எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, August 26, 2014

"ஆபத்சகாய மகரிஷி" தரிசனம்

••• நாளை திங்கட் கிழமை அமாவாசை திருக்கணித பஞ்சாங்கப்படி இரவு 7மணி 43நிமிடம் வரை நிரவுகிறது...

••• ••• திங்கட்கிழமையும் , அமாவாசையும் சேர்ந்து வருகின்ற சோமவார பிரதட்சிண அமாவாசை அன்று , ஆலயங்களில் குறிப்பாக அனுமார் சந்தியில் 108 , 1008 முறை பிரதட்சணமாக வருவோர்க்கு "ஆபத்சகாய மகரிஷி" எந்தவகையிலேனும் தரிசனம் தந்து அருள்கின்றார் . மிகவும் குட்டையான வடிவை உடையவர்

••• இவருக்கு ஆபத்சகாய மகரிஷி என்ற பெயர் வரக் காரணமே , எத்தகைய ஆபத்து நிலைகளிலும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் அன்பு கனிந்த உள்ளத்துடன் பக்திப் பூர்வமாக , இம்மாமுனியை வேண்டி ,

••• ஆலயத்தில் அடிப்பிரதட்சிணம் வந்திட்டால் , உடனே துனண வந்திடும் அதியற்புத யோகவள , தபோவள மகரிஷி !

••• கூப்பிட்ட குரலுக்கு பெருந்துனணயாய்த் தக்க சமயத்தில் வந்து சகாயம் தருகின்ற மாமுனியும் ஆவார்..!!!’

••• ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தால் எப்போதும் அருந்துனண புரியவே , ஆபத்சகாயயேஸ்வர சிவமூர்த்தியின் திருவடிகளில் தவம் பூணும் ஸ்ரீ ஆபதசகாய மகரிஷி உதவிட காத்திருக்கிறார்...!!
••• ஸ்ரீஆபத்சகாய மகரிஷியின் திருவுருவம் கும்பகோணம் – நன்னிலம் அருகே ஒரு சிவாலயத்தில் இருக்கின்றது , தேடி , நாடிச் சரணடைந்து இவரைத் தரிசித்து வாழ் நாளில் நன்கு கெட்டியாக பற்றிக் கொள்ளுங்கள் ...!!!

••• எந்த வகைத் துன்பங்களிலும் துனண வந்து காக்கின்ற உத்தம மகரிஷி ! வாழ்க்கையில் எந்த இலட்சியமும் இல்லாது ஏனோ தானோ என்று வாழ்வோர் ., !!!

••• “இலட்சியம் இன்றி குறிக்கோளின்றி வாழ்ந்து கெட்டு அலைகின்றேனே ! இறைவா என்னைத் காத்தருள்” என்று வருந்தி வேண்டி

பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோளிலாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத் துளானே

••• என்ற சக்தி வாய்ந்த தமிழ் மறைத் துதியைத் தினமும் உளமாற ஓதியவாறு ஆலயப் பிரதட்சணம் செய்து வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் நல்ல சாசுவதமான , சத்தியமான பிடிப்பு ஏற்படும் ..!!

•••அதிபயங்கர கனவுகள் , தாள முடியாத வேதனைகள் , அளவுக்கு மீறிய துன்பங்கள் வந்து , ஒருவரைச் சாய்க்கும் போது என்ன செய்வது , ஏது செய்வது என்று தவிக்கையில் ,

••• ஒருவருடைய வாழ்வில் அவரவருடைய கர்ம வினைகளின் அழுதத்தைப் பொறுத்து 5,7,11,13 என்ற எண்ணிக்கையில் முறைகளில் மட்டுமே தான் , தம் ஆயுளில் ஜன்ஹூ மஹரிஷி போன்றோர் தம் தவத்தைத் துறந்து வந்து உதவுதல் என்ற அருந்தவத் துறை நியதிகள் உண்டு ...!!

•••ஆனால் , ஜன்ஹூ மஹரிஷியின் அரும்பெரும் சிஷ்யரான ஆபத்சகாய மகரிஷியானவர் , கலியுக மக்கள் அளவுக்கு மீறிய துன்பன்களால் அவதியுறுவர் என்பதால் ,

••• தம் தபோ பலன்களை அர்ப்பணித்து , எப்போது நம்பிக்கையுடன் அழைத்து ஆலயப் பிரதட்சிணம் செய்வோர்க்கு உதவும் இந்த நல்வரத்தைப் பெற்றார் ...!!!

--- TAKEN FROM http://agnisiksha.com/

••• இதேபோல் நாளை சோமவார பிரதட்சண அமாவாசை அன்று அரசமரத்தை சுற்றி வருவதலும் .., பித்ருக்களுக்கு ப்ரீதி அளிப்பதும் , ASTRAL TRAVELக்கும் பெரிதும் துனணபுரிவதாம் இது பற்றிய முந்தைய பதிவு...!!!

No comments:

Post a Comment