எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, April 8, 2015

சிவ நாம மகிமை

••• நகாரம் முதல் மந்திர நாமமே என்றார்கள் பெரியவர்கள் ..,
ந - என்ற எழுத்து திருவடியைக் குறிக்கும் ,
ம – என்ற எழுத்து உடலைக் குறிக்கும் .,
சி – என்ற எழுத்து தோள்களைக் குறிக்கும் ..,
வா – என்ற எழுத்து வாயைக் குறிக்கும் .., 
ய – என்ற எழுத்து கண்களைக் கூட்டி , பூரணத்துவம் காட்டும்..,

••• இவ்வாறு “நமசிவாய” என்ற பஞ்சாட்சரம் ஆடும் நடனத்தைப் பற்றி சித்தர்கள் விளக்குவதைக் காண்போமா ?
••• நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய் 
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய் 
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்துநின்ற நேர்மையில் 
செவ்வைஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே.
- சிவவாக்கியர் ...,

••• சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும் 
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்றிட சிவகதி தானே !

••• இந்தப் பாடலில் “சிவ” என்ற நாமம் ஓன்பது முறை வரிகின்றது .. ஆகவே , இந்தப் பாடலை பன்னிரண்டு முறை ஓதினாலே 
சிவ அஷ்டோத்திரம் சொன்ன பலனை அடைவார்கள்....

••• நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும் 
நமசிவாய அஞ்சிலஞ்சும் புராணமான மாயையும் 
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே 
நமசிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே. - சிவவாக்கியர்

••• மகாரமானது நகாரம் தூக்கும் போது , அதன் மேல் பாய வேண்டும் .. 
சிகாரமானது மகாரம் மேலே பாயும் போது ,
••• கும்பம் போல் நிற்க வேண்டும் . அப்பொழுதுதான் 
ரேசக கும்பம் வேகமாக , தங்குதடையின்றி எழும் …,
••• தங்குதடையின்றி எழுவது என்பது ஒரு தேங்காய் மூடி எழுந்திருப்பது போல் தெரியும் , “வா” என்பது மூலாதாரத்தில் தொடங்கி , மணிபூரகத்தில் முடிய வேண்டும் .
•••அந்த நிலையில் நீ கும்பித்து எடுத்தால் அந்த வகாரமானது
 கும்பத்தின் மேல் தேங்காய் அமர்வது போல் அமரும் …

••• இது யகாரத்தில் வந்து விட்டால் பூத்துக் குலுங்கும் .., வாசி யோகம் பயின்றகர்களுக்குத்தான் இது புரியும் …, தக்க சற்குருவை நாடித் தெரிந்து கொள்ள வேண்டிய விஷியங்கள் இவை, ..,
••• உருவன்றி யேநின் றுருவம் புணர்க்குங்
கருவன்றி யேநின்று தான்கரு வாகும்
அருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்
குருவன்றி யாவர்க்குங் கூடவொண்ணாதே. – திருமூலர்...,

••• ஏனைய திவ்ய விளக்கங்களுக்கு சிவ நாம மகிமை.. {ஸ்ரீஅகஸ்திய விஜய வெளியீடு ).. புத்தகங்களை பெற வேண்டுமாயின் இவ்வினைப்பின் முகவரிகளை நாடுக ...http://www.agasthiar.org/store.htm
இன்னும் பற்பல நாளிருந் தாலும்
இக்க ணந்தனி லேஇறந் தாலும்
துன்னும் வான்கதிக் கேபுகுந் தாலும்
சோர்ந்து மாநர கத்துழன் றாலும்
என்ன மேலும்இங் கெனக்குவந் தாலும்
எம்பி ரான்எனக்கு யாதுசெய் தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடிநின் றோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

No comments:

Post a Comment