எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Monday, February 27, 2017

சித்தவட மட சித்தர்..,


அனுமனின் மணக்கோல தரிசனம் வடக்கே சில தலங்களில் காணலாம். ஆந்திரப் பிரதேசத்தில், சுவர்ச்சலா அனுமந்தஸ்வாமி திருக்கல்யாணமும் சில இடங்களில் நிகழ்த்தப்படுகிறது. இதற்கு ஒரு கதையும் சொல்லப்படுகிறது. மகரிஷி வியாசரின்தந்தை பராசர மகரிஷி தமது பராசர சம்ஹிதையில் அனுமானின் கதையைக் கூறியுள்ளாராம். அதில், சூரியனின் மகளான சுவர்ச்சலையை தன் மாணவனுக்கு சூரியன் மணம் செய்து வைத்ததாகக் கூறப்பட்டுள்ளதாம். ஜ்யேஷ்ட சுத்த தசமியில் இந்தத் திருமணம் நடந்ததாகக் குறிப்பு உள்ளது என்று கூறுகின்றனர்.ஆஞ்சநேயரும் பிற தெய்வங்களைப் போலவே வடிவங்கள் பல எடுத்தவர். நவ வியாக்ரண பண்டிதன் என்று போற்றப்படும் அனுமனின் வடிவங்களுள் ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்கு உரியவை என்கின்றன புராணங்கள்.ஆஞ்சநேயரின் ஒவ்வொரு வடிவமும் தனித்தனியே வெவ்வேறு காரணங்களுக்காக வழிபடப்பட்டாலும், நவகிரக தோஷங்கள் நீங்கவும், நல்லன யாவும் கிட்டவும் அருள்வது இந்த நவ மாருதி தரிசனம். நிருத்த, பால, பக்த, வீர, யோக, சிவபிரதிஷ்டா, சஞ்சீவி, கல்யாண, பஞ்சமுக என அனுமனின் நவ வடிவங்கள் போற்றப்படுகின்றன.

இதனை, ஸ்ரீபிரசன்ன ஆஞ்சநேயர், ஸ்ரீவீர ஆஞ்சநேயர், ஸ்ரீவிம்சதிபுஜ ஆஞ்சநேயர், ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்ரீஅஷ்டாதசபுஜ ஆஞ்சநேயர், ஸ்ரீசுவர்ச்சலா ஆஞ்சநேயர், ஸ்ரீசதுர்புஜ ஆஞ்சநேயர், ஸ்ரீதுவாத்ரிம்சத்புஜ ஆஞ்சநேயர், ஸ்ரீவானராகார ஆஞ்சநேயர் எனவும் நவ வடிவங்களாகத் துதித்துப் போற்றுகின்றனர்.

அந்த நவ மாருதி வடிவங்களுள் கல்யாண ஆஞ்சநேயரான சுவர்ச்சலா ஆஞ்சநேய வடிவம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கல்யாணம் என்பதற்கு சர்வ மங்களம் என்றும் அர்த்தம் உண்டு. இவரை தரிசிப்பது, மணப்பேறும், மழலை பாக்கியமும் தரும். தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும்..,

======================================================
திருநெல்வேலி அருகேயுள்ள அருகன்குளம் அருள்மிகு ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் கோயில் ..

-------------------------------------------------------------------------------------------------------------------------

நாகை, தரங்கம்பாடியில் உள்ளது திருஞாணிப்பள்ளி. இதை பொன் செய் கிராமம் என்பர். இங்கு நற்றுணை ஈஸ்வரர் கோயில் உள்ளது. இதன் அருகாமையில்,  43வது சிவத்தலமாகப் போற்றப்படும் திருமலை ராஜேஸ்வரி சமேத திருமலை ராஜேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அக்ரஹாரத்தில் உள்ள ஆலயம், மிகப்  பழமையான ஆலயம். சிவன் ‘திருமலை’ என்று அழைக்கப்படுவது அநேகமாக இந்த ஓர் ஆலயத்தில் மட்டும்தான் இருக்கும்.

----------------------------------------------------------------------------------------------

ஜமீன் சமத்தூர் அருள்மிகு சித்தாண்டீஸ்வரர் சோடஷமகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்..,

----------------------------------------------------------------------------------------------------

அறியப்படாத அபூர்வ ஆலயம் ---கருங்குயில்நாதன் பேட்டை
அருள்மிகு சக்திபுரீச்வரசுவாமிதிருகோயில், கருங்குயில்நாதன்பேட்டை, மணக்குடிஅஞ்சல், மயிலாடுதுறைநாகைமாவட்டம்.
இத்திருகோயிலில் வன்னிமரத்தை நவக்ரஹமாக வழிபடுகின்றனர்.இந்திரன் கருங்குயில் ரூபமாக வழிபட்டமையால் இத்தலம் இப்பெயர்பெற்றது.
நவகன்னியரில் வாராஹி வழிபட்டதலம். தற்போது கர்னாபேட்டை என வழங்குகின்றது. திருகோயில் செப்பனிடப்படவேண்டிய நிலையில் உள்ளது.இங்குவழிபடுவதால், குஷ்டரோகம் நீங்கும்..
சகோதர்களுக்குள் உள்ள பிரச்சனைகள் நிவர்த்திஆகும்.
மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் உள்ளது இத்திருகோயில் 
---------------------------------------------------------------------------------------------------ஜமீன் கொரட்டூர் , திருவள்ளூர் மாவட்டம் , பூந்தமல்லி--திருவள்ளூர் பேருந்து பாதை .
இறைவான் திருநாமம் பாலீஸ்வரர் .
அனைவரும் தரிசிக்க வேண்டிய அமைதியான சூழலில் 
அமைந்துள்ள அற்புத திருகோயில் இது .

காரைக்கால் அம்மையாரால் தொழுத ஊர் சிவலிங்கம் 
 ( தொழுதூர் ) இன்று தொழுதாவூர் ஆகிப்போனது... 
கலங்கிய நெஞ்சத்துடன்...

தொழுதாவூர் , தொழுதீஸ்வரர் திருகோயில், திருவாலங்காடு வட்டம்,
திருவள்ளூர் மாவட்டம்.

காரைக்கால் அம்மையார் காதலாகி, கசிந்து கண்ணீர் மல்கி தொழுத ஊர் இன்று , யாரும் தொழாத ஊராகி, கவனிப்பாரின்றி உள்ளது .
-------------------------------------------------------------------------------------------------------------------------
ரெட்டை லிங்கேஸ்வரர் ஆலய திருப்பணி தொடக்கம்.சென்னியமங்கலம்.(வலங்கைமான் அருகில்)
அன்பர்களே, தஞ்சாவூர் மாவட்டம், குடந்தை வட்டம், திப்பிராஜபுரம் 
சென்னியமங்கலம் கிராமம். இது 3000ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலம் தொடங்கி சோழர்கள் காலம் வரை வரலாற்று சிறப்பு மிக்க ஊராக திகழ்ந்தது .

இரண்டாம் புலிகேசி மற்றும் மாலிக்காபூர் படையெடுப்பின் போது இவ்வூரும் இங்கே இருந்த திருகோயில்களும் சிதைக்கப்பட்டன.
மீண்டும் இக்கோயில்கள் சோழர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு,
கிராமம் வேதியர்களுக்கு தானமாக அளிக்கப்பட்டது.
இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க இந்த கிராமத்தில் சமீபத்தில் செடி கொடிகளை அகற்றிய போது கண்டெடுக்கப்பட்ட 2 சிவலிங்க திருமேனிகள் கிராம மக்களால் கூரை வேயப்பட்டு வழிபட பட்டு வந்தது.

சமீபத்தில் இங்குள்ள லிங்கங்களை பார்வையிட்ட ஜோதிடர் ஒருவர் 
இந்த இரு லிங்கங்களையும் ஒருசேர வழிபடுவோர்களுக்கு புத்திர தோஷம் , மாங்கல்ய தோஷம் நிவர்த்தியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அன்பர்களே, 12 லட்சம் மதிப்பீட்டில் ஆலய திருப்பணி வரும் ஆவணி மாதம் 4 ஆம் தேதி(21.08.2015) தொடங்க உள்ளது
ஆலய திருப்பணியில் தாங்களும் பங்கு பெற்று , திருப்பணியை பூர்த்தி செய்து விரைவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு , ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஸ்ரீ தியாகராஜர் அருளை பெற அன்புடன் வேண்டுகின்றோம் .
தொடர்புக்கு G.SANKAR பொருளாளர் , செல் :94430 86587


அன்பர்களே, வர்ணபூச்சு வேலைகளுக்கு உபயதாரர்கள் தேவைபடுகிறார்கள்....
ஆலங்குடிக்கு மிக அருகில் உள்ள, (சுமார் அரை கிலோமீட்டர்) , அதன் உப கோயிலான, மிகசிறந்த, திருமண தடைக்கு பரிகார தலம் திருவோண மங்கலம் எனப்படும் திருமண மங்கலம் கிராமம்.
இங்கே கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார் விசாலேஸ்வரர்.
மயானத்திற்கு நேரெதிரே அமைந்த தலம்.

தன்னை அண்டியவர்களுக்கு மிக சிறந்த இல்வாழ்க்கை துணையை
அருளும் பொறுப்பை ஏற்கிறார் இவர். ஆலங்குடி கோயிலின் ப்ரம்மோத்ஸவத்தின் போது நடைபெறும் திருமண விழா இத்தலத்தில்
தான் நடைபெறுகிறது.

இத்தனை சிறப்புகள் இருந்தும் , ஆலங்குடி கோயிலின் உப கோயிலாக 
அதன் வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடைய தலமாக இருந்தும் 
இத்திருகோயில் கண்டுகொள்ளப்படாமல் இன்று வரை உள்ளது.

இத்தனைக்கும் ஆலங்குடி இன்று அதிக வருமானத்தை அரசுக்கு ஈட்டி தரும் திருகோயிலாக உள்ளது. விழாக்காலங்களிலும், குருபெயர்ச்சி தினங்களிலும் 500, 1000 என தரிசன கட்டணங்களும் வசூலிக்கப்படுகின்றது. ஆனால் அதன் உபகோயிலோ வருமானத்திற்கே வழியின்றி, சோபையிழந்து காணப்படுவது வேதனையிலும் வேதனை.
தற்போது நந்தி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் வர்ணபூச்சு வேலைகள் நிறைவுற்றால் தான் திருகோயில் கும்பாபிஷேகம் காண முடியும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
நோய் தீர்க்கும் நவபாஷாண பெருமாள்!!!


சிவகாசிக்கு அருகே உள்ள காரிசேரி லட்சுமி நாராயணர் கோயிலில் நவபாஷாணத்தில் அமைந்த பெருமாளை தரிசிக்கலாம். மார்கழி மாதத்தில், திருவோண நட்சத்திரத்துக்கு முன்பு, 28 நாட்கள் விரதம் இருந்து, பின்பு லட்சுமி நாராயணரை வணங்க, கோரிக்கைகள் நிறைவேறும் என்பதும், பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை சாப்பிட்டால் நோய்கள் நீங்குவதாகவும் நம்பிக்கை.

சதுரகிரி மலையிலுள்ள மகாலிங்க சுவாமி கோயிலில் வசித்த சித்தர்கள் சிலர் நவபாஷாணத்தால் ஸ்ரீ லட்சுமி நாராயணர் சிலை செய்து வழிபட்டு வந்தனராம். மலையில் வெள்ளம் ஏற்பட்ட samayathil, இந்த சிலை காரிசேரியில் கரை ஒதுங்கியது.
சிலையை எடுத்த மக்கள், இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.
அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில்
காரிசேரி- 626 119 விருதுநகர் மாவட்டம்.
Contact.No : 98423 64059


 1(பராமரிப்பு இல்லாதவை)
முதல் சிவாலயம் பட்டீச்சரம்(கும்பகோணம்) அருகிலுள்ள திருமேற்றளி எனப்படும் அருள்மிகு பிரம்மநந்தீச்வரர் ஆலயம்.பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
இந்த ஆலயம் பிரம்மனால் வழிபாடு செய்யப்பட்டதால் பிரம்மநந்தீச்வரர் என அழைக்கப்படுகிறார்
பெருமான் பெரிய திருமேனி,சதுர ஆவுடையார் பெரியது
ஆலயம் சுற்றுசுவர்,பாதுகாப்பு இல்லாமையால் நந்தியம்பெருமான் மற்றும் பிற திருவுருவ மூர்த்தங்கள் தஞ்சை அருங்காட்சியகத்தில் உள்ளது.
சோதிமலை திருவடில்குடி சுவாமி,சைவ அன்பர்கள் முயற்சியால் பிரதோசம் மகாசிவராத்திரி,சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடத்தப்பெறுகிறது
வழி பட்டீச்சரத்திலிருந்து 2km தொலைவில் உள்ளது.
வாய்ப்பு உள்ள அன்பர்கள் சென்று வழிபடலாம்.தொடர்பு 📞 0435 2481372, 9791900205. சிவாயநம.

கேரளபுரத்தில் அரசமரத்தடியில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண காலத்தில் வெள்ளை நிறமாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலான தட்சிணாய காலத்தில் கறுப்பு நிறமாகவும் மாறி பக்தர்களுக்கு அருள் புரிகிறார். மேற்கூரை இல்லாமல் அரசமரத்தடியில் அமர்ந்து இருக்கும் இந்தப் பிள்ளையாரை தரிசிக்க வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் தினமும் வந்து  தரிசித்து பேறு பெறுகிறார்கள். முதல் ஆறு மாதம் வெள்ளை நிறமாக இருக்கும் விநாயகர் திருமேனியில் ஆடி மாத ஆரம்பத்தில் கறுப்புப் புள்ளிகள் ஏற்படுகின்றன. பிறகு, தொடர்ந்து சிறிது சிறிதாக கறுப்பு நிறம் சூடுகிறார். இந்த அதிசய விநாயகரை ஆய்வு செய்த புவியியல் துறை நிபுணர்கள், திருமேனி உருவாக்கப்பட்ட கல் இந்திர காந்தம் என்னும் அபூர்வ வகையைச் சார்ந்தது என்று தெரிவித்து இருக்கிறார்கள்.


இருப்பிடம் :
இந்த விநாயகர் அருள்புரியும் கேரளபுரம், நாகர் கோயிலிருந்து பதினெட்டு கி.மீ. தூரத்தில் உள்ள தக்கலை என்னும் தலத்தில் அமைந்துள்ள மகாதேவர் ஆலயத்திற்கு அருகில் உள்ளது. 
S Ramachandrapuram ( Patti a Kal, Bus-Stop). 

Meenakshi Amman Kovil, S Ramachandrapuram, Saduragirimalaihttp://temple-stories.blogspot.in


--


. This is a unique Lord Ganesha statue. This temple is located in Kurudumale in Mulabagalu taluk of Kolar district in Karnataka. 

-----------------------------------------------------------------------------------------------------------------------------
உத்தரமேரூர்  ஸ்ரீ கேதாரீஸ்வரர் கோயிலில் 

செல்லும் வழி: தியாகராயநகர்-
தகவல்கள்:
ஊர்:தியாகராயநகர்#+மு 
இறைவன்:கேதாரீஸ்வரர் 
இறைவி:பார்வதி 
பிறசன்னதிகள்: நடராஜர், வெங்கடாசலபதி-மகாலட்சுமிராமர்-சீதா-ரஸ்வதி, ஆஞ்சநேயர், முருகன்-வள்ளி, தெய்வானை. சித்தி-புத்திவிநாயகர் 
தி.நே-07-20
சிறப்புகள்:

அருள்மிகு கேதாரீசுவரர் திருக்கோயில்
காவல்சேரி, சென்னை - 600 072.
கோலப்பன்சேரியிலிருந்து திருமழிசை செல்லும் வழியில் பத்செட்டியார் வயல்வெளியில் அடர்ந்த மரங்களின் நடுவே ஆவுடையாரின்றி மேற்கூரையின்றி வழிபாடின்றி அருள்பாலிக்கிறார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில், நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, ர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்

--------------------------------------------------------------------------------------------------------------------------


வானவ கோடீஸ்வரர் , வலைய மாதேவி , சிதம்பரம் Chidambaram to Vridhachalam via sethiathopucross road- 15km from chidambaram -valayamaadevi


காளி, குத்தாலம் வட்டத்திலுள்ள ஒரு திருத்தலத்தின் பெயர் இது.
அபிராமி கோவில் பத்து என்றும் அழைகின்றனர்.மூலவர் திரு காமேஸ்வரர். காளி இங்கு மிகவும் வரப்ரசாதி, ஊர் மக்களின் காவல் தெய்வமாகவும் விளங்குகிறாள்.

மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதி உண்டு . குத்தாலம் மார்க்கமாகவும் செல்லலாம்.
திருகோயில் குடமுழுக்கு செய்யப்பட்டு மிகவும் நல்ல முறையில் 
பராமரிக்கப்படுகிறது

அருள்மிகு முத்துக்கருப்பண்ணசுவாமி திருக்கோயில், உத்தமபாளையம் - 625 533. தேனி மாவட்டம். 
போன்: +91- 99409 94548.


அகத்தியப் பெருமான் தங்கி வழிபட்ட கோவில்கள்!!!
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில் -காஞ்சிபுரம்
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில் -திருவொற்றியூர், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-தண்டையார்பேட்டை, சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-நல்லூர் கிராமம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-சோழி பாளையம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-கொளத்தூர், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-நுங்கம்பாக்கம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர்,திருவேள்வீசுவரர் திருக்கோவில்-வளசரவாக்கம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-வேலப்பன் சாவடி, சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-சித்தாலபாக்கம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-வேங்கடமங்கலம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-வில்லிவாக்கம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-மிட்டனமல்லி,ஆவடி, சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-பொழிச்சலுர், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-பூந்தன்டலம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-கொளப்பாக்கம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-பவுஞ்சூர், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-அணைக் கட்டு சேரி, சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-குரோம்பேட்டை, சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-பழைய பெருங்களத்தூர், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-நெடுங்குன்றம், சென்னை
அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-சோனலூர்,மாம்பாக்கம், சென்னை.
அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோவில்-திருவான்மியூர், சென்னை


------------------------------------------------------------------------------------------------
பேரளம் செல்லும் வழியில் ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் மிகப்பழமையானது. இந்த திருத்தலத்தில் பல மகிமைகள் கொண்டதாக அமைந்திருக்கிறது.
இருதயக்கோளாறு உடையவர்கள் இந்த ஆலயம் சென்று வந்தால் பரிபூரண குணம் கிடைக்கிறது.
குழந்தை பாக்கியம் இல்லாதோர் இங்கு உள்ள மரத்தின் காய்களை மஞ்சல் துணியில் முடிந்து கட்டி பிரார்த்தனை செய்தால் பலிதம் ஆகாறது.
பத்திரபதிவில் பிரச்சினை உள்ளவர்கள் இங்குள்ள அகதீஸ்வர்ரை வழிபட கை மேல் பலன் உண்டு.
வெளிநாடு செல்வோர்கள் இங்கு வந்து சென்று நல்ல பலனை அடைகின்றனர்.
உலகத்திலேயே இந்த ஆலயத்தில் தான் இராசி மண்டலத்தின் மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி ,ஒருபுறம் அகத்தியரும், மறுபுறம் கோரக்கரும் இருக்க தென்முகமாக அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.
ஜோதிட பெருமக்கள் , வைத்தியர்கள் இங்கு சென்று வழிபட சாஸ்திர புலமை அடையலாம்.
அனைவரும் இந்த ஆலயம் சென்று வழிபட்டு பலனும் பயனும் அடைய வாழ்த்துக்கள்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
இந்த கோவில் ஆச்சாரிய பெருமக்கள் முத்துக்குமரன், ராஜா பட்டர்.
செல். 9443672182
பூதக்கல் ஸ்ரீ சர்ப சித்தர் பீடம் !!!
கண்ணை மூடி உட்கார்ந்தால் ஒளி அதிர்வாக காட்சி அளிக்கும் 1200 வருட சக்தி வாய்ந்த பழமையான சித்தர், (ஜீவ சமாதி-பூதக்கல் ஸ்ரீ சர்ப சித்தர் பீடம்
1200 வருடத்திற்கும் பழமையான ஜீவ சமாதி இருக்கும் இடம் அசிரிரி மூலம் சித்தர் அடிகளார் ஜி.டி. ரவிச்சந்திரன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, கடந்த 16 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் போன ஜென்மத்தில், சித்தர் தொடர்பு உள்ளவர்கள் மட்டுமே தேடி சென்று பார்க்க கூடிய ஜீவா சமாதி என்பதால் மிகவும் சக்தி வாய்ந்ததாக காட்சி அளிக்கிறது. மற்ற ஜீவா சமாதிகள் போல் அல்லாமல் பூதக்கல் போல் காட்சி அளிக்கும் இந்த சமாதியை சுற்றி பாம்புகள் வருமாம், மேலும் இவை மக்களை இதுவரை எதுவும் செய்ததில்லை.

சூழ்ட்சும ரகசியம்:
இந்த சமாதியின் மேல் உள்ள பூதக்கல் பஞ்சபூத சக்திகளை கட்டுபடுத்தும் ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ளதால் சகல வித தோஷங்களை போக்கும் சக்தி வாய்ந்ததாக காட்சி அளிக்கிறது. இன்னுமொரு அற்புதம் என்னவென்றால் சமாதி அருகே கண்ணை மூடி தவம் செய்தால், ஒளி உருவமாக சித்தர் காட்சி அளித்து வருகிறார். இந்த சித்தர் காளஹஸ்தியில் இருந்து வந்தாக கண்டறியப்பட்டுள்ளது. 1200 வருடங்களுக்கு முன் உருவான சமாதி என்பதால் பல இயற்கை சீற்றங்களை தாண்டி இன்றும் நிலையாக உள்ளது, முன்பொரு காலத்தில் இயற்கை சீற்றத்தினால் மழையும், புயலும் இந்தப் பகுதி முழுவதையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது. ஆனால் சர்ப சித்தர் சமாதியாகியிருந்த இந்த இடம் மட்டும் அமைதியாக இருந்துள்ளது. 15 நாட்கள் ஒரு புறம் சாய்ந்தும் 15 நாட்கள் ஒரு புறம் சாய்ந்தவாறும் காட்சி அளிப்பது அற்புதத்தின் எல்லை என்றே கூறலாம், பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த பதிவை படிக்கவும், இந்த சமாதிக்கு செல்ல முடியும் என்பது சித்தர் வாக்கு. பஞ்ச பூதங்களை கட்டுபடுத்தும் கல் என்பதால் எந்த சேதமும் இன்றி இன்றும் நிலையாக உள்ளது. மேலும் இந்த கோவிலில் அம்மன் அருகே உள்ள சிலை, அசிரிரி மூலம் கனவு வந்ததன் மூலம் ஏரியில் இருந்து எடுக்கப்பட்டது, இந்த கல்வெட்டிலும், அற்புத விஷயங்கள் அடங்கி இருப்பது ஆச்சர்யமே! நேரில் சென்று பார்த்தால் அற்புதத்தை உணர முடியும். பிராதான அல்லது சமாதியாக காட்சி அளிக்கும் கல்வெட்டில், மிகவும் பெரியதாக ஒரு லிங்க வடிவில் ஒரு கல் உள்ளது இதற்கு அடியில் தான் ஸ்ரீ சர்ப சித்தர் ஜீவ சமாதி அடைந்து உள்ளார் அந்த லிங்கத்தின் மீது சந்திரன் /சூரியன் உருவம் பதிக்க பட்டு உள்ளது பிரணவ மந்திரம் பதிக்க பட்டு உள்ளது பஞ்ச பூதங்களை குறிக்கும் விதமாக ஐந்து தலை நாகம் போன்ற அமைப்பு அந்த லிங்கத்தின் மீது உள்ளது நியாயமாக எதை வேண்டியதை தரும் சர்ப சித்தரை காண கீழ் கொண்ட முகவரிக்கு செல்லவும். சமாதிக்கு செல்லும் பொது முகவரியை விலாவரியாக எழுதி கொண்டு எடுத்து செல்லுங்கள்.
ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம் 
கோவிந்தராஜ் நகர், மாங்காடு,
சென்னை-122. 
கைப்பேசி எண்:9789826263.

மாங்காடு தாண்டி செல்லும் போது பட்டு மாங்காடு ரோடு இடது புறமாக வரும், உள்ளே சென்று வலப்புறத்தில் வாழை தோப்பை ஒட்டிய சிமெண்ட் ரோடு(கோவிந்தராஜ நகர் ) உள்ளே செல்லவும், அங்கு இருப்பவர்களிடம் ஜீவ சமாதி என கேட்டால் வழி சொல்லுவார்கள்


----------------------------------------------------------------------------------------------------
  • சித்தவட மடத்தில் உள்ள சிவன் கோயில்.
பண்ருட்டி, மார்ச் 15: அலைபாயும் மனதை இறைவன்பால் செலுத்தி சிந்தனையை ஒருநிலைப்படுத்துபவர்கள் சித்தர்கள் என்று பெயர் பெற்றனர். அவர்கள் வாழ்ந்து மறைந்த இடங்களே இன்று சித்தர் பீடங்களாக உலகில் போற்றப்படுகின்றன. இவற்றில் ஒருசில சித்தர் பீடங்கள் புகழ்பெற்றும், பல சித்தர் பீடங்கள் சுவடுகளே தெரியாமல் புகழ் மறைந்து போய்விட்டன. இவற்றில் சித்தவட மடத்தை தன் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார் கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன்.
 இந்த சித்தவட மட சித்தர் பீடத்தை பற்றி கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறியதாவது: தன்னலமின்றி பொதுநலத்துக்காகச் சிந்திப்பவர்கள் உலகில் உன்னதமான பிறவிகளாகப் போற்றப்படுகின்றனர்.
 வள்ளல் ராமலிங்க சுவாமிகள் குறிப்பிடுவதைப் போன்று இவர்கள் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவர்கள். ஆன்மிக வாழ்வியழலை ஏற்றுக்கொண்டு சித்தம் என்கிற மனத்தை அடக்கி ஆள்பவர்கள் சித்தர்கள் என்ற பேற்றினைப் பெற்றார்கள்.
 சித்தர்கள் பெரிதும் தனிமையை விரும்புபவர்கள். இவர்கள் ஒன்றுகூடி வாழ்ந்ததாக வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் கூடி இருந்து மக்களுக்கு நன்மைகள் புரிந்தனர். எனவே பிற்கால வரலாற்றில் இந்த இடம் சித்தவட மடம் என பெயர் பெற்றது.
 வழக்கு சொல்லில் கோட்லாம்பாக்கம் என்று கூறப்படும் இந்தப்பகுதிக்குள் மிகப்பெரிய அளவில் இருந்த சித்தவட மடம் மறைந்து இப்போது சிவன் கோயிலாகக் காட்சி அளிக்கிறது. இவ்வூர் திருவதிகை கல்வெட்டில் கொட்டிளம்பாக்கம் என்று கூறப்பட்டுள்ளது. இறைவன் சிதம்பரேசுவரர், அம்மை சிவகாமிசுந்தரி எனும் பெயரால் வணங்கப் பெறுகின்றனர்.
 தமிழகத்துக் கோயில்கள் அனைத்தும் கிழக்கு திசை நோக்கியே இருக்கும். மேற்கு நோக்கிய கோயில்களை குறைந்த அளவிலேயே காணமுடியும். இவற்றில் கோயிலும் சந்நிதியும் மேற்கு நோக்கி அமைந்துள்ள கோயில் இதுவாகும். காரணம் இது சித்தர்களின் ஜீவசமாதிகளாகும்.
 கி.பி.8-ம் நூற்றாண்டில் இந்த இடம் சித்தர்கள் மடமாக இருந்த காலத்தில் திருவதிகை வீரட்டானேசுவரரைத் தரிசிக்க வந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திடீரென ஒரு சிந்தனை உதித்தது. திருவதிகையில் திருநாவுக்கரசர் தனது திருக்கரங்களால் உழவாரத் திருப்பணி செய்த வீரட்டானத் திருத்தலத்தை தனது கால்களால் மிதிக்கக்கூடாது என்கிற பக்தியின் மேலீட்டால் வீரட்டானத்தைத் தூர இருந்தே தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோது சுந்தரர் சிவபெருமானை தரிசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடமே சித்தவட மடமாகும்.
 சுந்தரர் இம்மடத்தில் தங்கியிருந்த சித்தர்களோடு ஒரு பக்தராக வந்து இரவில் தங்கியிருந்தபோது சிவபெருமான், தனது திருத்தொண்டரான திருநாவுக்கரசருக்கு மதிப்பளித்த சுந்தரருக்கு அருள்புரியத் திருவுளம் கொண்டார். முதுமை நிறைந்த கிழவராக சிவபெருமான் வடிவெடுத்து, அங்கு உறங்கிக்கொண்டிருந்த சுந்தரர் தலைமீது தமது கால்கள் படுமாறு படுத்துக்கொண்டார். சுந்தரர் அந்த கிழவர் உறங்கும் இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் சென்று படுத்தபோது, அங்கும் சென்று தலைமீது கால்படும்படி செய்தார்.
 சுந்தரர் எழுந்து அய்யா பெரியவரே ஏன் இப்படி மீண்டும் மீண்டும் செய்கிறீர் என்று கேட்க, நீ வேண்டும் வேண்டும் என்பதால்தான் என்றார் கிழவர். தாங்கள் யார் எந்த ஊர் என்ற சுந்தரரிடம், நான் ஒரு சித்தன் - நீ எனது பித்தன் எனக் கூறி சிவபெருமான் மறைந்ததாக வரலாறு. அங்கு சிவபெருமானைப் போற்றி தம்மானை அறியாத சாதியா ருளரே எனத் தொடங்கும் பதிகம் பாடினார். இப்பதிகம் தேவாரத் திருமுறை வரிசையில் 7-ம் திருமுறையாக இடம்பெற்றுள்ளது. இப்பதிகம் திருவதிகை வீரட்டானத்தைப் பற்றியதாக இருந்தாலும் பாடல் பிறந்த இடம் சித்தவட மடமாகும்.
 இம்மடத்தில் சுந்தரர் தங்கியிருந்தபோது அவரை உபசரித்து வழியனுப்பி வைத்த சிதம்பரச் சடையனார் என்ற சித்தர் சுந்தரரின் அன்பை பெற்றவர். அவர் (சிதம்பரச் சடையனார்) சித்தியான இடத்தில் இன்று கோயில் கருவறையில் சிவலிங்கமாக (சிதம்பரேசுவரர்) காட்சியளிக்கிறது.
 வட திசையில் சிதம்பரச் சடையனாரின் சீடரான சித்தாண்டி சுவாமிகள் சித்தியடைந்த இடம் கிழக்கு நோக்கி (தனி சந்நிதியாக) கோயில் கொண்டுள்ளது. கிழக்கு திசையில் சித்தி பெற்று கோயில் கொண்டுள்ள மற்றொரு சித்தரின் பெயர் அறியக் கிடைக்கவில்லை.
 தென் திசையில் தட்சிணாமூர்த்தி சந்நிதியின் அடியில் உள்ள கல்வெட்டு ஒன்றைப் படித்தபோது ஓர் உண்மை கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டில் திருவதிகை ராச்சியம் நாட்டுக் கணக்கு சந்தியப்பன் சர்வ சித்தி என்று பொறிக்கப்பட்டிருப்பதால் கி.பி.15-ம் நூற்றாண்டில் திருவதிகை என்ற ஊர் ராச்சியம் என்ற மதிப்பை பெற்றிருந்ததும், இந்த ராச்சியத்தின் கணக்காளராக இருந்த சந்தியப்பன் என்ற பெயர் கொண்ட சிவயோகியார் இந்த இடத்தில் சித்தி அடைந்தார் என்பதும் கண்டறியப்பட்டது.
 இதுபோன்று பற்பல காலங்களில் இம்மடத்தில் வாழ்ந்து மறைந்த சித்தர்களின் வரலாற்றுப் புகழை அறிந்த சோழ மன்னர்கள் செங்கல் மற்றும் சுண்ணாம்புச் சுதையால் கி.பி. 9-ம் நூற்றாண்டில் இங்கு கோயில் எழுப்பினர். அதன் பிறகு கி.பி.13-ம் நூற்றாண்டில் அரசுபுரிந்த சேந்தமங்கல அரசன் கோப்பெருஞ்சிங்கக் காடவராயன் தனது 24-ம் ஆட்சி ஆண்டில் (1267) கருவறைப் பகுதியை கருங்கற்களால் மாற்றி அமைத்ததாக இக்கோயில் கல்வெட்டு கூறுகிறது.
 கோயில் வாயிலின் மேற்புறத்தில் கி.பி.16-ம் நூற்றாண்டின் எழுத்தமைதியில் காணப்படும் கல்வெட்டில் சிவகாமி அம்மையின் சந்நிதிக்கு தினந்தோறும் பூமாலை அளிப்பதற்கான தானக் கல்வெட்டு காணப்படுகிறது. இக்கோயில் கருவறையைச் சுற்றிலும் உள்ள விநாயகர், பிரம்மா, தட்சிணாமூர்த்தி, பைரவர், சூரியன் ஆகியோரது சிற்பங்கள் சோழர் காலம் மற்றும் கி.பி.13-ம் நூற்றாண்டின் கலைத்திறனை எடுத்துக் காட்டுகின்றன.
 சுந்தரருக்கு சிவபெருமான் தம் திருவடியைச் சூட்டியதும் (திருவடி தீட்சை), ஞானசித்தர்களும், மோன முனிவர்களும் இறவாப் புகழுடன் வாழும் சித்தவட மடத்தில் கோயில் கொண்டுள்ள சிவகாமி உடனுறை சிதம்பரேசுவரர் கோயில் பற்பல காலக்கட்டங்களில் திருப்பணிகளைப் பெற்றிருந்தாலும் மீண்டும் ஒரு திருப்பணியையும், குடமுழுக்கையும் எதிர்நோக்கியுள்ளது. இத்தலம் பண்ருட்டிக்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் புதுப்பேட்டைக்கு அருகில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment