எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, July 5, 2014

ஏம்பல் சிவாலய மகிமை

••• உட்கார்ந்த/படுத்த நிலைகளில் கால்களை ஆட்டக் கூடாது ., வலது காலை ஆட்டிடில் மூட்டு சம்பந்தமான நோய்களும் இடது காலை ஆட்டிடில் வாயு சம்பந்தமான பிடிப்புகளும் ஏற்படும் ...!!!

---- ஸ்ரீஅகஸ்திய விஜயம் 1996 ,ஆகஸ்ட் பக்கம் 4 .
============================================================
••• பூவுலகின் யோகப் பட்டறை , ஏம்பல் சிவக்காணி !!!

••• ஏம்பல் தலத்தில் கால் பட்டால் பத யோகம் , பாத யோகம் , கை பட்டால் கரயோகம் , மூச்சுக் காற்று பட்டால் பிராண யோகம் , கண்ணால் பார்த்தால் நேத்ரயோகம் , காதால் கேட்டால் கர்ணசிவயோகம் ,

••• அமர்ந்தால் குடயோகம் , நின்றால் தம்பயோகம் , மேலே பார்த்தால் ஊர்தவ யோகம் ,கீழே பார்த்தால் வீழியோகம் ... என்று வைரவ யோக வாக்கியங்கள் ,

••• இத்தலத்தின் யோகப்ரகாச மகத்துவத்தை யோகமணத்துடன் பேசும் , அதாவது மொத்தத்தில் , யோகமே அறியாது யோகிக்க வைக்க வல்ல யோகசக்தி பூமியுமே ஏம்பல் சிவதளம் .

••• திருவையாறு தலத்தில் அகத்தியர் குறுமுனியாகும் அனுபூதி நிகழ்ந்தது . பிற தலங்கள் போல் அன்றி , ஏம்பல் ஆலயத்தில் அகஸ்திய மஹாபிரவு தம்முடைய ஆதிகாலத் தோற்றத்துடன் காட்சி தந்தருள்கின்றார் ...

••• நல்ல உயரத்துடன் , பைரவ யோகக் கனலில் இளைத்த மாமுனிச் சரீரியாய் அகஸ்திய மஹாபிரபு இங்கு தோன்றி இருப்பது , தொன்மையிலும் தொன்மையான திருவையாற்றுக்கும் மூத்த தலமாய் ஏம்பல் யோக பூமியைப் புலர்விக்கின்றது ...,

••• சிவம் நன்கு கனியும் சிவக்காணி யோக பூமியான ஏம்பல் கிராமம் , முற்காலத்தில் பூவுலகின் மகத்தான யோகப் பட்டறையாகவும் மிளிந்ததாகும் .., யோகம் என்பது மனிதனின் உள்ளம் , அறிவு , புத்தி , மனம் , உடல் ஆகிய ஐந்தையும் ஒருமித்துச் செயல்பட வைப்பது தானே .

••• கலி மனிதனுடைய துன்பங்களுக்கு மூல காரணம் , இவ்வைந்தும் ஒருமித்துச் செயல்படாதது தான் .., இந்த ஐந்தில் ஒவ்வொன்றும் வெவ்வெறு கோணங்களில் கலிமனிதனை இழுக்கின்றதே , என் செய்ய ? இதனைச் சீர்திருத்த வல்ல சிவயோக சக்தி பூமியுமே ஏம்பல்.

••• நந்தி மூர்த்தியின் பத்னீயான கர்ணமுடி தேவி இங்கு வழிபட்டே திருவையாற்றில் நந்தி மூர்த்தியை மணக்கும் பாக்கியம் பெற்றார் .
.
••• ஏம்பல் புண்ணிய பூமியில் நடந்தாலும் , ஓடினாலும் , அமர்ந்தாலும் ., நின்றாலும் , இருந்தாலும் யோகமே , யோகமே .., முற்காலத்தில் மகத்தான பைரவி உபாசனைக் கேந்திரமாய்ப் பொலிந்த தலம்.

---
ஏம்பல் சிவாலய மகிமை ..[ ஸ்ரீஅகஸ்திய விஜயம் வெளியீடு ]

No comments:

Post a Comment