எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, January 4, 2017

தெய்வீக ரகசியங்கள் பூத்துக் குலுங்கும்

 பூவுலகின் ஆதிமுதல் நித்திய தெய்வக் கல்யாண பூமி பிரபஞ்சத்தின் சகல தெய்வ மூர்த்திகளும் ..., கல்யாணப் பெயருடன் , சகல் தெய்வ மூர்த்திகளின் திருக்கல்யாண உற்சவங்களும் .., தினமுமே ஒவ்வொரு தெய்வத் திருமண வைபவமும் கல்யாண பூமி கல்யாண மஹாதேவி ஸ்ரீகல்யாண மீனாட்சி அம்மன் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் அருட்சாரத்துடன் ..,
 ஜாதகத்தில் லக்னத்தின் ஏழாமிடமான திருமணஸ்தானம் ,மாங்கல்ய ஸ்தானம் இதை கொண்டருளும் பூவுலகின் திருமண மேடு .., நித்ய சுமங்ககலித்வ சக்திகளையும் , திருமண நல்வர சக்திகளையும் பூண்ட அரிய இரட்டை பனைமர ஸ்தலவிருட்சத் பட்டீஸ்வரம் ஸ்ரீகோபிநாதப் பெருமாளின் ஆசினாளும்....,


 திருமண சக்தித் தலங்களில் ஆற்றிய கல்யாண சங்கல்ப வழிபாடுகளை எல்லாம் இனிதே கனிய வைத்து திருமணத்தை நிகழ்த்தித் தரும் ..,பூவுலகின் திருமண முற்றம்.. இலந்தை துறை சிவா-விஷ்ணு. பூமியின் கல்யாண தீபச் சுடரோடு...,
 திருக்கடவூர் அமிர்த்வல்லித் தாயார் சன்னிதியில் திருமணதை நிகழ்த்துவதை விடப் பெரும் பாக்யம் வேறெதுவுமில்லை என்று தேவலோகங்களிலே போற்றும் அளவிற்குப் பல தெய்மூர்த்திகளின் , சித்தர்களின் , மஹரிஷிகளின் திருமண வைபவங்களும் நிகழந்த திவ்யாமிர்த தலம்.. அமிர்தவல்லி தாயார் சமேத அமிர்த நாராயணபெருமாளின் அருள் வார்ப்போடு...
 ஆங்கிரஸ மகரிஷி தம் பத்னி சுரூபாவுடன் தெய்வத் திருமணங்கள் , மகரிஷி திருமணங்களுக்கு .., அந்தந்தயுக நியதிப்படி ., அக்னி ஹோம பூஜைகளை ஆற்றிச் சிற்ப்பிக்கும் திருமணவயல் ஸ்ரீசௌந்தர நாயகி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரரின்..ஜோதி பிரவாகத்துடன் கழுமல நிவர்த்தி யாகமாய் ., வினை தீர்க்கும் வெகு வேள்வியாய் விரிந்து .., பரா யக்ஞமாய் பரந்து அருள் சுரக்கும் ஹோமாக்னி பிரம்ம முகூர்த்த ஆரம்பமான முன் அதிகாலை முன்று மணி அளவில் தொடங்கி .
 திருஅண்ணாமலையை நினைத்தாலேயே முக்தி தரும் என அம்பிகையும் , அகஸ்தியபிரானும் உமாமஹேஸ்வர மூர்த்தியின் திருமணக்கோல முன்னிலையிலேயே சர்வேஸ்வரனின் ஒருமித்த திருவாக்காய் யுகம் யுகமாய் உரைத்து வரும் உத்தம தலம்..., நினைத்தாலே முக்தி அளிக்கும் (ருத்ர , விஷ்ணு , பிரம்ம மும்மூர்த்தித் தலமே திருஅண்ணாமலை என .....

 சகல கோடிச் சித்தர்களின் முன்னிலையில் வாஸ்தம்பல மூர்த்தியாய் சபாபதி நாதன் ஓதி உணர்வித்த திருத்தலம் ..., இவ்வாறு அருணாசல முக்தா முக்தி வாக்கியம் முதன் முதலில் வேதவாஸ்து மந்த்ரப் பூர்வமாக ஒலித்த சோண வாஸ்து மண்டபமாய் இன்றும் பொலியும் .., தெய்வ திருமணங்களுக்க்கே திருமாங்கல்யம் வழங்கும் உத்தமத் தலம் திருமங்கலம் ஸ்ரீபூலோக நாயகி சமேத ஸ்ரீபூலோகநாதரின் , மாங்கல்ய ஆசியோடு மாங்கல்ய தாரணம்..!!

will be continued... after marriage .. temples to be visited.

Contents from Sri AGASTHIYA VIJAYAM ., magazine monthly editions

No comments:

Post a Comment