எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, February 14, 2017

படித்ததில் பிடித்ததுபஞ்சமூர்த்திதலங்கள்
: பொதிகை மலை அடிவாரத்தில் பாபநாசநாதர் கோயில், திரிசூல   மலையில் கோரக்கநாதர் கோயில், ராமநதி அணை அருகில் வில்வவனநாதர் கோயில்,  திருவாலீஸ்வரம், கடனா நதி, ராமநதி, தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் திருப்புடை மருதூர் நாறும்பூநாதர் கோயில் ஆகிய பஞ்ச மூர்த்தி ஸ்தலங்கள் உள்ளன.

====================================================

தேனி மாவட்டத்தில சின்னமனூர் என்ற கிராமத்தில் சுயம்புவாக இருக்கும் சிவலிங்கம் அருள்மிகு புலாந்தீஸ்வரர் , அந்த லிங்கம் பார்வையாளரின் உயர்த்துக்குத்தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொள்கிறார் அந்த லிங்கத்தைத் தழுவிக்கொண்ட ராஜசிங்க பாண்டியனின் மார்பு கவசத்தின் அடையாளம் அந்த லிங்கத்தின் மேல் தெரிகிறது தவிர இங்கிருக்கும் அம்பாள் சிவகாமிக்கு முகத்தில் எப்போதும் வியர்க்குமாம் .
------------------------------------------------------------------------------------------------------
காஞ்சியம்பதியில் தப்பித் தவறித் தடுக்கி விழுந்தால் கூட , ஒர் ஆலயத்தின் வாசலில் தான் விழ வேண்டும் என்பார்கள் . அந்த அளவுக்குப் புராணப் பெருமையும் சரித்திரப் புகழும் கொண்ட காஞ்சி மாநகரத்தில் அருள் பாலித்து வருகின்ற ஆலயங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்கா.!!!190 சிவாலயங்கள் : Full Book in Pdf :http://www.mediafire.com/view/?yeuus1lwsb3ksc1
====================================================
புஜங்கலலிதம், காலசம்ஹார மூர்த்தி, கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுரசம்ஹார மூர்த்தி, பைரவர், உத்திராபதியார், ஊர்த்வ தாண்டவர்,  ஆனந்த தாண்டவர்  ஆகிய நவ தாண்டவ சிற்பங்களை தஞ்சையிலுள்ள திருச்செங்காட்டங்குடியில் தரிசிக்கலாம்.
திருநெல்வேலி, சன்யாசி கிராமத்தில் உள்ள கல்யாண சீனிவாசர் ஆலய கருவறை விமானமும் திருப்பதியைப் போலவே ஆனந்த விமானம் என்று அழைக்கப்படுகிறது.திருநெல்வேலி, மேலத்திருவேங்கடநாதபுரத்தில் திருவேங்கடமுடையான் கருவறையில் 12 ஆழ்வார்களும் 12 படிகளாக உள்ளார்கள்.செங்கல்பட்டு, பழைய சீவரத்தில், வெங்கடேசர் சங்குசக்கரத்துடன் திருமாலாகவும் ஜடாமுடியும் நெற்றிக்கண்ணும் கொண்டு ஈசனாகவும், கையிலும் திருவடிகளிலும் தாமரை மலர் கொண்டு நான்முகனாகவும் மும்மூர்த்திகளின் சங்கமமாக விளங்குகிறார்.


  *   காஞ்சிபுரத்தில் திருமால் மீனாக மாறி சிவலிங்கத்தை பூஜை செய்தார். ஆகவே இந்த  ஈசன், மச்சேஸ்வரர் எனும் பெயரில் அருள்கிறார்.


*   கும்பகோணத்தை அடுத்த தேவராயன்பட்டினம்,முன்னாளில் சேலூர் என   வழங்கப்பட்டது. சேல் எனில் மீன் என்று பொருள். இத்தல ஈசனை மச்சாவதார மூர்த்தி வழிபட்டதால்   இங்கு அருளும் மூர்த்தி மச்சேஸ்வரர் என்று வணங்கப்படுகிறார்.

*   மந்தார மலையை ஆமை வடிவில் தாங்க சக்தி பெற திருக்கச்சூரில் எழுந்தருளியுள்ள ஈசனை ஆமைமடு எனும் தீர்த்தத்தை உருவாக்கி திருமால் துதித்ததை, இத்தல விநாயகர் சந்நதி மண்டப விதானத்தில் புடைப்புச் சிற்பமாக தரிசிக்கலாம்.

*   காஞ்சிபுரத்தில் அமுதம் கிடைத்த பின் ஆமை வடிவோடு திருமால் பூஜை செய்த கச்சபேஸ்வரர் திருக்கோயில் புகழ் பெற்றது.*   திருப்போரூர் சாலையில் உள்ள செங்கண்மால் கிராமத்தில் அருளும் செங்கண்மாலீஸ்வரரை ஆதிவராஹமூர்த்தி வழிபட்டு பேறு பெற்ற நிகழ்வை கருவறை தெற்கு சுவரில்  புடைப்புச் சிற்பமாக காணலாம். இத்தல தீர்த்தம்  சுவேதவராஹ தீர்த்தம் என்றே   புகழ்பெற்றது.


*   காஞ்சிபுரத்தின் அருகே உள்ள தாமல் கிராமத்தில் வராஹமூர்த்தி வழிபட்ட வராகேசுவரர் திருவருள் புரிகிறார். அங்கேயே நரசிம்மர் வழிபட்ட ஈசன் நரசிம்மேஸ்வரர் எனும் பெயரில் அருள்கிறார்.   புதுச்சேரிக்கு அருகிலுள்ள வில்லியனூரில் உள்ள காமீசுவரரை நரசிம்மர் வழிபட்டு வரம் பெற்று அருகில் உள்ள சிங்கிரியில் தனிக்கோயில் கொண்டருள்கிறார்

*   கடலூருக்கு அருகில் உள்ள திருமாணிக்குழி திருத்தலம், வாமன வடிவில் திருமால் ஈசனை பூஜித்து நற்கதி பெற்ற தலமாகும். இத்தல ஈசன் வாமனபுரீஸ்வரர் என்று வணங்கப்படுகிறார்.   வாமனாவதாரத்தில் அசுரகுருவான சுக்கிரன் வண்டாக மாறியபோது அவர்  கண்ணைக் குத்திய பாவம் தீர, திருமாலால் பூஜிக்கப்பட்ட ஈசன் திருமயிலையில் வெள்ளீஸ்வரராக அருள்கிறார்.

*   காஞ்சிபுரத்திற்கு அருகே வேகாமங்கலத்தில் பரசுராமர் பூஜித்த ஈசன் பரசுராமேஸ்வரர் எனப்படுகிறார்.*   கும்பகோணத்திற்கு அருகே உள்ள திரிலோக்கி திருத்தலம்  பரசுராமரால் வழிபடப்பட்ட பெருமை பெற்றது. அதனால்  அத்தலம் பரசுராமேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.*   வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரைக் குழகர் கோயிலில் உள்ள ஈசன் பலராமரால் வழிபடப்பட்டவர்.*   காஞ்சிபுரத்தில் கண்ணன் வழிபட்ட சிவத்தலம் கண்ணேசர் எனும் பெயரில் அமைந்துள்ளது. *   கண்ணபிரான் ஈசனை வழிபட்ட தலம் ரைவதகிரியில்  உள்ளது. இது வடுககிரி என்றும் அழைக்கப்படுகிறது. கண்ணன் வில்வ இலைகளால்  ஈசனை அர்ச்சித்ததால் அந்த ஈசன் வில்வேஸ்வரர் என்றானார்.*   திருமால் சக்ராயுதம் வேண்டி   ஈசனை நோக்கி தவம் செய்த தலம் காஞ்சிபுரம் அருகே உள்ள திருமாற்பேறு.

*   திருவானைக்காவலில் ராமர் தீர்த்தம் அமைத்து வழிபட்டார். அவர் நிறுவிய லிங்கம்  விஷ்ணுவேஸ்வரர் ஆலயம் எனப் போற்றப்படுகிறது. *   திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் பெரிய ரங்கநாதரை கோவிந்தராஜர் எனும் பெயரில் தலைமாட்டில் உள்ள சிவலிங்கமூர்த்தியை பூஜை புரியும் நிலையில் தரிசிக்கலாம்.

*   மன்னார்குடிக்கு அருகில் உள்ள திருராமேஸ்வரத்தில் ராமர் பூஜித்த ராமலிங்கத்தை -யும் சீதை பூஜித்த சீதேஸ்வரரையும் தரிசிக்கலாம். தசாவதாரங்களில் ராமாவதாரத்திற்கே  மனைவி பெயரில் லிங்கம் நிறுவிய பெருமை கிட்டியது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஐந்து தலை ஆதிசேஷனின் மீது அனந்தசயனம் செய்யும் கோலம்தான்  திருமாலுக்கு. ஆனால் சிதம்பரம் திருக்கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள் ஏழு தலை  ஆதிசேஷனின் மேல் சயனித்திருக்கிறார்.  தர்மபுரி கோட்டைக் கோயிலில்  முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் மயில் மீது,
 ஐயப்பனைப் போல் குந்திட்டு அமர்ந்திருக்கிறார். காவேரிப்பாக்கம் சிவாலயத்தில் தட்சிணாமூர்த்தி ஜடாமுடியுடனும் அட்சமாலை, அக்னி ஏந்தி காலடியில் உள்ள மானுக்கு உபதேசம் செய்யும் நிலையில் தரிசனம் தருகிறார். 


ஆற்காடு அருகே, திருவலம் ஈசன் ஆலயத்தில் ஈசனின் கருவறை முன் ஜனக முனிவரின் திருவோடு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.பழவேற்காடு சின்னக்காவணம் சதுர்வேதீஸ்வரர் ஆலய அம்பிகை பாசம், அங்குசம் ஏந்தாமல் மேல் இருகரங்களில் தாமரை மலர்களை ஏந்தி, கீழிரு கரங்களில் அபய-வரதம் தரித்து மகாலட்சுமி அம்சமாய் விளங்குகிறாள்.


சிங்கப்பெருமாள்கோயில் ஸ்ரீபெரும்புதூர் பாதையில் உள்ள ஆப்பூர் மலையில் அருளும் பிரசன்ன வெங்கடாஜலபதி த்ரிபங்க நிலையில் மகாலட்சுமியை தன்னுள் ஏற்று அருள்கிறார். அதனால் இவருக்கு பட்டுப்புடவையே சார்த்தப்படுகிறது. 


 வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கலையழகு கொஞ்சும் திருமண மண்டபத்தில் குழந்தை வடிவில் தவழும் அற்புத விநாயகரை தரிசிக்கலாம்.வரகூரில் லட்சுமி ஹயக்ரீவர் தோற்றத்தில், திருமகளை மடியில் இருத்தி தழுவிய  நிலையில் லட்சுமி நாராயணர் காட்சியளிக்கிறார். திருச்சி, லால்குடி அருகில், அன்பிலில் உள்ள சிவதலத்தில் அப்பர் ஞானசம்பந்தர் பாடல்களை செவி சாய்த்துக் கேட்ட கோலத்தில்  செவிசாய்த்த விநாயகராகக் காணலாம். பூம்புகார் அருகே, சாயாவனம் தலத்தில்  வில்லேந்திய வேலவனைக் கண் குளிரக் கண்டு வணங்கலாம். திருவாரூர் தியாகராஜர் ஆலய முதல் பிராகாரத்தில் ஐந்து தலை நாகம் படுத்திருக்க அதன் நடுவில் விரிந்த தாமரை  மலரில் நடனமாடும் விநாயகரை தரிசிக்கலாம்.

யோக சாஸ்திரப்படி குண்டலினி விநாயகராக இவர் போற்றப்படுகிறார். திருநெல்வேலி, தென்காசி அருகில், இலத்தூர் ஆதீனம் காத்த ஐயனார் ஆலயத்தில் எமனையும் அவன்  மனைவி எமியையும் சிலை வடிவில் காணலாம்.திருவாரூர் திருமஞ்சன வீதியில் சிம்மத்தின் மேல் அமர்ந்து தலையில் சந்திர கலை  தரித்து மும்மூர்த்தி அம்சத்துடன் ஜெயதுர்க்காவை தரிசிக்கலாம். ராமபிரான் வழிபட்ட  துர்க்கை இவள்.

திருவண்ணாமலையில் சம்பந்தாசுரனை அழித்து, அவன் ரத்தத்தைப் பூசிக்கொண்ட   செந்தூர விநாயகருக்கு, வருடத்தில் நான்கு முறை செந்தூரம்  சாத்தப்படுகிறது.

அம்பிகை உபாசகரான உப்புராயர் உருவாக்கிய உப்பு லிங்கத்தை இப்போதும்  ராமேஸ்வரம்ராமநாதர் சந்நதிக்கு பின்புறம் தரிசிக்கலாம்.  உப்பின்  சொரசொரப்பை அந்த லிங்கம் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் சீன நாட்டுப் பாணியில் கட்டப்பட்ட ஒரே கோவில் நாகர்கோவிலுக்கு  அருகிலுள்ள 'திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில்'தான். இந்தக் கோவில்  மூலவரின் திருவுருவச் சிலை மருந்துகளின் கூட்டுக் கலவையினால் செய்யப்பட்டது  என்பது வேறு எங்கும் இல்லாத ஒரு சிறப்பு.

மதுரையில் இருந்து 37 கி.மீ. தூரத்திலுள்ள 'நத்தம் கைலாசநாதர் கோவி'லில் நவக்கிரகங்கள் நின்ற நிலையிலேயே அமைக்கப்படாமல், அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது. இப்படி வேறு எங்கும் இல்லை. தென் மாவட்டத்தில் 'செவ்வாய் தோஷ நிவர்த்திக் கோவில்' இது ஒன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் மாவட்டம், திருமங்கலம் ஆலயத்து பள்ளி கொண்ட பெருமாள் ஸ்ரீரங்கம்  ரங்கநாதரை விட உருவில் பெரியவர். இவரது ஒரு திருப்பாதத்தை ஸ்ரீதேவி வருடிவிட,  மற்ற திருப்பாதத்தை கருடாழ்வார் தாங்கி சேவை புரிகிறார்.

விநாயகருக்கும் சுயம்பு மூர்த்திகள் உண்டு. மருதமலை தான்தோன்றி விநாயகர்,  திருநாரையூர் மற்றும் திருநெல்வேலியில் சுயம்பு மூர்த்திகள் உள்ளது.மேலக்கோட்டை வழியில் நாகமங்கலம் அருகே பிண்டிகநவிலே எனும் கிராமத்தில் சென்னகேசவப் பெருமாள் ஆலயத்தில் சந்தன மரத்தால் உருவாக்கப்பட்ட கருட பகவானை  தரிசிக்கலாம். இவரது கண்களில் சாளக்கிராமக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது அற்புதமான  அமைப்பாகும்.

சென்னை அடையாரிலுள்ள மத்திய கைலாசம் கோயிலில் பாதி விநாயகரா கவும், பாதி  அனுமனாகவும் கலந்த கலவை யாக ஆதியந்தா பிரபு என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

பொதுவாக அனுமன் ஆலயங்களில் வானர முகத்துடன் ஆஞ்சநேயராக அருள் பாலிப்பதுதான் வழக்கம். ஆனால், சேலம் மாவட்டம் ஆத்தூரில்,850 ஆண்டுகள் பழமை   வாய்ந்த ஆலயத்தில் குபேர திசையான வடக்கு திசை நோக்கி வராக முகத்துடன் அவர் எழுந்தருளியிருக்கிறார். வைணவ ஆலயத்தில் பரிவார மூர்த்தியாக விளங்கும்   அனுமன் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகத் திகழ்வதும் கூடுதல் சிறப்பு.


No comments:

Post a Comment