எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Thursday, December 8, 2016

ஃ எனும் பிரணவம்...

§  அருணாசல தீபஜோதியில் ஃஎழுத்தின் அமிர்த சக்தியும் , எண் பதிமூன்றின் அமிர்த ப்ரவாகமும்  , அமிர்த ஃபல ஸ்தான சக்திகளோடு பொழிவதால் , ஆழ்ந்த  நம்பிக்கையுடன் அருணாசல ஜோதியை தரிசித்து , அமிர்தமயத் திருவருளையும் பெறுவீர்களாக.

§  அமிர்தசக்தி வஸ்துக்களான ஃ எழுத்து , எண் பதின்மூன்று இரண்டையும் தற்காலத்தில் பலரும் ஒதுக்கு வருவது சரியல்ல ..., இனியேனும் இவ்விரண்டின் ஆன்ம சக்தி , ஆத்மப் பரிசுத்தம் , அமிர்த வளத்தை உணர்ந்து , தினமும் ஒரு சில முறையேனும் எழுத்தில் , பேச்சில் ,  பயன்படுத்தி வரவும்...,§  மழைப்பொழிவில் பதின்மூன்று , பதின்மூன்று துளித் தொகுகித் கொத்துக்களாய் வான்மழையை வருண மூர்த்தி , வர்ஷிக்கின்றார் .., இது அதியற்புதமான “த்ரயோதஸ்ச வர்ஷம் எனும் மெய்ஞ்ஞான விஞ்ஞான விளக்கம் ..., இவையாவும் அஷ்டவக்ர ரிஷியின் “மதிமத்த்வமதி எனும் சூக்கும கிரந்தங்களில் பொலிவன..

§  எனைய த்வ்யபிரபந்த விளக்கங்களுக்கு . 2016*டிசம்பர் மாத ஸ்ரீஅகஸ்திய விஜய இதழை காண்க....
§  ========================================================================
§  ஃ எழுத்திற்கு அகர உகர மகரக் கொந்துகை என்ற பெயரும் உண்டு. கொந்துகை என்பது ஃ எழுத்தின் மத்தியில் உள்ள கடுவெளி..., 

அ , உ , ம  ஆகிய மூன்று பிரணவாகார ஒளியொலிப் பீடங்கள் சேர்ந்தது தான் ஓம் எனும் ஓஃங்காரம் அல்லவா ..., பிள்ளையார் சுழியான “உ என்பதும் ,ஓங்கார பீட்த்தைச் சார்ந்த்தே .,

§  ஃஎனும் ஆயுத எழுத்து , பிரணவ எழுத்து என்றும் சிறப்புடைந்துள்ளது.., பிரணவம் எனப்படும் ஓஃங்கார பீடத்தின் மூல வடிவைக் கொண்ட ஃஅட்சரத்திற்கு , ஆயதன எழுத்து என்பதே ஆதிகாலப் பெயர் ., ஆயதனம் என்றால் நீங்காத செல்வம் (தனம்) நிறைந்து , சாசுவதமாய் விருத்தியாகிப் பரிணமிப்பது என்றும் பொருளாகும்...,

§  தற்காலத் தமிழ்ச் சமுதாயம் ஆயுத எழுத்தை மறந்தாலும்  , இதன் ஆயதனசக்தி என்றென்றும் மறைவதில்லை..,!!!

§     பரம்பெருளாம் ஸ்ரீமன் நாராயணப் பெருமாள் முக்கோணப் பீடத்தில் நின்று , இருந்து , கிடந்து , நடந்து அருள்வதாய் ஐதீகம் .., பெரியாழ்வாரின் “பல்லாண்டு பாசுரமும் இதனை விளக்குவதாம் .., ஸ்ரீவித்யை தத்துவத்திலும் முக்கோண்ப பீட்த்திற்குப் பெருஞ்சிறப்பு உண்டு..., இந்த முக்கோணப் பீட சக்தி கொண்ட்து ஃ எழுத்தாகும்..


         ஃஎழுத்தின் மத்தியில் உள்ள சூட்சுமப் பரவெளி...., கடுவெளி .., இதனுள் ஆதிமுதலில் சர்வேஸ்வரன் ,முதன் முதலில் சித்தர்களைத் தோற்றுவித்தார் .  சித்சக்தி வாய்ந்த ஸ்வஸ்திக் சக்கரமும் முக்கல் எனப்படும் ஃஎழுத்தின் ஆக்கப் பூர்வ இயக்கமே..!!!

§  எப்போதும் தவத்தில் திளைக்கும் அட்சரமாய் ஃ எழுத்தினைக் கீழ்க்கண்டவாறு அகஸ்தியர் சிறப்பித்துப் போற்றுகின்றார்...!!!


  கண்டுரைத்த ‘காரணத்தான் எழுத்தாய் அப்பா
 பண்டொரு நாள் ஃ என்னும் முக்கண் தானே
 அண்ணாமலைத் தோன்றல் முக்கல் யாகம்
  கண்ணாயிர சக்திசிவ சீவனுந்தானே
விண்டவரோ கண்டவரோ பிரணவம் என்பார்
  பண் ஆயிரங் கண்ட ஃகைப் பாராய்
  செண்டாலே சேல்முருகன் சேவுகனாகி
  வண் தவத்தே பூச்சியமாய் ஆகுது பாரேன்

§        இப்பிரணவ பிராண சக்திப் பாசுரத்தை தினமும் ஓதுதல் , ஃஅடசரத்தின் பிரணவப் பிராண சக்திகளை வார்க்கும்...மேலும் (பொதிய) மலை போல் விளக்கங்களுக்கு ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழை காண்க..... மார்ச் 2014  

No comments:

Post a Comment