எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Thursday, December 11, 2014

போகர்

•••குற்றால மலையின் கெவுனக் குளிகைச் சித்தர் குகைக்குத் தென்மேற்கில் கூப்பிடு தூரத்தில் ஒரு பெரிய குண்டக்கல் உள்ளது .

••• அக்கல்லின் மீது ஏறினாலும் , அசைத்தாலும் அசையுமேயொழிய ஒரு போதும் உருளுவதில்லை அதைச் சுற்றிலும் தரையிலிருந்து பாறை அமைந்துள்ளது ....

••• கல்லின் மீது ஏறி ஈசான மூலை பார்க்க ஒரு வட்ட மரத்தினடியில் ஒரு மகான் நிட்டையில் இருப்பதையும் அருகில் ஒரு முலிகைச் செடியையும் காணலாம்....

••• இக்காட்சியைக் கல்லை விட்டுக் கீழே இறங்கினால் காண முடியாது....!!!
-- போகர் மலைவாகடம்
=================================================


••• போகரென்று சொல்லவென்றால் லோகந்தன்னில்
பொங்கமுடன் கண்டவர்கள் தானடுங்க
யோகமுடன் திக்கெல்லாம் திரண்டுமல்லோ
எந்தனையுங் காணுதற்கு வெகுஜனங்கள்
சாங்கமுடன் கண்டல்லோ யடியேனுக்கு
சட்டமுடன் சோடசோபசாரஞ்செய்து
வேகமுடன் நிதியெடுக்க எந்தனைத்தான்
மேதினியில் அழைத்தவர்கள் கோடியாமே ..!!!
                                    ---போகர் ஏழாயிரம் பாடல் எண் 4413
..................
••• கண்ணான கண்மணியே போகநாதா
கைலாச ரிஷிகள்முதல் மெச்சும்பாலா
விண்ணுலகில் நவகோடி ரிஷிகள்தம்மில்
விருப்பமுடன் தேர்ந்தெடுத்த வினோதபாலா
தண்ணா சுடர்மணியே சூட்சாசூட்சம் தாரிணியில்
கற்றறிந்த லோகநாதா...
வண்ணமுடன் மேதினியில் கீர்த்திபெற்ற
வைராக்கியம் போகரென்று மதித்திட்டாரே
                                  பாடல் எண் 4480..

----------- BHOGAR ROCKS ISN'T HE???? ----------------

No comments:

Post a Comment