ற” குருஅனுபூதி  --- [ நவம்பர் 2011 – மார்ச் 2012]
குருதரிசனக் கோல* மஹானுபூதி - [மார்ச் – ஆகஸ்ட் 2012] ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழ்.

No comments:

Post a Comment