எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, October 20, 2015

POOJAI TIMINGS

ஸ்ரீஅகஸ்திய விஜயத்திலிருந்து ,,

புலிப்பாணி [asks ]
             குருதேவா ! ரொம்ப பேர்கள் நான் ஆயுத பூஜை ,சரஸ்வதி பூஜை செய்தேன் . ஆனால் , குழ்ந்தை படிக்க மாட்டேன் என்கிறது என்கிறார்களே.

சர்வ ஸ்ரீஅகஸ்தியர் [says] 

 இறைவன் அருளால் இன்று சரஸ்வதி பூஜை , ஆயுத பூஜை அமைந்துள்ளது . இன்று நவமி திதியும் உள்ளது ..,  ஆனால் , பெரியவர்கள் எந்த நேரத்தில் கும்பிட வேண்டும் என்று வகுத்து வைத்துள்ளார்கள்...,

“ஆனால் , கால நேரம் செய்வதைப் போல் நான்கு பேர் செய்ய மாட்டார்கள்.., கால நேரத்திற்கு அவ்வுளவு மதிப்பு உண்டு..., எந்தெந்த லக்னங்களில் எப்படி பூஜை செய்ய வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள் ..,

இதை குருவை நாடி தெரிந்து  கொள்ள வேண்டும்  ஏனென்றால் , நேரம் பல ரகசியங்களை செய்கின்றது..,  நேரம் தவறி விடுவதால் பல காரியங்களை நாம் இழந்து விடுகின்றோம் .“

“இன்று நாம் கன்னி லக்னம் அல்லது சந்திர லக்னத்தில் நவமி திதியில் கும்பிட்டிருக்க வேண்டும். நாளை காலை 9.00 மணியிலிருந்து 10.30 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் தசமி திதியில் பூஜை செய்ய வேண்டும்...,

அந்த லக்னத்தில் அன்று எந்த சுபகாரியங்கள் செய்தாலும் அந்த வருடம் முழுவதும் சுபத்தைத் தரும் என்று சாஸ்திரம் சொல்கின்றது .

எனவே , இத்தகைய  நேரங்களில் தான் நாம் சரஸ்வதி பூஜை , ஆயுத பூஜை செய்ய வேண்டும்.. சில பேர்  நேரம் இல்லை என்று இதற்கு முதல் நாளிலேயே செய்கின்றவர்களும் உண்டு, 

ஆனால் நம் இஷ்டத்திற்கு கால நேரம் பார்க்காது ஆயுத பூஜை செய்யக் கூடாது.. ஆயுத பூஜை அன்று தான் ஆயுதத்திற்க்குப் பூஜை . எனவே .அதற்கு உகந்த   நேரத்தில் தான் நாம் பூஜை செய்ய வேண்டும் ..,

காலை 9.00 மணியிலிருந்து 10.30 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் ஆயுதங்களை அலம்பி பூஜை செய்யும் போது .. அதற்கு சொல்ல வேண்டிய மந்திரங்களும்., அதை குருவை நாடித்தான் தெரிந்து கொள்ள வேண்டும்...,

போகர் [asks ] ;
 குருதேவா!! விருச்சிக லக்னத்தில் ஏன் ஆயுத பூஜை செய்ய வேண்டும் ?

ஸ்ரீஅகஸ்தியர் :
                 : விருச்சிக லக்னத்திற்கு அதிதேவதை செவ்வாய் பகவான் . செவ்வாய் பகவான் தான் வாகனங்களுக்கு அதிதேவதை ., ஆகவே ,, வாகனங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் விருச்சிக லக்னத்தில் தான் ஆயுத பூஜை செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கின்றது ,,

[ இந்த கால நேரங்கள் சுவாமிகள் சொற்பொழிவு நடந்த அன்று சொல்லிய நேரமாகும்,} இதைப் போலத்தான் ஒவ்வொரு சரஸ்வதி பூஜை , ஆயுத பூஜைக்கும் செய்ய வேண்டும்..., ஒவ்வொன்றிற்கும் கால நேரம் மிகவும் முக்கியம் என்பதை விளக்குவதற்க்காக இவை கொடுக்கப் பட்டுள்ளது...,

தானம் :  தேங்காயை முறையாக புஷ்பம் சுற்றி சுமங்கலிகளின் மடியில் போட வேண்டும் ., தேங்காயை தட்டில் வைத்துக் கொடுக்க கூடாது .,

நவமி திதியில் தேங்காய் தானத்தால் வித்தையில் வெற்றி கிடைக்கும்..,விஜய தசமியில் தேங்காய் தானத்தால் சகல் சௌபாக்கியங்களும் கிடைக்கின்றன ,,

INFOZ TAKEN FROM  SRIAGASTHIYA VIJAYAM .,
 BOOK NAME : THASAMI MAHIMAI .

No comments:

Post a Comment