எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, February 14, 2017

அன்னசார துதிகள்

அன்னம் பஹுகுர்வீதம் , உலகெலாம் அன்னமயம் , உடலெல்லாம் அன்னமயம் , யாங்கனும் அன்னமயம் அன்னம் பஹுகுருவேதம்  

 என்று ஓதி வந்தால் , மனத்திற்க்குத் தெளிவு கிட்டும்..,  உணவாகிய அன்னம் இல்லை என்றால் உடலில் உயிர் தங்காது அல்லவா .., அன்ன சாரமே குருவருள் .., இது இல்லை என்றால் உடலில் ஆத்மா (தாங்காது) தங்காது...,

 அன்னவாலி சித்தரே போற்றி ., அன்னவிநோத ஈசா போற்றி...!!!

Ø  உலகில் மரம் போன்று மிகவும் அதிகமாக மனிதனால் பயன்படுத்தப் பெறுவது இரும்பு ஆகும். சாப்பிடும் தட்டும்நீரருந்தும் டம்ளரும்  எவர்சில்வரால்இரும்பால் அமைகிறது. இவையெல்லாம் சனீஸ்வர சக்திப் பொருட்களாகும்.
 
எனவே, 
இரும்புத் தம்ளரையோதட்டையோநன்முறையில் அவற்றில் உள்ள துரு தோஷங்களை அகற்றியே பயன்படுத்த வேண்டும். துருப் பிடிக்கும் குணத்தால்தான் பூஜைகளில் எவர்சில்வர் சாதனங்களைப் பயன்படுத்துவது கிடையாது. சில வகை வண்ணங்களைப் பயன்படுத்தி இத்தகையத் தோஷத் தன்மைகளைத் தணிக்கலாம். 

ஓம் ஸ்ரீசனீஸ்வர உலோகலோக பத்மாஸ்ரயே நம 
இரும்புத் துறைப் பாத ஈச சனீஸ்வரா போற்றி 

                                 --  என்று எட்டு முறை ஓதிய பின்னரே எவர்சில்வர் 
                               சாதனங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.


உணவு உண்ணும் முன் :- ஓத வேண்டிய துதி.

அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர ப்ராணவல்லபே
ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிட்சாந் தேஹீச பார்வதி
மாதாச பார்வதிதேவி , பிதா தேவோ மஹேஸ்வர
பாந்தவாம் சிவபக்தாஸ்ச ஸ்வேதேசோ புவனத்ரயம்
பிட்சாந்தேஹி பிட்சாந்தேஹி பிட்சாந்தேஹி , 
க்ருபா வலம்பகைரி மாதா அன்னபூர்னணேஸ்வரீ

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் , பொன்னம் பாலிக்கு மேலுமீப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறு கண்டின்புற, இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே!சமைக்கும் போது ஓத வேண்டிய துதிகள் :-

சிவகனிச் சாறும் செம்பாரக் கனிச் சாறும்
பவகரண யோகமும் பரிந்து கூடியே
உவப்புடன் ஒளிர்கின்ற உமையருள் ஜோதியே
பவதாரிணி சாகம்பரி பரிபாலயம் ஆகுகவே !

உலகெலாம் ஒங்கிடும் உமையவள் உன்னருள்
நிலமெலாம் நிரவிடும் நின்பயிர் பொங்கிடும்
பவமுகக் கண்ணுடை பரமனின் பாகமே
கலம்பக ஜோதியே ! காத்தருள் கண்ணியே”


“ஜகத் பிரம்ம விவர்த்தைக காரணே பரமேஸ்வரி நம :
சாகம்பரி சிவே நமஸ்தே சதலோசனே “

- All infoz taken from Sri Agasthiya Vijayam Magazine 

No comments:

Post a Comment