எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, February 27, 2017

ஐந்தலை பொதிகை

வேலூர் மாவட்டம், சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்கும், வள்ளிமலை கோவிலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது விண்ணம்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது.
இத்திருகோயிலில் உத்திராயண காலத்தில் பங்குனி 23-ந் முதல் 29-ந் தேதி வரை (ஏப்ரல் 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை) ஒரு வார காலம் காலை 6.15 மணி முதல் 6.45 மணி வரை இங்குள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவது சிறப்பானதொரு அதிசய நிகழ்வாக நடைபெறுகிறது.
முதலில் சிவலிங்கத்தின் மேல்புறத்தில் விழுந்த ஒளி பின்னர் படிப்படியாக சிவலிங்கத்தின் மையப்பகுதியை அடைகிறது. பின்னர் கீழே இறங்கி மறைந்து விடுகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் 30 நிமிடங்களில் நடந்து முடிந்து விடுகிறது.
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு விண்ணம்பள்ளி செல்கின்ற அரசு பஸ்சில் சென்று விண்ணம்பள்ளியில்இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றால் இந்த அதிசய நிகழ்வை காணலாம்

------------------------------------------------------------------------------------------------------------------
மதங்கீச்வர பெருமான் , காஞ்சிபுரம்(பேருந்து நிலையம் அருகில் )மிகப்பெரிய சோடச லிங்கமாக அருள்புரிகிறார்.இத்திருகோயில் தொல்பொருள் இலாகா வசம் உள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------
                                      பூமியில் கண்ட சொர்க்க லோகம் - பொதிகை மலை 
         (ஏக பொதிகை, ஐந்தலை பொதிகை, நாக பொதிகை)


1.கேட்டவரம்பாளையம்2. பால் வார்த்து வென்றான் 3. வாழக் குழி  . 4.வீர பயங்கரம்
5. கண்ணாமூச்சி 6. வட்ட முத்தம்பட்டி 7. கரையேறவிட்ட குப்பம் 8. எழுத்தாணிவயல்
9. நல்லமரம் 10. திருமதி குன்னம் 11. திருமாணிக்கம் 12. எப்போதும் வென்றான்
13. குதிரை மொழி 14. கானாது கண்டான் 
15. கொழுக்கட்டை குடி 16. நாயகனைப் பிரியாள்      17. அக்கரை கொடிவேர்18. மூவிருந்தாளி19. பிச்சைத்தலைவன்பட்டி20. தலையில்லாப் பெரும்பாக்கம்21. கண் கொடுத்த வனிதம்  22. அரிய கோஷ்டி23. சேலை24. உலகம்25. எருமை வெட்டிபாளையம்

 All these villages has got lot of historic secrets...!!! தெய்வத் தமிழ் திருநாட்டின் ஒவ்வொரு ஊருக்கான பெயர்களும்… அருந்தெய்வத்துவ அதிமஹா உன்னத சிறப்பை பெற்று விளங்குகின்றன..

----------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்ரீ முக ஆண்டு. (1874) தை மாதம் 19 ஆம் நாள் வெள்ளிக் கிழமை. ஜனவரி மாதம் முப்பதாம் தேதி. இரவு மணி பனிரெண்டு. வள்ளலார் அன்பர்களை அழைத்தார். “நான் உள்ளே பத்து பதினைந்து தினங்கள் இருக்கப் போகிறேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருக்கால் பார்க்க நேர்ந்து பார்த்தால், யாருக்கும் தோன்றாது வெறும் வீடாகத் தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார்” என்று அறிவித்தார். பின்…

” பிச்சுலக மெச்சப் பிதற்றுகின்ற பேதையனேன்
இச்சையெலாம் எய்த விசைத்தருளிச் செய்தனையே
அச்சமெலாந் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
நிச்சலும் பேரானந்த நித்திரை செய்கின்றேனே!”

- என்று பாடிக்கொண்டே, சித்தி வளாகத் திருமாளிகைக்குள் நுழைந்தார். கதவைச் சாத்திக் கொண்டார். அதன் பின் அன்பர்கள் அனைவரும் அடிகளாரின் உத்தரவுப்படி அறைக் கதவைச் சில நாட்கள் திறக்காமலே இருந்தனர். பின் அரசாங்கத்தின் உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியாளர், தாசில்தார், காவல் துறைத் தலைவர் ஆகியோர் பூட்டியிருந்த கதவைத் திறக்க ஏற்பாடு செய்தனர். உள்ளே வெறும் வெற்றிடம் மட்டுமே இருந்தது. வள்ளலாரைக் காணவில்லை. பூட்டிய கதவு பூட்டிய படி இருக்க வள்ளலார் மாயமாக மறைந்து விட்டார்.
----------------------------------------------------------------------------------------------------
யுகங்கள் பல கண்ட விளம்பூர் யுகம் கண்ட ஈசன் (வேத விளம்பீசன் ). கள்ள குறிச்சி தாலூகா விழுப்புரம் மாவட்டத்தில் விளம்பூர் உள்ளது..,
-- -------------------------------------------------------------------------------------------------------------------------

சிவலிங்க திருமேனி, வெளி பிரகாரம் , திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் திருகோயில் , விழுப்புரம் மாவட்டம் — https://www.facebook.com/durga.lakshmi.98?fref=photo


வியாசரின் மகனான சுகப்பிரும்ம ரிஷி பூஜித்த சிவ லிங்கங்கள் மிகக் குறைவு. அவற்றில் இரண்டு லிங்கங்கள், தமிழகத்தில் உள்ள இரண்டு திருத் தலங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒரு திருத்தலம் சேலத்திலும், மற்றொன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள களத்தூரிலும் உள்ளது.

சேலம் மாநகரில் உள்ள திருக்கோயில் மிகப் புகழோடு விளங்குகிறது. அங்கே, ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீசுகவனேஸ்வரர். களத்தூரில் குடிகொண்ட ஈசனின் திருநாமம் ஸ்ரீசுகநாதேஸ்வரர்.கருவறையில், ஸ்ரீசுகநாதேஸ்வரரின் லிங்கத் திருமேனி கொள்ளை அழகு! பாணம் உயர்ந்தும், வட்ட வடிவ ஆவுடையாராகவும் காணப்படும் திருமேனியைத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்.சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் ஆவலூரில் இருந்து இடது பக்கம் திரும்பி, அங்கிருந்து சுமார் 4 கி.மீ. சென்றால் களத்தூரை அடையலாம்.பூக்கள் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் கோயிலுக்கு அருகில் கிடைக்க வாய்ப்புகள் குறைவு. எனவே, உங்கள் ஊரில் இருந்தே அவற்றை வாங்கிச் செல்வது உத்தமம்.

அமிர்தாம்பிகை உடனாய கைலாசநாதர் ஆலயம்

கௌதம மகரிஷி பூசித்த இறைவன் கைலாசநாதர் சுமார் 5 அடிஉயர லிங்க திருமேநியராக கருவறையில்

கம்பீரமாக காட்சியளிக்கிறார்.இங்கு மஹா விஷ்ணு கெளதமருக்கு காட்சி கொடுத்தால் 'விஷ்ணுபுரம்' என பெயர் பெற்றது.தேவார பாடல் பெற்ற 'திரு வீழி மிழலை " வெகு அருகில் உள்ள தலம் இது.மற்றொரு சிவாலயமும் இங்கு உண்டு.விஷ்ணுபுரம் குடந்தை---பூந்தோட்டம் சாலையில் எரவாஞ்சேரி அடுத்து உள்ளதுஅன்பர்களே திருவீழிமிழலை செல்பவர்கள் தவறாமல் கண்டு வணங்குங்கள்.கைலாசநாதரின் அருள்பெறுங்கள் .காண்பதற்கு அரிய சிவாலயம் இதுதஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் மனைவியும், தன்னை

தாய்க்கு தாயாக வளர்த்த தன சிற்றன்னையுமான பஞ்சவன் மாதேவியின் நினைவாக முதலாம் ராஜேந்திர சோழன், நம் தமிழன்,கட்டிய கோயில் ஒன்று கேட்பாரற்று கிடக்கிறது!


இது தமிழர்களாகிய நமக்கு பெருமை சேர்க்ககூடியது அல்ல.அதுவும் கோயில் நகரமாம் குடந்தை நகரின் மையப்பகுதியில் பட்டீஸ்வரம் அருகில் சோழன் மாளிகை எனப்படும் இடத்தில் தான் இந்த பள்ளிப்படை ஆலயம் உள்ளது.இங்கு தான் ராஜராஜ சோழன் தன வாழ்நாளில்கடைசி நாட்களை கழித்ததாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.தற்போது இந்த ஆலயத்தை ராமசாமி கோயில் என்று குறிப்பிடுகிறார்கள்.


சிதிலமடைந்த ஆலயம் செப்பனிடப்படுள்ளது என்றாலும் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது பக்தர்கள் வருகை இன்மையால். வயதான் பெரியவர் ஒருவர் ஆலயத்தை கவனித்து வருவதாக கேள்வி.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

புஷ்டி நரசிம்மர் திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது உசிலம்பட்டி கிராமம். இங்குள்ளது உசிலை வனநாதர் ஆலயம். இறைவி சொர்ணரேகா. உசிலை மரங்கள் நிறைந்த தோப்பில் அருள்பாலித்து வரும் இந்த ஆலய இறைவனின் மேனி உளி படாத திருமேனி. இறைவனின் திருமேனியில் பல வியக்கத்தக்க அதிசயங்கள் உள்ளன. இறைவனின் தலையில் இடதுபக்கம் சந்திரபிறை போன்ற பள்ளம் உள்ளது. தலைப்பகுதியின் பின்பக்கம் சடை போன்ற வரிகள் உள்ளன. இறைவனின் நெற்றியில் விபூதி பட்டை போல் மூன்று பட்டையான கோடுகள் உள்ளன. இறைவனின் இடையைச் சுற்றி தங்கரேகை போன்ற அமைப்பு உள்ளது. இறைவனின் இடதுபுறம் அம்பாளின் சின்னமான திரிசூலம் போன்ற அமைப்பும் உள்ளது. இப்படி அமைப்பு உள்ள லிங்கத் திருமேனி வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

தேவம்பாடி வலசு தர்ப்பண கிராமம்


கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல வைணவத் திருக்கோயில்கள் உள்ளனஅவற்றுள் மக்களால் அதிகம்அறியப்படாத பழமையான கோயிலான சேதுக்கரை சின்னக்கோயில் என்றழைக்கப்படும் ஏகாந்தஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் வெளியே தெரியப்படாமல் மரங்களாலும்புதர்களாலும் சிறைப்பிடிக்கப்பட்டுமூலஸ்தான கோபுரக்கலசங்கள்கருவறைமுன்மண்டபம்அர்த்தமண்டபம்தாங்கி நிற்கும் சிற்பத்தூண்கள்பராமரிப்பின்றி கடும் மழைவெயில்இயற்கை சீற்றங்கள் இவற்றில் இருந்து தெய்வாதீனமாக நிற்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றது.
ராமநாதபுரத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள திருப்புல்லாணியில் இருந்து சேதுக்கரை செல்லும் வழியில்3வது கி.மீட்டரில் பெரியதொரு ஆலமரத்தின் எதிரே கருவேல மரங்களால் மறைக்கப்பட்ட நிலையில்அவ்வழியே கடந்து செல்வோருக்கு புலப்படாத நிலையில் உள்ளது சின்னக்கோயில் என அழைக்கப்படும்ஏகாந்த ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில். "சேது ஹிமாச்சலா என்று வேதங்களில் இந்தியாவின் கடைசி தெற்குப்பகுதியாக சேதுக்கரை கூறப்படுகிறதுஇங்கிருந்துதான் இலங்கைக்கு கடலில் பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறதுசேதுக்கரை கடற்கரையில்தான் ராவணனின் தம்பி விபீஷணன் ராமபிரானிடம் சரணடைந்தார்.


கோயிலின் சிறப்பு: தாயார் சன்னதி இல்லாமல் பெருமாள் மட்டும் அபய ஹஸ்தத்துடன் காட்சியளிக்கிறார்.சன்னதிக்கு வெளியே 80 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெண்பளிங்கு சிலையில் மகாவிஷ்ணுவின் வலதுபுற சக்கரத்திற்கு பதிலாக சங்கும் இடமாறி உள்ளதுசிலையை சுற்றிலும் பார்டர் போல்பெருமாளின் பத்து அவதாரங்கள் செதுக்கப்பட்டுள்ளனராமர் இங்கு வந்த போது தமிழ்முனிவர் அகத்தியர் ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் வழங்கியதாக கூறப்படுகிறதுஇக்கோயிலில் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் உச்சரித்து வழங்கப்படும் துளசி தீர்த்தம்கடுமையான காய்ச்சல்தலைவலியினைகுணப்படுத்துவதாக நம்பப்படுகிறது என்றார்.ராமநாதபுரம் சமஸ்தானம்தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயிலில்

300 ஆண்டுகளுக்கு பின் தற்போது கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் தை மாதத்தில் தொடங்கி பூர்வாங்க பணிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்இதனை ரெகுநாதபட்டர் ஒருகால பூஜை செய்து பராமரித்து வருகிறார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி எனும் ஊரின் வடக்கே ஐந்து கி.மீ. தொலைவில் உள்ளது வெங்கட்டாம்பேட்டை.  


சூரனை வீழ்த்திவிட்டு, அந்த உக்கிரம் தணியாமல் கடும் கோபத்துடன் இருந்தாராம் முருகக் கடவுள், தம்பியின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக, முருகப்பெருமானைப் போலவே ஆறுமுகங்களைக் காட்டியபடி எதிரே நின்றாராம் விநாயகர். அதைக் கண்டு சிரித்ததில் கந்தனின் கடும் கோபம் முழுவதும் காணாமல் போனது என்றொரு கதை உண்டு. எனவே இங்கு ஆறுமுக விநாயகராக அருட்காட்சி தருகிறார். சிறிய ஆலயம்தான் என்றாலும் ஆறுமுகத்துடன் காட்சி தரும் விநாயகரைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்தபடி இருக்கிற ஆலயம் இது. ஆறுமுக விநாயகரை வணங்கினால், சகல ஞானங்களையும் யோகங்களையும் பெறலாம். சண்முகா நதியில் நீராடிவிட்டு, சங்கடஹர சதுர்த்தி நாளில் வணங்குவது கூடுதல் சிறப்பையும் பலனையும் தரும். ஊற வைத்த பச்சரிசியுடன் வெல்லம், மிளகு, ஜீரகம் மற்றும் நல்லெண்ணெய் கலந்து படைத்தால், வியாபாரம் விருத்தியாகும். கல்வியில் மேன்மை பெறலாம். மூலவர் ஆறுமுக விநாயகர், தவிர சுந்தர விநாயகரும், ஆண்டித் திருக்கோலத்தில் முருகப்பெருமானும், காசிவிஸ்வநாதர் மற்றும் காளியம்மனும் அருள்பாலிக்கின்றனர். கோயிலுக்குச் சற்றுத் தள்ளி, தோகையடி விநாயகர் கோயில் உள்ளது. இங்கே புலிப்பாணி சித்தரும் போகரும் காட்சி தருகின்றனர்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ சக்ரம் (சுயம்பு ) !!!!
அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்குல் உள்ள இடம்தான் மிக்கி பேசின் சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம்.பில் மில்லர் என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை குட்டி விமானம் மூலம் கடந்து செல்கையில் 13.3 mile சதுர அளவுக்கு வரி வரியாக வரைபடம் போன்ற ஒன்றை கண்டார் ஏதோ நாட்டின் வரை படம் என்று நினைத்து அதை பற்றி ஆராய்ந்தவருக்கு பயங்கர அதிர்ச்சி காரணம் அது நம் இந்து மதத்தில் காலம் காலமாக வழிபடும் சிவ விஷ்ணு பராசக்தியை குறிக்கும் ஸ்ரீசக்கரம் தான் அவர் பார்த்தது தொடர்ந்து 30 நிமிடங்கள் வட்டமிட்ட பின்னே தான் அவரால் முழு சக்கரத்தையும் 1 தடவை சுற்ற முடிந்தது. இதை ப் போலவே வரைய அவர்களால் எவ்வளவு முயன்றும் (1990 to 2014) இன்று வரை முடியவில்லை காரணம் நாலாயிரம் அடி மேலே பறந்து பார்த்தால் தான் ஸ்ரீசக்கரம் என்றே தெரியும். UFO ஆராய்ச்சியாளர்கள் டான் நியுமேன்,ஆலன் டெக்ளர் இருவரும் இந்த இடத்தை செப் 15 ல் ஆய்வு செய்தனர் அந்த ஆய்வில் இந்த இடத்தை சுற்றியுள்ள எந்த பகுதியிலும் மனித கால் தடமோ வாகன வந்து சென்ற தடமோ இல்லை என்றும் மனிதனால் இது சாத்தியமே இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.,

-------------------------------------------------------------------------

அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.

ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!

அவைகளில் சில:

1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர்சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளது.

ஸ்ரீ அகஸ்திய விஜயம் தான் குரு காட்டும் பாதை 

No comments:

Post a Comment