எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Tuesday, April 7, 2015

கோரக்கர் மூலி

••• கோரக்கர் மூலி கஞ்சா அல்ல என்பதற்கு சாக்ஷி
புளியுமது நவ நீத மிதுதான் கேளு
புகழான கற்பம் உண்டோர்க் கெய்தும் வாதம்
அறியாது கோரக்கர் மூலிதானும்

அப்பனே கெஞ்சா வென்று உண்டு செத்தார்
புளியதுவோ கோரக்கர் மூலியாகும்
புகழாக உண்டோர்கள் சித்தரானார்…,

••• --- அது என்ன *புளி*என்பதை அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதியில் தெரிந்து கொள்க
••• மேலும்… அமுரிக்கான பரிபாஷை
•••பார்த்திபனே அகாரமடா விந்து விந்து
பதிவான விந்துவடா சாரமாகும்
சாற்றியதோர் சாரமது அப்பு அப்பு
சங்கையில்லை அப்பதுவுந் தண்ணீர் தண்ணீர்
போற்றியே தேகந் தண்ணீர் வெண் சாரையாகும்
தெவிட்டாத சாரையடா அமுரிதானே


•••அமுரிக்கு பேர் மாத்திரம் சொல்லக் கேளு
அப்பனே சந்திர புஷ்கரணி என்றும்
கரகமதில் ஊசிநீர் ரோம நீ ரென்றும்
கண்மணியே சொல்வார்கள் அநந்த நாமம்....

•••பூசை நெறி யறியாமல் ஆண்பெண் இரண்டும்
பொல்லாத மாய்கை வலை தன்னில் சென்று
ஆசைகொண்டு மோகமதில் அறிவு கெட்டு
அங்கமென்ற சங்கதியை யறியாமற்றான்
பாசமென்ற பல ருசியால் மாண்டார் கோடி
ஓசையென்ற சத்தம் உதித் தடங்கும் வீட்டை
உத்தமனே மனக் கண்ணால் நித்தம் பாரே.. •••

•••நூல் : அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி
•••வெளியீடு : தாமரை நூலகம் thamarainoolagam.com

No comments:

Post a Comment