எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, April 8, 2015

சிவராத்திரி

••• சாஸ்தாவாகிய ஐயப்ப அவதாரத்துவம் உலகிற்கு உணர்த்தப் பெற்றதும் , மஹா சிவராத்திரியின் மூன்றாம் ஜாமமான இந்த “நெய்வேளைக் காலத்தில் தான்” . அதாவது மஹா சிவராத்திரியின் நெய் அபிஷேகத் தருணத்தில் பூலோகதாராய நமக்கு ஐயப்ப அவதாரிகை புலர்விக்கப் பெற்றது ..., சாட்சாத் சாஸ்தா மூர்த்தியே சிபபூஜை ஆற்றும் காலமுமிது..
••• இதனாலும் , சபரி மலைக்கான விரதத்தில் , நெய் நிரப்பிய தேங்காய்களை இரு முடியாய்க் கட்டித் தலையில் சுமந்து சென்று , சபரிகிரீசனாம் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் ஆற்றுவது முக்கியத்துவம் பெறுகின்றது.
••• மஹாசிவராத்திர் நாளன்று இரவில் பொதுவாஇ ,ஒவ்வோரு ஜாமத்துக்கும் ,பால் , தயிர் ,தேன் , இளநீர் ,என்று வரிசையாய் , தொகுதி அபிஷேகங்கள் நான்கு காலப் பூஜையில் , சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகத்தையும் செய்வதுண்டு ..
••• இந்த நெய்க் காப்பிற்கு , “நெய்வேளை” என்று பெயர் . சிவலிங்கத்துக்கான இந்தப் பசு நெய்க் காப்பை – நெய்வேலி , நெய்ப்பாவாடம் என்றும் போற்றுவர்..;
••• இந்த நெய் அபிஷேகத்திற்குப் பிறகு , நெய்க் காப்பில் ஜவலிக்கும் சிவலிங்கத்திற்கு , பசு நெய்யில் தோய்த்த கம்பளியைச் சார்த்துவர் . இதனை இளம் வெண்ணீரால் அபிஷேகம் நிகழும்..,
••• வேளை வருவதற்கு ரத்னக் கம்பளம் சார்த்தும் பிரார்த்தனை “எதற்கும் வேளை வர வேண்டும் என்ற ஒரு சமுதாய வழக்கு உரை உண்டல்லவா . இங்கு “வேளை வர வேண்டும்” என்பது , மஹா சிவராத்திரிப் பூஜையில் நெய்வேளையில் வரும் பசு நெய் அபிஷேக நேரத்தையும் குறிப்பதாம் .

••• மஹா சிவராத்திரி தினத்தில் வரும் இத்தகைய வரம் தரும் வரவேளைக்காய் , ஆண்டு முழுதும் தவம் பூண்டு கலியுகத்திலும் காத்திருக்கும் எண்ணற்ற மஹரிஷிகளும் , பக்த கோடி ஜனங்களும் உண்டு .,
••• இதனாலும் “வேளை வர வேண்டும் என்பது , நெய்வேளையாகவும் குறிப்பதுண்டு. நெய்வேளையும் வந்து , இதில் சிவவேளை , முருக வேளை தரிசித்தால் , கேட்ட நல்லன எல்லாம் கனியும் ...,
••• மஹா சிவராத்திரி தினத்தில் ரத்தினக் கம்பள நெய்க்காப்பை ஆற்றி , நெய்வேளையில் தரிசிப்போர்க்கு – குடும்பத்தில் நெடுக்காலமாய்த் தடை பட்டிருக்கும் நற்காரியங்கள் நிறைவேறுவதற்கு , “(நல்) வேளையும் இனிமையாய் வரும் ...
••• இந்தப் பசு நெய்க் காப்பை ஒவ்வொரு சிவாலயத்திலும்,மஹா சிவராத்திரியின் மூன்றாம் காலப் பூஜையில் ஆற்றி , உத்தமப் பலன்களை அடைந்து கொண்டு , உலகச் சமுதாயம் எல்லா நலன்களையும் பெற்றிடுவதற்கான அருஞ் சிவசேவையை ஆற்றிடுங்கள்
••• மேலும் திவ்ய விளக்கங்களுக்கு ஸ்ரீஅகஸ்திய விஜய மார்ச் 2015 மாத இதழை காண்க ...., http://www.agasthiar.org/store.htm

No comments:

Post a Comment